ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai     »      2014      »      Jun 2014      »      உமர் ( ரலி ) புராணம்


உமர் ( ரலி ) புராணம்

ஆசிரியர்
ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா
அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்


முதலாவது உதய காண்டம்இல்லகி நீயேயீசனு ( ம் ) நீயே 
அல்லல்க ணீக்கி யாள்பவ னீயே 
நல்லவர் நாட்டம் நல்குவ னீயே 
எல்லைய தில்லா வேகனு ( ம் ) நீயே .


  

கொண்டுகூட்டு :

இல்லகி நீயே . ஈசனும் நீயே . அல்லல்கள் நீக்கி ஆள்பவன் நீயே . நல்லவர் நாட்டம் நல்குவன் நீயே . எல்லை அது இல்லா ஏகனும் நீயே .  


பொருள் :

நமக்கு அடைக்கலமாக இருப்பனும் நீயேதான் . எப்பொருட்கும் இறைவனும் நீயேதான் . எப்பொருட்கும் இறைவனும் நீயே தான் . துன்பங்களை நீக்கி எம்மை ஆண்டு வருபவனும்நீயே தான் . நல்லவர்களுடையவிருப்பங்க ளெல்லா வற்றையும் நல்குபவனும் நீயேயானாய் . உனக்கோ மேல் , கீழ் , இடம் , வலம் முதலான எத்தகைய   எல்லைகளும் இல்லாத தனியனும் நீயே .


குறிப்பு :

இல்லகி : அடைக்கலம் . ஈசன் : எப்பொருட்கும் இறைவன் . அல்லல் : துன்பம் .   நல்குதல் : ஈதல் .