ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai      »      2014      »      Jun 2014      »      கொழுப்பைக்குறைக்கும் பயறு 


கொழுப்பைக்குறைக்கும் பயறு !



உடலுக்கு சக்தியும் வலுவும் தரும் உணவுப் பொருட்களில் தானியங்களுக்குத் தனியிடம் உண்டு . ஒவ்வொரு தானியத்துக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது . அவற்றைத் தெரிந்து கொண்டு சாப்பிட்டு உடலைவலுப்படுத்தலாம் .

சோளம் : உடலுக்கு உறுதியை அளிக்கும் . உடல் பருமனைக் குறைக்கும் . வயிற்றுப்புண் , வாய் துர்நாற்றத்தைப் போக்கும் .

கோதுமை : நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்த உணவு . மலச்சிக்கல் உண்டாகாது . உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும் . உடல் வறட்சியைப் போக்கும் . குடல் புண்ணை ஆற்றும் .

வரகு : உடல் எடையைக் குறைக்கும் . மாதவிடாய் கோளாறுகளைத் தடுக்கும் .

கொண்டைக்கடலை : பக்கவாதநோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது .

சோயாபீன்ஸ் : அனைத்து வைட்டமின் வகைகளும் உள்ளன . இவை இதயம் , கல்லீரல் செயல்பாடுகளில் முக்கியப் பங்குவகிக்கின்றன . அதிக புரோட்டின் , நார்ச்சத்து உள்ளதால் சோர்வடைந்த இதயத்திற்குசோயாவின் பாதுகாப்பு அபரிமிதமானது . இயற்கையான ஆண்டி ஆக்ஸ்சிடென்ட்நிறைந்தது . அதிக மினரல்கள் உள்ளன . உறுதியான எலும்புகள் உருவாகும் . மெனோபாஸ் பிரச்சினைகளைத் தடுக்கும் . உடம்பில் கொழுப்பின் அளவைக் குறைத்து இரத்தக்குழாய்களுக்குள் அடைப்பு ஏற்படாமல் தடுக்கும் .

பச்சைப்பயறு : முளைக்கட்டிய பயிறு உடல் எடையைக் குறைக்கும் . நோயாளிகளுக்கும் உகந்தது .

உளுந்து : ஆண்மையைப் பெருக்கும் . பெண்களின் இடுப்புக்கு வலிமை கொடுக்கும் . மாதவிலக்கைச் சீராக்கும் .

கொள்ளு : கொழுப்பைக் கரைப்பதில் முதலிடம் , உடலில் இருக்கும் தேவையற்ற தண்ணீரை எடுத்துவிடும் . இரத்தத்தைச் சுத்திகரிப்பதுடன் உடலில்உள்ள நச்சுத்தன்மையை நீக்கிவிடும் . வளரும் குழந்தைகள் , உடற்பயிற்சி செய்வோருக்கு மிகவும் உகந்தது . மூலநோய்க்கும் , ரூமாட்டிசம் பிரச்சினைகளுக்கும் , காய்ச்சலைக் கட்டுபடுத்த , இருமல் மற்றும் சளியை விரட்ட என கொள்ளுகுணமாக்கும் பட்டியல் நீள்கிறது . வயிற்றுப்புண்ணுக்கும் , சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும் அதிகரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது . சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக்கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கலாம் .