ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai     »      2014      »      Jun 2014      »      தலையங்கம்


தலையங்கம்


முனேற்றப் பாதையில்   

 
 

மதுரஸாக்களை   நவீனப்படுத்த அரசு கவனம்   கொண்டுள்ளது   என ஜனாதிபதி   பாராளுமன்றத்தில்   தமது   உரையில்   குறிப்பிட்டுள்ளார்    

பாரதீய   ஜனதா   அரசு   நவீனம்   என்பதற்கு தங்கள் மனதில் என்ன பொருள் கொண்டுள்ளார்களோ   அதை நாம்   அறியோம் !   ஆனால்   மதுரஸாக்கள்   இஸ்லாமிய அச்சிலிருந்து   விலகாமல்   எப்படி நவீனமாக இருக்க வேண்டும் என்பதற்கு முன் மாதிரியாக   சங்கைமிகு   செய்கு   நாயகம் அவர்கள் நமது   மதுரஸாவை   அமைத்திருக்கின்றார்கள் .  சமகாலக்   கல்வி பெறாத ஓர்   ஆலிம்   தம் காலத்தில் வாழும்   மக்களை   வழி நடத்துபவராக   இருக்க முடியாது .   பள்ளிகளில்   சொற்பொழிவாற்றும்போது   பேசும்   ஆலிமைவிட   கேட்கும்   அவாம்கள்   -   பொதுமக்கள் அதிக   வி ­ ஷயம்   தெரிந்தவர்களாக   இருக்கின்றார்கள் .   எனவே   உலகியலோடு   மார்க்க   இயலை   ஒப்பிட்டு   விளக்கும்   அறிஞர்களின்   உபதேசங்களே   மக்களின்   கவனத்தைத்   திருப்புகிறது .  நமது   மதுரஸா   உலகியல்   -   மார்க்கவியலைக்   கற்றுத்தருவதோடு   மேலும் ஒரு   சிறப்பைப்   பெற்றுத்திகழ்கிறது .  


தன்னையறியும்   ஆன்மிக   ஞான   அறிவும்   இங்கு   கற்றுத்தரப்படுகிறது .   இந்த   முப்பரிமாணத்திட்டத்தில்   மதுரஸா   நாள்தோறும் முன்னேறி வருகிறது .  


மதுரஸாவின்   முன்னேற்றத்   திட்டத்தின்படி ....  


1.   மஹல்லாக்கள்   தோறும் சென்று   பெற்றோர்களை   அணுகி மாணவர்களை அதிகம் சேர்க்க முழு முயற்சி   நடைபெறுகிறது .  \


2.   மாணவர்கள்   படிப்பதற்கென   -   அறிவியல் பரிசோதனைக் கூடம்   ( லேப் )   கட்ட   ஆவன   செய்யப்பட்டுள்ளது .  


3.   நமது   ஆன்மிகக்   கொள்கைகளை   -   நமது மாத   இதழை   -   நமது நூல்களை நாமே   அச்சிட்டுக்   கொள்ள   மல்டிகலர்   அச்சகம் ஒன்று   தொடங்கப்பட்டுள்ளது .  

4.   மதுரஸாவில்   நிலையான   வருமானத்திற்காக   கடைகள் கட்ட அடிக்கல்   நாட்டப்பட்டு   கட்டடப்பணி   நடைபெற்று வருகிறது .  

5.   இன்ஷா   அல்லாஹ்   விரைவில்   CBSC   பள்ளியொன்று   நிறுவ முயற்சி   மேற்கொள்ளப்பட்டுள்ளது .  

6.   இன்னும் அனேக   புதுமைகள்   நிகழவிருக்கின்றன .   சங்கைமிகு   செய்கு   நாயகம் அவர்களின்   அருளாணைக்கிணங்க   நடைபெறும் இத்துணை   பணிகளுக்கும்   பொருள் பலம் மிகவும்   தேவைப்படுகிறது .  

இந்த   ரமளானிலும்   -   அடுத்துவரும்   குர்பானியிலும்   முரீதுகள்   தனிக்   கவனம் செலுத்தி நிதி திரட்ட   வேண்டுமென   சங்கைமிகு   செய்கு   நாயகமவர்கள்   விரும்புகிறார்கள் .  

எனவே   சமுதாயத்திற்கு   நிலையான   பயனைத்   தரப்போகும்   மதுரஸா   வளர்ச்சியில் முழு   மூச்சாய்   முயன்று   சங்கைமிகு   செய்கு   நாயகம் அவர்களின்   ஆவலை   நிறைவேற்றி   அருளைப்   பெறுவோமாக !