ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

ஐந்தறிவுள்ள உயிரினங்கள் அவை அவை தம் வாழ்வை நடத்திக் கொள்ளப் போதுமான அறிவை இயற்கையாகவே வைத்திருக்கும்  இறைவன், ஆறறிவுள்ள மனிதனை மட்டும் எதையும் கற்றுக் கெண்டு செய்பவனாகவே அமைத்துள்ளான்

இருக்க, எழ, நடக்க, ஓட, உண்ண, உறங்க, பேச, பாட, படிக்க, படிப்பிக்க, கொடுக்க, வாங்க, என அத்தனை செயல்களையும் தாயிலிருந்து தொடங்கி இன்னொருவர் கற்றுத்தர - கற்றுச் செயல்படுவனாகவே மனிதனைப் படைத்துள்ளான்.அந்த வகையில்.......


மனிதனுக்கு இறைவனை - கடவுளைக் - காட்டித்தரவும் ஆசிரியர்களை நியமித்தான்அவர்கள் தாம் உலகில் அவ்வப்போது தோன்றிய இறைத்தூதர்கள் - மகான்கள் - ஞானிகள் - சீர்திருத்தவாதிகள்


மனிதனது பகுத்தறிவே ஓர் ஆசிரியராக இருந்தாலும், அந்தப் பகுத்தறிவு சரியான வழியில் நடக்க ஓர் ஆசிரியர் தேவைப்படுகிறார்.


அதனால்தான் இறைவன் திருக்குர்ஆனில்....வப்தகூ இலைஹில் வஸீலத்த (5:35)

இறைவனளவில் நெருங்கச் செய்யும் வஸீலா ஒன்றை நீங்கள் தேடி அடைந்து கொள்ளுங்கள் என மக்களுக்கு அறிவுறுத்துகிறான்.


மேலும், ஃபஸ்அலூ அஹ்லத்திக்ரி இன் குன்தும் லா தஉலமூன்.(16:43)

நீங்கள் அறியாதவர்களாக இருப்பின் (இறையறிவு பெற்ற) அறிஞர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் - எனக் கூறுகிறான்.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாங்கள் வாழ்நாள் வரை மக்களுக்கு வழிகாட்டினார்கள்அவர்களுக்குப் பின் யார் அந்தப் பணியை செய்வார்கள்

 

அவர்களே அருளினார்கள்.


உங்களிடையே இரண்டு பொக்கி­ங்களை விட்டுச் செல்கிறேன்.  ஒன்று திருமறை.  மற்றொன்று என்னுடைய அஹ்லுபைத் எனும் குடும்பத்தார் என்று.


அதாவதுதிருமறை மூலம் அறிந்து என்னை நெருங்குங்கள்அல்லது அந்த திருமறையைப்படித்து அதன் விளக்கமாகவே வாழும் என் வாரிசுகளாகிய குடும்பத்தாரை அணுகி என்னை அடைந்து கொள்ளுங்கள் என அறிவுறுத்துகிறார்கள்.


மேலும் தங்கள் குடும்பத்தினர் யார் என்பதை...


மருமகர் ஹள்ரத் அலீ (ரலி) மகள் பாத்திமா (ரலி), பேரர்கள் இமாம் ஹஸன், ஹுஸைன் (ரலி) ஆகியோரை அடையாளம் காட்டியுள்ளார்கள்.


திருக்குர்ஆன் மூலம் பெறப்பட்ட பொதுவான சட்டதிட்ட அறிவுகளை முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் மூலம் கற்றுக் கொள்ளலாம். ஆனால் அதன் உயிரான - நுட்பமான - ஆன்மீக ஞான அறிவை நபிகள் நாயகத்தின் வாரிசுகள் மூலம்தான் பெற முடியும்.அதனால்தான் பெருமானார் அவர்கள்,


அலீ (ரலி), அவர்களைக் குறித்துநான் அறிவின் தலைநகரம், அலீ அதன் தலைவாசல்எனக் குறிப்பிட்டார்கள்.


பைஅத்” (தீட்சை) எனும் சத்திய உறுதிப் பிரமாணம் நபிகளாரை ஏற்று அதிகமானோர் முஸ்லிமாக வாழ்ந்தாலும் ஒரு சிலரிடம் அவர்கள் அறநெறி தவறாத செம்மையான வாழ்வு வாழ்வதற்காக “பைஅத்” (தீட்சை) எனும் சத்திய உறுதிப் பிரமாணம் எடுத்தார்கள். இதனை குர்ஆன் இப்படிக் கூறுகிறது.நபியே! விசுவாசம் கொண்ட பெண்கள் உங்களிடம் வந்து அல்லாஹ்வுக்கு யாதொன்றையும் இணைவைப்பதில்லை. திருடுவதில்லை, விபச்சாரம் செய்வதில்லை, தங்கள் பெண் சந்ததிகளைக் கொலை செய்வதில்லை.... என உங்களிடம் (பைஅத்) வாக்குறுதி செய்தால் அவர்களது வாக்குறுதியைப் பெற்றுக் கொண்டு நீங்கள் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புப் கோருங்கள்நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் அருளாளனாகவும் இருக்கிறான்.  (குர்ஆன் 28 - 61 : 12)

 

மேலும் ஆண்கள் அவர்களிடம் பைஅத் செய்த நிகழ்ச்சியை..


நபியே (எவர்) உங்களிடம் (பைஅத் செய்து) வாக்குறுதி செய்கிறார்களோ, அவர்கள் அல்லாஹ்விடமே வாக்குறுதி செய்கின்றனர்அவர்களின் கைமீது (உங்களின் கை ஒன்று) அல்லாஹ்வின் கைதான் இருக்கிறது! (குர்ஆன்) என்று கூறியுள்ளான்.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் ஹள்ரத் அலீ (ரலி) அவர்கள் இந்த ஆன்மிக நெறியில் வாழ்வதற்கான பைஅத் உறுதிமொழியை மக்களிடம் எடுத்து அறநெறி வாழச் செய்தார்கள்அவர்களுக்குப் பின் அவர்களின் இரு ஆண்மக்கள் இமாம் ஹஸன் (ரலி), இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களும், அதற்குப் பின் அவர்களின் வாரிசுகளும் இத்திருப் பணியைச் செய்து வந்தார்கள்.


அவர்களின் வாரிசுகளாக வந்தவர்கள்தாம் இந்தியாவின் புகழ்பெற்ற இறைஞானிகளான அஜ்மீர் காஜா முயீனுத்தீன் சிஷ்தி (ரலி), நாகூர் ஆண்டகை, ஏர்வாடி இப்றாஹிம் ­ஹீது வலியுல்லாஹ், மற்றும் தமிழகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் சமாதி கொண்டுள்ள மகான்களுமாவர்.நபிகளின் வாரிசுகள் உலகெங்கும் சென்று இத்திருப்பணியைச் செய்யவில்லையயனில் இஸ்லாம் - இத்தனை நாடுகளில் பரவி இருக்காது என்பது வரலாற்று உண்மை. அவர்களின் தனிச் சிறப்புகள் குறித்தும், அவர்களை அவசியம் பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்பதை திருக்குர்ஆன்


அதீஉல்லாஹ வஅதீஉர்ரஸூல வஉலில் அம்ரி மின்கும் (குர்ஆன்)


அல்லாஹ்வுக்கும் அவனது திருத்தூதருக்கும் உங்களில் காரியத்தர்களுக்கும் வழிபட்டு நடக்கவும் என்று கூறுகிறது.


மேலும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

அஹ்லுபைத்துகளாகிய என் குடும்பத்தாரை நேசித்தவர் என்னையே நேசித்தார்.அவர்களைப் பகைத்தவர் என்னையே பகைத்தார் எனவும், எச்சரித்ததோடு, என் குடும்பத்தார் (பிரளயம் ஏற்பட்டபோது தப்பிக்க மக்களை ஏற்றிக் கொண்டநூஹ் நபியின் கப்பலைப் போன்றவர்கள்அவர்களைப் பின்பற்றியோர் காப்பாற்றப்படுவர் எனவும் விளக்கியுள்ளார்கள்

 

 

மக்களுக்கு நேர்வழிகாட்டும் அவர்களை நேசிப்பது முஸ்லிம்களுக்கு கடமையாக விதிக்கப்பட்டுள்ளதுஇதுபற்றி இறைவன் திருமறையில்,


(நபியே) நீங்கள் கூறுங்கள்: (மக்களே) நான் உங்களிடம் எனது குடும்பத்தினரை அன்பு கொள்வதைத்தவிர வேறு எதனையும் கூலியாகக் கேட்கவில்லை.  (ஷீரா - 23)

இன்று நபிகளாரின்  திருப்பணியை அவர்கள் காட்டிய  முறைப்படி  செய்துவரும் உத்தமர் தான் குருநாதர் ஜமாலிய்யா அஸ்ஸையித் கலீல் அவ்ன் மெளலானா அவர்கள்.சத்திய ஹக்கின் சம்பூரண தோன்றுதலையும் இருலோக இரட்சகர் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அந்தரங்க வெளிப்பாடும் முஹிய்யுத்தீனிய சந்நிதானத்தின் பிரதிநிதியும் ஆகிய  ஆருயிர் செய்கு நாயகம் குதுபுல் அக்தாப் சாஹிபுல் வக்த், ­ம்ஷில் வுஜூத் அஷ்ய­ய்கு ஜமாலிய்யா கலீல் அவ்ன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹா´மிய் நாயகம் அவர்கள் 1937 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி (ஹிஜ்ரி 1356 ஆம் வருடம் ­வ்வால் மாதம் பிறை 16) திங்கட்கிழமை காலை 08.30 மணிக்கு, குதுபுல் அக்தாப், குதுபுல் பரீத்,கெளதுல் வஹீத், அஷ்ய­ய்கு ஜமாலிய்யா அஸ்ஸய்யிது யாஸீன் மெளலானா அல்ஹஸனிய்யுல் ஹுஸைனிய்யுல் ஹா´மிய் (ரலி) அவர்களுக்கு ஈழமணித்தீவதன் தென்கரை தன்னிலே விளங்கும் இயற்கை எழில் கொஞ்சும் வெலிப்பிட்டி எனும் சிற்றூரில் திருமகவாக, சுயம்பாக இவ்வவனியில் பிரசன்னமானார்கள்.இளம் வயது முதலே ஹக்கின் பக்கம் ஈர்க்கப்பட்டவர்களாய்த் திகழ்ந்தார்கள்அகமியத்தின் அற்புத நிகழ்வுகள் அவ்வப்போது அவர்களுக்குத் தென்பட்டுக் கொண்டே இருந்ததுஇளம் வயதிலேயே  திருக்குர்ஆனை முழுவதுமாக ஓதி முடித்து விட்டார்கள். திருக்குர்ஆன் ஓதத் தொடங்கியது முதல் மற்ற எல்லா அரபுக் கலைகளையும் அவர்களின் அருமைத் தந்தை நாயகம் அவர்களிடமே முறைப்படி கற்றுத் தேர்ந்தார்கள்அவர்களின் தந்தை நாயகத்திற்கு நிகராக இல்முகளைக் கற்ற- பட்டங்கள் பல பெற்ற- ஆய்வுகள் செய்து டாக்டர் பட்டங்களுக்கு நிகராக பட்டயங்கள் பெற்ற - ஆசிரியர்கள் இவ்வவனியில் எந்த ஓர் அரபிக் கல்லூரியிலும் இருக்க முடியாதுதந்தை நாயகம் அவர்கள் கற்றதை கசடறக் கற்றதோடு நில்லாமல் அதற்கு ஏற்றவாறு தம் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டிய மாமேதையாகும்அவர்களின் கல்வித் திறமையை, ஆன்மீகப் பேரொளியைப் பற்றி

 

 

அறியாதவர்கள் இலங்கையிலும், இந்தியாவிலும் அக்காலத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட நடமாடும் ஒரு பல்கலைக்கழகத்திலே உள்ரங்க வெளிரங்க இல்முகளைக் கற்றதால் அவர்கள் வேறு ஒரு மதுரஸாவில் போய்ச் சேர்ந்து பயில வேண்டிய அவசியமே இல்லாது போனதுஅப்படி ஒரு மதுரஸாவிற்குப் போயிருந்தால் இவர்களின் தந்தை நாயகம் அவர்களிடம் கற்ற கல்விகளை எல்லாம் அங்கு கற்றிருக்கவே முடியாது என்று அவர்கள் திருவாயாலேயே சொல்லக் கேட்டிருக்கிறோம்.அருமை செய்கு நாயகம் அவர்கள் தமது தந்தை நாயகம் அவர்களிடம் பாடம் படித்த செய்திகளை அவ்வப்போது சொல்லிக் காட்டுவார்கள்தந்தை நாயகம் அவர்கள் பாடம் போதிக்கின்ற முறையையும், அவர்களிடம் செய்கு நாயகம் அதபுடன் அமர்ந்து பாடம் கேட்டுக் கொண்ட முறைகளையும் கேட்டு பெருவியப்படைவோம்.அதே போன்று வாழ்க்கைப் பாடத்தையும் அவர்கள் தம் அருமை மகனாருக்குப் போதிக்கத் தவறவில்லைஇப்படி எல்லா நிலைகளிலுமே தம் தந்தையிடம் கல்வி கற்ற எங்கள் செய்கு நாயகம் அவர்களும் ஒரு நடமாடும் பல்கலைக்கழகம் என்றால் அது மிகையாகாதுஆகவே அவர்களுக்குப் பட்டயம் எதுவும் தேவைப்படவில்லைமெளலவி பாஸில் வரை எல்லாப் பாடங்களையும்  தந்தை நாயகம் அவர்களிடமே கற்றுத் தேர்ந்தார்கள்.தம் தந்தை நாயகம் அவர்களிடம் கற்ற பாடங்கள்: தப்ஸீர், ஹதீஸ், உஸூல் ஹதீஸ், பிக்ஹூ, உஸூல் பிக்ஹு, அகாஇத், தஸவ்வுப், அதப் இன்ஷா, பலாகத், தாரீக், ஸர்பு, நஹ்வு, மன்திக், இல்முல் மஆனி, பதீஉ, பல்ஸபா, ஹிஸாப், அரூள் முதலானவை ஆகும்.செய்கு நாயகம் அவர்களின் வாரிதாத் என்ற தெய்வீக வெளிப்பாடுகளிலிருந்து அன்னவர்களின் அகமியத்தின் ஆழத்தை ஓர் அளவுக்கு நாம் புரிந்து கொள்ள முடியும்அவர்கள் சிற்றறிவு, பேரறிவு எல்லைகளைக் கடந்து ஹக்கின் திவ்விய திருதரிசன மகிமைகளில் மூழ்கி இருப்பதால் அவர்களின் அகமியத்தின் பூர்வீகத்தையும் பூரணமாகப் புரிந்து கொள்ள எவராலும் முடியாதுஅது ஆழ்கடலின் ஆழத்தை அறிவதை விட பன்மடங்கு பல தூரமானது.இனி அருமை செய்கு நாயகம் அவர்களின் புறநிலையைப் பற்றி சற்று அவதானிப்போம்.

 

 

ஈழத்திருநாட்டின் தென்பகுதியில் உள்ள மாத்தறை மாவட்டத்தில் வெலிகமா என்னும் நல்லூரில் அறபா சிரேஷ்ட வித்தியாலயாவில் S.S.C வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கற்றுத் தேர்ந்தார்கள்பின்னர் தமிழின் மேல் அவர்களுக்கு இருந்த தனிப்பட்ட ஆர்வத்தால் மீண்டும்  S.S.C தேர்வை தமிழிலும் எழுதித் தேறினார்கள்அவர்களின் சொந்த முயற்சியால் பண்டிதப் பரீட்சை எழுதித் தேர்ச்சி பெற்றார்கள்பள்ளியில் பயிற்று மொழியாக ஆங்கிலம் இருந்தாலும் தமிழின் மீது அவர்களுக்கு இருந்த ஆர்வ மிகுதியால் தமிழ் இலக்கண இலக்கியங்கள் மட்டுமல்லாது சங்ககால ஏனைய நூல்களையும் தாங்களாகவே கற்றுக் கொள்வதில் பேராசை கொண்டு அதில் மகத்தான வெற்றியும் பெற்றார்கள்இதனால் நன்னூல், தொல்காப்பியம், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம் முதலான பன்னூல்களையும் மிக எளிதில் கற்கும் நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.  1953 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்தே அவர்கள் தமிழில் கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டார்கள்இரண்டொரு தமிழ் பாடல்கள் இலங்கை தினகரன் பத்திரிக்கையிலும் வெளிவந்துள்ளது.


S.S.C தேர்வுக்குப் பின்னர் இரண்டு ஆண்டுகள் அவர்கள் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார்கள்பின்னர் காலி என்னும் ஊரில் அரசினர் ஆசிரியர்  பயிற்சிக் கலாசாலையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் படித்து வெற்றி பெற்று ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் பெற்றார்கள்ஆசிரியர் பயிற்சி 1962ல் முடிய 1963 ஆம் ஆண்டில் அவர்கள் ஊரிலேயே உள்ள அரசு அரஃபா மத்திய கல்லூரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்கள்இங்கு 10 ஆண்டுகள் பணிபுரிந்தார்கள்கிண்டர்கார்டன் முதல் 12ஆம் வகுப்புகள் வரை பாடம் கற்பித்துள்ளார்கள்.அதன்பின் 1972ஆம் ஆண்டு அவர்களுக்கு அதிபராகப் பதவி உயர்வு கிடைக்கப் பெற்று குருணாகல் என்னும் ஊரிலுள்ள பண்டாகொஸ்வத்தைக்கு மாற்றப்பட்டார்கள்அங்கு ஒரு வருடம் சேவை செய்தார்கள்பின்னர் அங்கிருந்து வட்டாரக் கல்வி அதிகாரியாக (C.E.O)  பதவி உயர்வு பெற்றார்கள். 1973 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 5 ஆண்டு காலம் சிலாபம், புத்தளம் வட்டாரங்களில்  (C.E.O) ஆகப் பணிபுரிந்தார்கள். பின்னர் 1978 ஆம் ஆண்டிலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்பட்டார்கள்அங்கு பணியில் இருந்த சமயம் அவர்களுக்கு E.O (Educational Officer )  ஆக பதவி உயர்வு கிடைத்ததுதொடர்ந்து 12 ஆண்டுகள் அங்கு கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தும் அவர்களுக்கு மாற்றம் கிடைக்காத காரணத்தால் பணியிருந்து தம்மை விடுவித்துக் கொண்டார்கள்.

 

 

அன்று முதல் ஆதியிறை அவர்களை ஆன்மீகப்பணிக்கு முற்றிலுமாகத் திருப்பிவிட்டது போலும். அறபு மொழியில் ஆரம்பத்தில் ஒருசில கவிதைகளையே எழுதியுள்ளார்கள்.  அன்னவர்களின் அருமைத் தந்தையும் ய­ய்கும் ஆன யாஸீன் மெளலானா நாயகம் (ரலி) அவர்களின் மறைவுக்குப் பின்னரே அறபியில் ஏராளமான கவிதைகளை எழுதியுள்ளார்கள்.அருமை ­ய்கு நாயகம் இந்தியாவுக்கு 1966ஆம் ஆண்டு அவர்களின் தந்தை நாயகம் மறைந்த 40 ஆவது நாள் அன்று முதல் விஜயம் செய்தார்கள்அதன் பின்னர் 1968 ஆம் ஆண்டு முதல் வருடந்தோறும் இந்தியவிஜயத்தை மேற்கொண்டு சுமார் 3 மாதங்கள்தமிழகத்தில் சுற்றுப் பயணம் செய்து ஆயிரக்கணக்கான பக்தர்களை ஆசீர்வதித்து அருள்புரிந்து ஆன்மீக அறிவு புகட்டி வருகிறார்கள்.இதே போல் 1988ஆம் ஆண்டு முதல் துபை நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அங்குள்ள பலநூறு பக்தர்களுக்கு ஆசீர்வாதம் நல்கி அருள்பாலித்து ஆன்மீக அறிவு போதித்து வருகிறார்கள்இன்னும் 2002 ஆம் ஆண்டு முதல் மலேசியா, சிங்கப்பூர்ஆகிய நாடுகளுக்கு திருவிஜயம் செய்து அங்குள்ள பக்த கோடிகளுக்கு ஆசீர்வாதமும், அருளும், ஆன்மீக அறிவும் வழங்கி வருகிறார்கள்இவர்களின் சிறப்புக்குரிய பாட்டனார் ஜமாலிய்யா மெளலானா நாயகம் (ரலி) அவர்களைப் போல் பல நாடுகளிலும் ஏராளமான முரீதுகள் இவர்களுக்கும் உள்ளது குறிப்பிடத்தக்கது.இறையளவில் நாட்டங்கொண்ட மெய்யன்பர்களே! ஆத்ம சகோதரர்களே! தீமைகளும் குழப்பங்களும், எண்ணிறைந்த வழிகேடுகளும், மார்க்கத்தின் பெயரால் வழிகெட்ட கூட்டங்களும், சத்திய சன்மார்க்கத்தின் அடிப்படையான மெய்ஞ்ஞானத்தை அறிந்து மக்கள் நேர்வழி பெறுவதற்கு இடையூறுகளும் மலிந்து கிடக்கும் சோதனைக்குரிய இக்காலத்தில் நுபுவ்வத்தின் பிரதிநிதித்துவத்தைப் பெற்று இல்ஹாமையும் கராமத்துக்களையும் உடைய ஹக்கின் மெய் நேசர்களைக் கண்மூடித்தனமாக எதிர்த்தும், நிராகரித்தும், தீய முடிவுகளைத் தேடிக் கொள்ளும் கூட்டத்தாரிடமிருந்து விடுபட்டு, கிடைத்தற்கரிய பாக்கியமாக, ஹக்கின் அருட்கொடையாக, நமக்கு மத்தியில் காட்சியளித்துக் கொண்டிருக்கும் நமது அருமை செய்கு நாயகம் அவர்களை உள்ளாலும் வெளியாலும் பற்றி நின்று, அன்னாரின் பொருட்டால் இகபர நற்பேறுகளை பெற்றுக் கொள்வதோடு அன்னவர்கள் பலநூறு ஆண்டுகள் வாழ்க என்றும் வாழ்த்துவோமாக! ஆமீன்!