ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி ஹள்ரத் பதில்கள்
தொகுத்தவர் : எ.முஹம்மது சுல்தான் ஹக்கிய்யுல் காதிரிய், பேராவூரணி.
1. தாயத்துப் போடுவது மார்க்கத்திற்குக் கூடுமா? தாயத்து ஈமானுக்கு ஆபத்து எனச் சிலர் கூறுகிறார்களே?
ஓதிப் பார்ப்பதில் இரண்டு வகை....
1. கூடும் 2. கூடாது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஓதும் வார்த்தையில் ஷிர்க் இருந்தால் கூடாது. இல்லை என்றால் ஓதிப் பார்க்கலாம் என்றார்கள்.
இப்னுமஸ்வூத் (ரலி) அவர்கள் தன் மனைவி அணிந்திருந்த தாயத்தை எடுத்து எறிந்தார்கள். காரணம் அது எஹூதியிடம் இருந்து வாங்கியதால்.
ஓதிப் பார்ப்பதில் இரண்டு வகை உள்ளது போல் தாயத்து அணிவதிலும் 2 வகை உள்ளது.
1. கூடும் 2. கூடாது.
ஷிர்க் உள்ள வார்த்தையுடன் அணிந்தால் கூடாது. இல்லையயனில் கூடும்.
அபூதாவூது என்ற கிதாபிலேயே தாயத்து போடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பெருமானார் அவர்கள் தங்கள் பேரக் குழந்தைகளுக்கு ஓதிப் பார்த்தார்கள். அவர்கள் நான் மட்டும் செய்யவில்லை. இப்றாஹீம் (அலை) அவர்களும் ஓதிப் பார்த்திருக்கிறார்கள் என்று கூறியுள்ளா ர்கள் ( புகாரி.)
ஜிப்ரீல் (அலை) ஓதிப் பார்த்தார்கள் (முஸ்லிம்)
ஷிர்க் உள்ள வார்த்தையைத்தான் ஓதக் கூடாது.
2. செருப்பின் வார் அறுந்தால் கூட என்னிடம் தான் கேட்க வேண்டுமென அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறானே. அப்படியிருக்க வலிமார்களிடம் துஆ கேட்கலாமா? மறைந்தவர்களிடம் உதவி கேட்கலாமா?
அனைத்தும் அல்லாஹ்தான் செய்கிறான். அவன் நேரடியாகவும் செய்வான். மற்றவர்கள் மூலமாகவும் செய்வான். செருப்பு அருந்துவிட்டால் நாம் அப்படியே வைத்துக் கொண்டு எந்த முயற்சியும் செய்யாமல் அல்லாஹ்தான் குர்ஆனில் சொல்லிவிட்டானே என்று நாம் சும்மா இருந்தால் தைத்து விடுமா?
நாம் செருப்பை எடுத்து கடையை நோக்கி நடக்க வேண்டும். நம்மை நடப்பதற்கு சக்தி கொடுப்பதன் மூலம் உதவி செய்கிறான். செருப்பு தைக்க நூல் வேண்டும், ஊசி வேண்டும், தைப்பதற்கு ஆள் வேண்டும். இவ்வாறாக ஒவ்வொரு வியமுமாக இருந்து மற்ற பொருட்கள் மூலம், மனிதர்கள் மூலம் உதவுகிறான்.
இந்த ஆதாரத்தை அப்படியே எடுத்தால் நம்மில் யாரும் மற்றவர்களிடம் எதையும் எந்த உதவியையும் கேட்க முடியாது. எந்த வேலைக்கும் செல்லவும் மாட்டார்கள். அல்லாஹ்விடம் உட்கார்ந்த இடத்திலிருந்து துஆ செய்து கொண்டே எந்தவித முயற்சியும் செய்யாமல் இருப்பார்கள். உலகமே ஸ்தம்பித்துப் போய்விடும். எல்லாம் அல்லாஹ்தான் கொடுக்கிறான். அதே நேரத்தில் நமது முயற்சியும் பொருத்தமாக இருக்க வேண்டும்.
அர்ரஹ்மானு அல்லமல் குர்ஆன் என்று தன் திருமறையில் அல்லாஹ் கூறுகிறான். இறைவன்தான் குர்ஆனைக் கற்றுக் கொடுக்கிறான் என இதற்கு அர்த்தம். இதன்படிப் பார்த்தால் அல்லாஹ் நாம் ஒவ்வொருவருக்கும் நேரடியாக வந்து அவனே குர்ஆனைக் கற்றுக் கொடுக்கிறானா? மற்ற நபர்கள் முலமாகத்தானே. அதே போலத்தான் அல்லாஹ் யாரைக் கொண்டும் யார் மூலமாகவும் உதவி செய்வான். உயிரோடிருக்கும் மனிதர்கள், மறைந்தவர்கள் மூலமாகவும் நமக்கு உதவி செய்வான்.
சில பேர் கூறுகிறார்கள்: ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் மற்ற வலிமார்களிடம் துஆ கேட்பதற்கு நேரடியாக அல்லாஹ்விடமே கேட்டுவிடலாமே? எதற்கு இடைத்தரகர்கள் என்றும் மேலும் அல்லாஹ்விற்கு இணை வைக்கிறீர்கள் என்றும் கூறுகிறார்கள்:
அவர்களிடம் நாம் கேட்க வேண்டும். ஏதாவது நோய் என்றால் டாக்டரிடம் நீங்கள்தான் எப்படியாவது இதைத் தீர்க்க வேண்டும் என்று கூறுகிறோமே! அவர் என்ன அல்லாஹ்வா? மேலும் மற்ற மனிதர்களிடம் கடனுக்குப் போய் வாங்குகிறோம், கடைகளில் சாமான்கள் கேட்கிறோம். இன்னும் என்னென்ன உதவிகள் வேண்டுமோ எல்லாம் கேட்கிறோம். அப்படியானால் அவர்கள் அல்லாஹ்வா? அல்லாஹ்தான் செருப்பு அறுந்தால் கூட தன்னிடம் கேட்க வேண்டுமென்று கூறியிருக்கிறானே. இப்போது மட்டும் அது தெரியவில்லையா?
அது ஷிர்க் இல்லையா? உயிரோடு இருப்பவர்கள் என்றால் உதவி கேட்கலாம். மறைந்தவர்களிடம உதவி கேட்கக் கூடாது என்றால் உயிரோடு இருப்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வா? இது ´ர்க் இல்லையா? அல்லாஹ் நினைத்தால் எதைக் கொண்டும் யாரைக் கொண்டும் (உயிரோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும்) உதவி செய்வான். இதுதான் தெளஹீது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிரோடு இருக்கும்போதும் மறைந்த பிறகும் அவர்களிடம் உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்தார்கள்.
பிலால் இப்னு ஹர்ஸ் (ரலி) ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கபுருக்குப் போய் உம்மத்திற்காக மழை கேட்டார்கள். மழை பெய்தது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனவில் வந்து மழை பெய்யும் என்றார்கள். அதே போல் பெய்தது. (பைஹக்கி)
ஒரு கண் தெரியாத ஸஹாபி நபியவர்களிடம் வந்து எனக்குக் கண் தெரிய வேண்டும் எனக் கேட்டார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதி ஊதினார்கள். உடனே பார்வை தெரிந்தது. (திர்மிதி.)
ஈசா நபி (அலை) ஊமைகளைப் பேச வைத்தார்கள். நோய்களைத் தீர்த்தார்கள் என அல்லாஹ்வே குர்ஆனில் கூறுகிறான்.
மழை பெய்ய வேண்டிக் கேட்டார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மழை பெய்யும் என்றார்கள். மழை பெய்தது. அதே போல அதிக மழை பெய்துவிட்டது. எனவே மழை நிற்க வேண்டி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் துஆ கேட்டார்கள். மழை நின்றது.
இப்படி வந்த நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கும்போது அவர்கள் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? அல்லாஹ்விடம் கேட்க வேண்டியதுதானே என கூறினார்களா? இல்லவே இல்லை. அவர்கள் அத் துவாவை ஏற்றுக் கொண்டார்கள். அது ஷிர்க் என்றால் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்களே. நபிகளுக்கு அல்லாஹ்விடம் இருந்த நெருக்கத்தை விடவா? அல்லாஹ் நாயகத்தின் பார்வை என் பார்வை, நாயகத்தின் கை என் கை என்று சொன்னவர்களை விடவா? நபிகள் முகத்தைக் காண, அவர்களிடம் உரையாட அல்லாஹ்வே மிஃராஜில் நேராக தன்வசம் அழைத்தவர்களை விடவா? குர்ஆனை உலகிற்கு வாய் வழியாக தர தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைவிடவா? இறைவன் தான் கேட்டால் என்ன வேண்டுமானாலும் செய்வான் என்றபோதும் கல்லடிகள், சொல்லடிகள் பெற்றபோதும் பொறுமை காத்து இறைவனிடம் அவர்களுக்காக நல்வழி காட்ட துஆ செய்தவர்களை விடவா? நாயகத்தின் மீது அல்லாஹ்வும் (வேறு எந்த வேலையும் செய்கிறேன் என்று சொல்லாத அல்லாஹ்) மலக்குகளை ஸலவாத்து சொல்பவர்களை விடவா? மார்க்கத்தையே தனது வார்த்தையில் நிர்ணயம் செய்பவர்களை விடவா? மேலும் இத்தகைய பண்புடைய நபிகளின் அருகில் மண்டியிட்டு பாடம் பயின்ற சஹாபிகளை விடவா? இன்றைக்கு அவர்களைக் குறை கூறும் மூடர்கள் இறைவனுக்கு நெருக்கமானவர்கள் அனைத்தும் அறிந்தவர்கள்.
அல்லாஹ்வுடைய நபி உயிருடன்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. (இப்னு மாஜா.)
கப்ரருகே கூடாரம் அடிக்கும் போது உள்எள தபாரக் கல்லதீ ஸூரா ஓதும் சத்தம் கேட்டது என சஹாபிகள் சொன்னார்கள் (திர்மிதி)
இறை நேசர்களின் பார்வை எனது பார்வை என அல்லாஹ் கூறுகிறான்
மையத்துக்கு தன்னை அடக்கிய பின் செல்பவர்களின் காலடிச் சத்தம் கேட்கும் (புகாரி.)
3. அல்லாஹு நீங்கள் திரும்பும் இடமெல்லாம் நான் இருக்கிறேன் என்கிறான். அப்படியயன்றால் கபுரில் இல்லையா? ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரவ்ளாவில் இல்லையா?
இறைவனின் அடையாளச் சின்னங்களாக விரும்புபவர்கள் இறை நேசர்கள்.
அல்லாஹ் என்னுடைய இறை நேசர்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் என்னுடன் யுத்தம் செய்பவர்கள் எனக் கூறியுள்ளான் (புகாரி)
இறை நேசர்களால் மண்ணை தன்வசப்படுத்தும் ஆற்றல் உண்டு (புகாரி)
மறைந்தவர்கள் உதவி செய்ய மாட்டார்கள் என்றால் மூஸா (அலை) எப்படி 50 நேரத் தொழுகையை 5 ஆகக் குறைத்து உதவி செய்தார்கள்?
வலிமார்கள் உதவி செய்வது கூடாது. அது ஷிர்க் என்றால் அவ்வாறு கூறக் கூடியவர்கள் 50 வக்த் ஒரு நாளைக்குத் தொழ வேண்டும்.
உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இதற்கு முன் அல்லாஹ்விடம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டால் மழை கேட்டோம் பெய்தது. இப்போது அவர்களது சிறிய தந்தை அப்பாஸ் (ரலி) அவர்கள் பொருட்டால் கேட்கிறோம் மழை பெய்தது என்றார்கள். (புகாரி)
இதிலிருந்து ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மட்டுமல்லாது மற்ற இறை நேசர்கள் பொருட்டாலும் துஆ கேட்டுள்ளார்கள். அது நடந்துள்ளது என்பது புரியும். மேலும் மற்ற இறை நேசர்களிடம் நாம் துஆ கேட்கலாம்.
தொழுகையில் உன்னைத்தான் வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம் என்று கேட்டுவிட்டு வெளிவந்ததும் வலிமார்களிடம் உதவி கேட்கிறீர்களே? என்று கேட்கிறார்கள்.
தொழுகையில் நீங்கள் அல்லாஹ்விடமே உதவி தேடுகிறேன் எனக் கேட்டுவிட்டு, டாக்டரிடம் ஏன் போகிறீர்கள், சாப்பாடு ஏன் வீட்டில் கேட்கிறீர்கள், உயிரோடு இருப்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வை ஏன் இதர வலிமார்களை முன் வைத்துக் கேட்டால் மட்டும் ´ர்க் என்கிறார்கள். இப்போது மட்டும் அல்லாஹ் உதவி செய்கிறான் டாக்டர் மூலமாக உதவி செய்கிறான் என்று விளங்கத் தெரிகிறது. ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், வலிமார்கள் அவர்களிடம் கேட்டால் மட்டும் ´ர்க். அப்படியானால் சாதாரண உலகக் கல்வி படித்த டாக்ருக்கு உள்ள மதிப்பு கூட இஸ்லாத்தைக் கொண்டு வந்த இறைத் தூதருக்கு, அது பரவக் காரணமாய் இருந்த வலிமார்களுக்கு இல்லையா?
இறை நேசர்கள், முஃமின்கள் கபுரில் இருக்கும்போது மற்றவருக்காக துஆ செய்து கொண்டிருக்கிறார்கள் நேர்வழி காட்ட (அஹ்மத்)
பெருமானார் கூறுகிறார்கள்: உங்களுடைய செயல்கள் என்னிடம் எடுத்துக் காட்டப்படும். நன்மை செய்தால் அல்லாஹ்வைப் புகழ்கிறேன். தீமை செய்தால் பாவ மன்னிப்பு தேடுகிறேன். (பஜ்ஜார்.)
இறை நேசர்கள் கேட்டால் இறைவன் உடனே அங்கீகரிப்பான். வணக்கம் இறைவனுக்கு, மரியாதை இறை நேசர்களுக்கு.
அல்லாஹ் சஜ்தா - வணக்கம் ஆதம் அலை சஜ்தா - மரியாதை
அல்லாஹ் என்னை வணங்குங்கள். எனது நேசர்களுக்கு மரியாதை செய்யுங்கள் எனக் கூறியுள்ளான்.
வணக்கத்தை மட்டும் வைத்து வெற்றி பெறுவதனால் இப்லீஸ் வெற்றி பெற்றிருப்பான். அவனை விடவா அல்லாஹ்வைத் தொழுகிறவர்கள் இருந்தார்கள்.
அல்லாஹ்விடம் நேராகத்தான் கேட்க வேண்டுமென்றால் சஹாபாக்கள் ஏன் பெருமானார் அவர்களிடம் கேட்டார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி
வஸல்லம் ஏன் அதை ஏற்றுக் கொண்டார்கள்? ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 70000 பேர் எந்த வித கேள்விக் கணக்குமின்றி சுவனம் செல்வார்கள் என்றார்கள். உகாஷா (ரலி) அவர்கள் 70,000 பேரில் ஒருவராக நானும் இருக்க துஆ செய்யுங்கள் என்றார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் இருப்பீர்கள் என்றார்கள். ராபியா இப்னு காப் (ரலி) ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒளு செய்யத் தண்ணீர் கொடுத்தார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன வேண்டும்? எனக் கேட்டார்கள். அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும் என்றால் ஏன் என்னிடம் கேளுங்கள் என்று கூறினார்கள்.
ராபியா (ரலி) நாளை மறுமையில் உங்களுடன் இருக்க வேண்டும் என்றார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வேறு ஏதும் வேண்டுமா? எனக் கேட்டார்கள். இல்லை போதும் என்றார்கள். தொழுகையை விடாமல் தொழுங்கள் கிடைக்கும் என்றார்கள். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுகிறார்கள் மறுமையில் சொர்க்கத்தில் எங்கு பார்த்தாலும் ராபியா (ரலி) அவர்களுடைய குரல் கேட்டது எனக் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்)
ஆயிஷா (ரலி) அவர்களிடம் பஞ்சம் என்று மக்கள் முறையிட்டபோது ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கபுரில் உள்ள முகடை நீக்கிவிட்டு அல்லாஹ்விடம் துஆ கேளுங்கள் என்றார்கள். அதே போல் பஞ்சம் தீர்ந்தது.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பெருமானார் அவர்களிடம் வளமைக்காகப் பேரீச்சம்பழத்தைக் கொடுத்து துஆ செய்யச் சொன்னார்கள். துஆச் செய்தார்கள். அதை வயிற்றிலேயே ஒரு பையில் கட்டி வைத்துக் கொண்டு திறந்து பார்க்காமல் 25 வருடம் சாப்பிட்டார்கள். உஸ்மான் (ரலி) ஹீதில் அது காணடிக்கப்பட்டது.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள் : உஸ்மான் (ரலி) ஹீதில் எல்லோருக்கும் ஒரு கவலை. எனக்கு மட்டும் இரண்டு கவலை. அவர்களது பேரீச்சம்பழப்பை காணாமல் போனதையும் சேர்த்து.
(விருந்தும் மருந்தும் உண்டு)