ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai      »      2014      »      Jun 2014      »      அண்ணலாரின்குதிரைகள்  


அண்ணலாரின் குதிரைகள் !

உமர்கையாம் யாஸீனிய்(1) ஸக்பு (2) ஸஹாபா ( ) ஹம்ஜா  (3) முர்தாஜிஸ்  (4) லஹீஃப்

(1) ஸக்பு :

ஸக்பு என்றால் ஓடும் நீர் என்று பொருள்
. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்தக் குதிரையை பனூ பஸாராகுலத்தார் ஒருவரிடமிருந்து 10 வெள்ளிக்காசு கொடுத்து வாங்கினார்கள் . உஹதுப் போரில் இந்தக் குதிரையில்தான் அமர்ந்துபோர் புரிந்தார்கள் .

(2) ஸஹாபா ( ) ஹம்ஜா :

ஸஹாபா என்றஇக்குதிரையை சிலர் ஹம்ஜா என்றழைத்தனர் . இந்தக் குதிரை பந்தயம்ஒன்றில் வெற்றி பெற்றது . இதைப் பார்த்த நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார்கள் . இவையல்லாமல் முர்தாஜிஸ் ( பொருள் : கணைப்போன் ) மற்றும் லஹீஃப் என்ற குதிரைகளும் நபியவர்களிடம்இருந்தன .


அண்ணலாரின் கோவேறு கழுதைகள்

(1) அஃபீர்   (2) யஃபூர்   (3) துல்துல்    (4) புராக்


(1) அஃபீர் : இந்த கோவேறு கழுதை நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்    அவர்களின் மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் குழியில் விழுந்து தன்னுயிரை நபிகளாருக்குஅர்ப்பணம் செய்தது . மாஷா அல்லாஹ் என்னே ! நேசம் !

(2) யஃபூர் : இந்த கோவேறு கழுதை கைபர் போரில் நபிகளாருக்குகனீமத்தாக கிடைத்தது . இதை தமது வாகனமாக ஆக்கிக்கொண்டார்கள் . இதற்கு யஃபூர் எனப் பெயரிட்டார்கள் . ஸஹாபாக்களில் யாரையாவது நபியவர்கள் அழைக்கநாடினால் இந்த கோவேறு கழுதையிடம் சொல்லி அனுப்புவார்கள் . அது அந்த நபித் தோழரின் வீட்டுக்குச் சென்றுதமது தலையால் ஸஹாபி வீட்டுக் கதவை முட்டும் . அந்த ஸஹாபி நபியவர்களின் கழுதையைப் பார்த்ததும் நபியவர்கள் தம்மை அழைக்கிறார்கள்என்பதனைத் தெரிந்து கொண்டு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வருவார்கள் . பெருமானர் அவர்களின் மறைவின் போது அண்ணலாரின்மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுது அழுது கண்ணீர் வடித்தவாறு கிணற்றில் விழுந்துதன் உயிரை அண்ணலாருக்கு அர்ப்பணித்தது .   மாஷா அல்லாஹ் என்னே ! நேசம் !                                                                           

( நூல் : ஸரஹுஷ் ஷிஃபா 1 / 643)


துல்துல் : அல்யஹ் அரசர் நபியவர்களுக்கு வெள்ளை கோவேறுகழுதையை அன்பளிப்பாகக் கொடுத்தார் . இந்த கழுதைக்கு துல்துல்எனப் பெயரிட்டு இந்த கோவேறு கழுதையை ஸையிதுனா அலீ ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்   அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்கள் .     

( நூல் : பைளுல் பாரி 3/433)


புராக் :    இந்த கோவேறு கழுதை ஜிப்ரயீல் ( அலை ) அவர்கள்  மூலம்   மிஃராஜின்
(விண்ணுலகப் பயணத்தின்) போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்    அவர்களுக்கு வழங்கப்பட்டது . இந்த வாகனத்தின் மூலம் மஸ்ஜிதுல் ஹராமில்இருந்து மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் செல்லப்பட்டார்கள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் .