ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

திருமறைப் பக்கம்

மனிதா நன்றி மறந்தாயா ?

 

 

கப்பல் பிரயாணத்தை விட விமானப் பிரயாணம் துரிதமாகச் செல்லவும், வசதியாகவும் இருப்பதால் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன.விமானப் பிரயாணத்திற்கும் இறைவனது அருட்கொடையான காற்று மண்டலத்தின் தேவையை விமானத்தை இயக்குபவர்கள் நன்கு அறிவர்கள்எவ்வாறெனில் விமானத்தின் இன்ஜின் பயன்படுத்தும் முன்னோக்கிய விசையும், காற்றுத் தடையினால் ஏற்படும் பின்னோக்கிய விசையும் சமமாக இருந்தால்தான் விமானம் சீரான வேகத்தில் செல்லும்அவை இரண்டும் சமமாக இல்லை யயன்றால் விமானத்தின் வேகம் அதிகரிக்கும்; அல்லது குறையும்.


விண்வெளிப் பிரயாணமும், விண்வெளி ஆராய்ச்சியும், மனிதனுக்குப் பயனளிக்கும் விதத்தில் அமைந்துள்ளதும் இறைவனது அருட்கொடையே.  1969 ஆம் ஆண்டில் அமெரிக்க விண்வெளி வீரர்கள் சந்திரனில் இறங்கியதை நாம் அறிவோம்தற்காலத்தில் ஆள் இல்லாத விண்கலம் சூரியக் குடும்பத்திலுள்ள கோள்களை ஆராய்ந்து படங்களையும் அனுப்புகிறதுஅதுபோல வேறு விண்மீன் குடும்பத்திலுள்ள கோள்களையும் ஆராய்கின்றனர்அதற்கேற்ப உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உடையது எனக் கருதப்படும் சூரியக் குடும்பத்தைச் சாராத வேறொரு விண்மீன் (கிளீஸ் 581) குடும்பத்தைச் சார்ந்த புதிய கோள் ஒன்றை வானியல் அறிஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்


விண்வெளியில் விண்வெளி ஆய்வு மையங்கள் ஏற்படுத்தி அவற்றில் இருந்துகொண்டு விண்வெளி வீரர்கள் ஆய்வுகள் மேற்கொள்கின்றனர்சந்திரனுக்குச் செல்ல உதவிய இராக்கெட் இன்ஜின்கள் கிரகங்களுக்குப் பயணம் மேற்கொள்ள பயன்படாதுஅதைவிடச் சக்திவாய்ந்த இன்ஜின் தேவைப்படுகிறதுமேலும் போய்வர கால அளவு நம் வாழ்நாளை விட அதிகமாகும்மேலும் உயிர் காக்கும் சாதனம் ( Life Support System ) நீண்டதூரப் பயணத்திற்கு விண்வெளி வீரர்களுக்கு அமைத்துக் கொடுப்பதிலும் சிரமம் உள்ளதுஆகவே பூமிக்கு அருகிலுள்ள செவ்வாய் கிரகத்திற்குப் பயணம் மேற்கொள்வதே ஒரு பெரிய சவாலாக அமைந்துள்ளதுவிண்வெளி மீது பூரணமாக வெற்றி கொள்வது என்பது வரையறுக்கப்பட்ட ஒன்றாகும்இது குறித்துச் சொல்லப்படும் திருக்குர்ஆன் வசனத்தைப் பார்ப்போம்.

 


மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகிய எல்லைகளைக் கடந்துச் செல்ல நீங்கள் சக்திபெறுவீர்களாயின் (அவ்வாறே) செல்லுங்கள்; ஆனால் (வல்லமையும் நம்) அதிகாரமும் இல்லாமல் நீங்கள் கடக்க முடியாது.  (55 : 33)செயற்கைக் கோள்களை ஏவுகணைகளின் மூலம் விண்ணில் ஏவித் தகவல் தொழில்நுட்பத்திலும், அறிவியல் வணிகம் போன்ற பல்வேறு துறைகளிலும் பல நாடுகள் முன்னேறி வருகின்றன.  செயற்கைக் கோள்களின் மூலம் காலநிலை வேறுபாடுகளை முன்கூட்டியே அறிந்து அதற்கேற்றால்போல் பாதுகாப்பாகவும் செயல்படுகின்றன. அப்படிச் செயல்பட்டாலும் அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று கண்டம் விட்டுக் கண்டம் பாய்ந்து தாக்கக் கூடிய ஏவுகணைகளை உலக நாடுகள் போட்டி போட்டுக் கொண்டு தயாரிக்கின்றன. ஏவுகணைச் சோதனைகளின் வெற்றிக்களிப்பில் திளைக்கின்றன.  இது அறிவு உலகின் உச்சக்கட்டமா இல்லை அழியப்போகும் உலகின் ஆரம்பக்கட்டமா?  ஆனால் மனிதனுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தும் வரை அவை அல்லாஹ்வின் அருட்கொடைகளாகும்.இவ்வாறு இறைவனது அருட்கொடைகளை மனிதனின் அறிவியல் கண்டுகொண்டது.  அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்திலும் இறைவனது படைப்பிலுள்ள பல்வேறு சக்திகளே மூலப் பொருள்களாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன.  ஆனால் அவற்றைக் கொண்டு மனிதன் தன் அறிவு வீச்சால் பல சாதனைகளை ஏற்படுத்தி வசதியான வாழ்க்கையை மேற்கொண்டுள்ளான்.   இச்சாதனைகளுக்குக் காரணம் மனிதனது பெருமூளையின் அதிக மடிப்புகளுடன் கூடிய வளர்ச்சி பெற்ற முன் பகுதியே (Front lobe of the cerebrum of the brain) ஆகும்.பிரத்தியேகமாக அமைந்த இப்பகுதி மனிதனுக்கு மட்டுமே இறைவன் அருளியது. விலங்கினங்களுக்கு இப்பகுதி இவ்வாறு அமையவில்லை.  ஆக, நம் அறிவியல் சாதனைகளுக்குப் பிறப்பிடமான மூளையின் முன் பகுதியும் இறைவன் அளித்துள்ள அருட்கொடையே.  ஆனால் மனிதனுக்கு நலன் பயக்கும் அறிவியல் சாதனைகளே இறைவனது மறைமுகமான அருட்கொடைகளாகும்.  இவ்வாறு மனிதனை படைப்பாகப் படைத்திராவிட்டால், காற்றில் பறந்து கொண்டோ அல்லது கடலில் நீந்திக் கொண்டோ அல்லது தரையில் மேய்ந்து கொண்டோ இருக்க வேண்டிய ஒரு நிலை நமக்கு இருந்திருக்குமல்லவா? அப்புறம் அறிவியல் சாதனைகள் நிகழ்த்துவது எங்ஙனம்? ஆக, திடமாக நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம் (95:4) என்றும் மனிதப் படைப்பே ஓர் அருட்கொடைதான் (96:23) என்றும் இறைவன் கூறுவது மிகவும் பொருத்தமானதே.

 


அறிவுக்கும், அறிவியல் சிந்தனைக்கும் பிறப்பிடமான மூளையின் முன்பகுதியே, உண்மை பேசுவதற்கும், பொய்யுரைப்பதற்கும், நல்லவை மற்றும் அல்லவை செய்வதற்கும் பிறப்பிடமாக உள்ளது என்பதை உடற்செயலியல் வல்லுநர்கள் (Physiologist) தங்கள் ஆய்வின் மூலம் அறிவித்துள்ளனர்.மனிதனுக்கு அறியாதவற்றையயல்லாம் அறிவித்துக் கொடுத்த மூளையின் இந்த அறிவு மையமே இறைவனையே நிராகரிக்கத் தூண்டுகிறதுநபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கஃபாவில் தொழுவதைத் தடுத்த இறை நிராகரிப்பாளர்களை நோக்கிப் பின்வருமாறு இறைவன் கூறுகிறான்:நிச்சயமாக மனிதன் வரம்பு மீறுகிறான் அவன் தான் (இறைவனிட மிருந்து) தேவையற்றவன் என்று காணும் போது.  (96:6-7) அப்படியல்ல, அவன் விலகிக் கொள்ளவில்லையானால் தவறிழைத்துப் பொய்யுரைக்கும் முன் நெற்றி உரோமத்தைப் பிடித்து அவனை இழுப்போம்  (96:15-16)மேலே சொல்லப்பட்ட வசனத்தில் தவறிழைத்துப் பொய்யுரைக்கும் முன் நெற்றி உரோமத்தைப் பிடித்திழுப்போம் என உருவகமாகச் சொல்லப்பட்டாலும் முன் நெற்றியின் உள்ளே உள்ள தவறிழைத்துப் பொய்யுரைக்கும் மூளையின் முன் பகுதியையே இறைவன் குறிப்பிடுகிறான்இவ்வாறு அறிவியலார் மூளையின் முன் பகுதியைப் பற்றி இன்று கூறுவதை இறைவன் அன்றே தன் திருமறையில் அறிவித்து விட்டான்இறைவன் நேரடியாகவும், மறைமுகமாகவும் மனித சமுதாயத்திற்கு அளித்துள்ள அனைத்து அருட்கொடைகளுக்கும் நன்றி செலுத்தும் அடியானாக இருப்போம்.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகர்க்கு.என்று திருக்குறளில், ஒருவன் செய்த நன்றியை மறந்தவனுக்கே உய்வில்லை என்று கூறியிருப்பதைப் பார்க்கும்போது இறைவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி பகராது, மறந்து இருக்க மனம் எவ்வாறு துணியும்?தொகுத்தவர் : ஆஷிகுல் கலீல் B.Com, திருச்சி.