ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

நம்மைத் தாண்டி....

 

 

சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின் 80 ஆவது உதய நாள் விழா உற்சாகமாக முரீதுகளால் கொண்டாடப்படுகிறது. இந்த  இனிய நாளை இந்த  நாடே, இந்த உலகமே. குறிப்பாக முஸ்லிம் உலகமே தமக்குரிய நாளாகக் கொண்டாடினால் அது எத்துணை மகிழ்ச்சியான வி­யம்!   அதற்கு என்ன வழி?


இதைச்சிந்திப்பது முரீதுகளான ஒவ்வொருவர் மீதும் கடமை!


ஏனென்றால் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களைக் கரம் பற்றியதால்  ஹக்கை ஹக்காக விளங்கி உண்மையான  ஷிர்க்கிலிருந்து பாதுகாப்புப் பெற்றிருக்கின்றோமே அந்த பாக்கியத்தை மற்றவர்கள் அடைய வேண்டாமா


பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருப்பேரரின் திருக்கரங்களை ஸ்பரிசிக்கும் பேறு  நமக்குக் கிடைத்துள்ளதே அதை மற்றவர்கள் அனுபவிக்க வேண்டாமா ?. ஞானம் என்றால் என்னவோ ஏதோ வென்று மக்கள் வெருண்டோட, இதுதான் ஞானம்; இதைப்படிப்பதால் பைத்தியமெல்லாம் பிடிக்காது. இதைப்படிக்காவிட்டால் இறைவனை ஒருபோதும் அறிந்து கொள்ள முடியாது என எளிமையாக விளக்கி  வழிகாட்டுகிறார்களே இந்த வழியினை எல்லோரும் அடைந்து கொள்ள வேண்டாமா?


ஹக்கை அடையவேண்டுமென்ற உண்மையான இறைதாகம் கொண்டவர்கள்போலி குருமார்களிடம் சிக்கி தங்கள் இலட்சியத்தை இழந்து நிற்கும் இக்காலத்தில் உண்மையான ஞானத்தை உண்மையாக  ஊட்டி இறைவனிடம் சேர்க்கும் உயர் குருவை நாம் பெற்றுவிட்டோமே இந்த அருட்பேறு அனைவரும் பெற வேண்டாமா?


வேண்டும்...வேண்டும்....வேண்டும்.....!  இதில்  மாற்றுக் கருத்து இல்லைதான்!


ஆனால் முரீதுகளின் கருத்தில் சற்று மாற்றம் தேவை ! அது என்ன?

நம்மைத் தாண்டி நம் செய்கு நாயகம் அவர்களை, அவர்களின் கருத்துகளை வெளியுலகுக்குக் கொண்டு சேர்க்கவேண்டும். இப்போதிருப்பதைவிட பன்மடங்கு அந்தப்பணியில் நம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். செய்வோமா?.

 

 


 

தங்களுடைய ஆட்சியைச் சரிவர நடாத்தும் பரம ரகசியங்களை அறிந்த கத்ரைக்கூட மாற்றியமைக்கும் மேன்மைமிக்க இரட்சகர்களே குத்புல் அக்தாப் என் வாப்பா நாயகத்தைப் போன்றவர்கள். ஹக்கின் ஸிஃபாத்துகள் சிலரில் தஜல்லியாகியே பிறக்கின்றனர். நபீமார்கள் ரஸூல்மார்கள் ஹக்கில் ஹக்காய் எப்படி அவனது இல்மிலிருந்து தோன்றினார்களோ அவ்வண்ணமே குத்புமார்களும் தோன்றுகிறார்கள். அவர்கள் ஹக்கின் ரஹ்மத்தெனும் மடியில் தங்கரியம் செய்யப்பட்டவர்கள்.

 

 

 

 

மறைஞானப் பேழை நிறுவனர்

 அஷ்ஷைகுல் காமில்

குத்புஸ்ஸமான் ­ம்ஸுல் வுஜூத்

ஜமாலிய்யா

அஸ்ஸய்யிது  கலீல் அவ்ன் மெளலானா

அல்ஹஸனிய்யுல் ஹா´மிய் நாயகம் அவர்கள்