ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai      »      2014      »      Jun 2014      »      8 ஆவது பட்டமளிப்பு விழா


மதுரஸத்துல் ஹஸனைன்ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரி

8 ஆவது பட்டமளிப்பு விழா - புதிய கட்டிடத் திறப்பு விழா


மதுரஸதுல் ஹஸனைன் ஃபீஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரியின் 8 - ஆவது பட்டமளிப்பு விழா , சென்ற 28.05.2014 ( ஞாயிற்றுக்கிழமை ) காலை 11 மணியளவில் , நமதுமதுரஸா வளாகத்தில் - சங்கைக்குரிய குத்புல் ஃபரீத் ஜமாலிய்யா அஸ்ஸய்யிது யாஸீன்மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹா ´ மிய் ( ரலி ) அவர்களின்நினைவரங்கில் அமைக்கப்பட்டிருந்த சிங்கார மேடையில் , சங்கைக்குரியநமது ஷைகு நாயகம் குத்புஸ்ஸமான் ­ ஷம்ஷுல்வுஜுது ஜமாலிய்யா அஸ்ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா நாயகம் அவர்களின் தலைமையில் சீரும்சிறப்புமாக நடைபெற்றது . மதுரஸா முதல்வர் T. மகதும் ஜான் ஹக்கிய்யுல்காதிரிய்   வரவேற்புரையாற்றி , விழாவைத்தொகுத்து வழங்கினார் .


சங்கைக்குரிய ஷைகு நாயகம்அவர்கள் தங்கள் அருட்கரங்களால் ,S. உமர் கையாம் ஆலிம் யாஸீனிய் , மற்றும்மெளலவி M. முஹம்மது ஆஷித் ஆலிம் யாஸீனிய் , மெளலவி M. பைசல் முஹம்மது ஆலிம் யாஸீனிய் , மெளலவி A. முஹம்மது ஹாலித் ஆலிம் யாஸீனிய் , மெளலவி M. அப்பாஸ் மந்திரி ஆலிம் யாஸீனிய் , மெளலவி S. சையது இப்றாஹீம் ஆலிம் யாஸீனிய் , மெளலவி M. முஹம்மது அன்சர் ஆலிம் யாஸீனிய் , மெளலவி M. முஹம்மது காசிம் ஆலிம் யாஸீனிய் ஆகிய 8 மாணவர்களுக்குமெளலவி - ஆலிம் - யாஸீனிய் ஸனது ( பட்டம் ) வழங்கிஅருளுரை வழங்கினார்கள் .


தலைமை கலீபா . H.M. ஹபீபுல்லாஹ்ஹக்கிய்யுல் காதிரிய் , கலீபா . முஹம்மது காலித் ஹக்கிய்யுல் காதிரிய், கலீபாஆலிம்புலவர் S. ஹுஸைன் முஹம்மது ஆலிம் ஹக்கிய்யுல் காதிரிய்யுல் மன்பஈ, கலீபா. A. முஹம்மதுகாசிம் ஹக்கிய்யுல் காதிரிய் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் .


பட்டமளிப்பு விழாவினைத்தொடர்ந்து ,செய்யிதா சகர்வான் கண்ணே வளாகத்தில் மலேசியா ஆத்ம சகோதரர்டத்தோ . சாதிக் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்களின் முழுப் பங்களிப்பின்மூலம் உருவான 4 வது கட்டடத்தை சங்கைக்குரிய ஷைகு நாயகமவர்கள் தங்கள் அருட்கரங்களால்திறந்து வைத்தார்கள் . தற்போது மதுரஸாவில் அன்னை செய்யிதா சகர்வான் கண்ணே வளாகம் 4 கட்டடங்களுடன்சதுர - வடிவில் அலங்காரமாகக் காட்சியளித்து , காண்போரின் கண்ணுக்கும் கல்புக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது . நமது சங்கைக்குரிய ஷைகு நாயகமவர்களும் இது குறித்து தங்கள் பேரானந்தத்தையும் பெருமகிழ்ச்சியையும் பன்முறை வெளிப்படுத்தினார்கள்விழாவில் தமிழகமெங்குமிருந்தும் திரளானஆத்ம சகோதரர்கள் , அஹ்பாபுகள் , அன்பர்கள் , ஸனதுமாணவர்களின் பெற்றோர்கள் , உறவினர்கள் , நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் . விழாநிறைவில் அனைவருக்கும் சிறப்பான உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன


( தகவல் : . நை . மு . அன்சாரிஹக்கிய்யுல் காதிரிய் , திருச்சி )