ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

அமுத மொழிகள்

அஸ்ஸையித்  கலீல் அவ்ன்  மௌவ்லானா அல்ஹஸனிய்யுல்   ஹுஸைனிய்யுல் ஹாஷிமிய் அவர்கள் விளக்கம்பூரண ஞானத்தை அடைந்த பூரண ஞானி தன்னுள்ளத்தே ஹக்கை இருத்தித் தானே தானாய் ஹக்கில் ஹக்காய் மிளிர்கின்றான். வேதமே அவனாய் அவனிடத்து இருந்து வெளிவருவன ஹக்கிலிருந்து வெளிவருவனாய் உள்ளன. எல்லாம் நானே எனும் ஏக தத்துவத்தைத் தன்னிற் பொதிந்து ஏகனாய்த் திகழ்கின்றான். ஜகஜோதி தான் ஆகின்றான். நானே என்கின்றான்.ஃபிலாஸஃபி (தத்துவம்) ஸயன்ஸ் (விஞ்ஞானம்) ஆகிய இவற்றில் மேலானது 
ஹக்கு ஒன்று என சிந்தித்தலாகும். 


ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தற்பெருமை காட்டினார்களா? ஆடு மேய்த்தார்கள்.  ஏழைகளுக்கு உதவி செய்தார்கள்.  அல்லாஹ் அவர்களைப் பெருமைப்படுத்தினான்.  பெருமையை நாடுபவர்களுக்கு அல்லாஹ் கொடுக்க மாட்டான். நாடாதவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான்.


நமது தந்தை நாயகமவர்கள் அருளிய ராத்திபை தவறாமல் ஓதி வாருங்கள்.  அதில் நிறைய அனுகூலங்கள் உள்ளன. ராத்திபு ஒரு பெரிய நிஃமத் ஆகும்.


நம் கையைப் பிடித்தோர் வாழ்வு பெற்றோராவர். இறைவனின் விடயங்களிலும்  ஞானகுருவின் புரிதலை குதர்க்கம்விட்டகல்தலும் வெற்றி, தோல்வி, சந்தோ­ம், சுகம், நோய் போன்றவைகளிலிருந்து இறைவனால் விதிக்கப்பட்ட கற்பனைகளை முரீது பொருந்திக் கொள்தலும்  பேணிக் கொள்ளப்பட வேண்டப்படுவன. 

வலிமார்களிடம் வஸீலா வைத்துக் கேட்கலாம்.  வலிமார்களிடம் நேரடியாகவும் கேட்கலாம்.

 
எங்கேயோ இருந்து கொண்டு  குன் என்று சொல்லவில்லை. அதற்குள்ளிருந்தே சொன்னதுதான்.  ஆட்டமில்லாமலிருந்தது.  (அமா) பின்னர் அசைந்தது.

நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் வழியில் நின்று, ஆன்மீக சிந்தனையோடு தானும் வாழ்ந்து, பிறரையும் வாழச் செய்வதன் மூலமே உலகில் அமைதியை உருவாக்க முடியும்.

பஞ்ச பூதங்களல்லாத வேறு பூதங்களில்லை.  பூதங்கள் அனைத்தும் சேர்ந்த நிலை அமாவாகும். 

கராமத் ஒரு பெரிய வி­யமேயல்ல.  ஒன்று நிகழ வேண்டும் என நினைத்தால் அது நிகழ்ந்து விடும்.  சில ஆத்மப் பிள்ளைகள் சில வி­யங்கள் குறித்து எங்களுக்குக் கடிதம் எழுதுவார்கள்.  அவற்றிற்கு மறுமொழி எழுதுவதற்கு முன்னரே அவரவர்கள் எழுதிய காரியங்கள் கைகூடிவிடும்.

ஞான சபையின் முக்கிய நோக்கம் என்னவென்றால் தாங்கள் ஞானத்தை அறிந்து அதனை எங்களுக்குள்ளே வைத்துக் கொண்டிருப்பது மட்டுமல்ல; எங்களால் முடிந்த அளவு எங்களோடு நெருங்கியவர்களுக்குச் சிறிது சிறிதாவது அவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

முரீதுகள் எப்போதும் இஸ்லாமிய முறைகள் தவறாமல் இருக்க வேண்டும்.  இஸ்லாம் என்னென்ன முறையில் மக்களை வழிநடத்துகிறதோ அல்லாஹ் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொல்லியிருக்கின்றார்களோ அந்த முறையில் நடந்து ­ரீஅத்திலேயே நடந்து , அந்த  ­ரீஅத்தையும் பாதுகாக்கும் வேலியாக இருந்து - ஹகீகத்து, மஃரிபத்து இவைகளைக் கற்று, அதன்படி நிற்க வேண்டும்.ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து எழுதுவதும் பாடுவதும் மிகச் சிறப்புக்குரியவை; அவ்வாறு புகழ்பவர்களும் பாடுபவர்களும் நிச்சயமாகவே சொர்க்கவாசிகள்.மழை பெய்யும்போது பெய்யும்.  ஆனால் மழை வந்த பின்னர்.. இப்படி மழை பெய்கின்றதே..வேலையைக் கெடுத்துவிட்டதே.. என்றெல்லாம் ஏசத் தொடங்கிவிடக் கூடாது. 


 
கீழான எண்ணத்தை எப்படிப் போக்குவது? ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் இப்படி நினைத்தார்களா? என நினைக்க வேண்டும்!


எவ்வளவுக்கு எளிமையோ அவ்வளவுக்கு கூலி - உயர்வு அல்லாஹ் தருவான்.


எம்மையடையாது உலகத்திலே மரித்துப் போகிறவர்கள் அவ்வுலகிலே கைதேசம் அடைகிறார்கள்.  ஏனெனில் நாமே உத்தம நபியின் உண்மைத் தோன்றுதலாகும்.  அறியாதவர்கள் இதனைப் புதிராய்க் கொள்வார்கள்.  அவர்களுக்கே சஞ்சலம்.  நம்மிடம் தஞ்சம் புகுதாதவர்கள் அங்கு யாரிடம் தஞ்சம் புகுதுவர்.


பரிசுத்த ஹக்கினுக்கு ஓர் இடம் கொடுக்கிறார்கள்.  வானத்தைத் திண்மப் பொருளாகக் கொண்டு அர்ஷ் எனும் ஒன்றை வானத்தில் வைத்து அதில்தான் ஹக்கு இருக்கிறதாக நினைத்து மக்கள் வணங்கி வருகிறார்கள்.  இது மகாபெரும் ´ர்க்காகும்.  இதற்குத் தெளபா இல்லை. 


இரு கைகளின் உட்புறத்தில் காந்த சக்தியுள்ளது.  அவற்றை இணைத்து கையேந்தி துஆ (பிரார்த்தனை) செய்யும்போது ஆகாயத்திலுள்ள காந்த சக்தியுடன் தொடர்புண்டாகிறது.  எனவே, துஆச் செய்யும்போது உடல் சக்தியும் ஆகாய சக்தியும் இணைந்து அவ்வப்போது கேட்கக்கூடிய பிரார்த்தனைகளுக்குப் பிரதிபலன் உடனுக்குடன் கிடைக்கின்றது. 

மஹ்தி என்றால் நேர்வழி காட்டுபவர் என்று பொருள்.  நேர்வழி காட்டுபவர்  அனைவரும் மஹ்தீதான்.  ஒரு வகையில் தாய் தந்தையரும் மஹ்திகள்தாம்.


ஹகீகத்தின் இன்பத்தைக் கடும் நெருப்பில் வேகும்போதும் கடும் குளிரில் நடுங்கும்போதும் வெட்டப்பட்டு எரிக்கப்படும்போதும் காணலாம்.


தொழுகும்போது பல எண்ணங்கள் வரும்.  இதை யாராலும் தடுக்க முடியாது.  கடலில் அலை இருக்கும் வரை அங்குமிங்கும் வீசிக் கொண்டுதான் இருக்கும்.  இதற்கு முடியுமான அளவு எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்.  திடீரென்று நாம் தொழுகின்றோம் என்ற எண்ணமும் வரும்.  நம் எண்ணங்களை ஓதுகின்ற ஓதல்களில் போக்க வேண்டும்.
 
நபிமார்களுக்குப்பின் ஜிப்ரயீல் (அலை) அவர்களுக்கு வேலை இல்லையயன நினைத்துக் கொண்டுள்ளனர். பொருட்கள் மனிதர்களெல்லாம் உள்ளவரை ஜிப்ரயீல் (அலை) இருப்பார்கள்.  அறிவு சம்மந்தமான அனைத்தும் ஜிப்ரயீல் (அலை) தான்.  அறிவுகள் அனைத்தும் அதனுள் அடக்கம்.

தாய் தகப்பரைக் கவனித்தால்தான் கடைசியில் முக்தி இருக்கும்.  அப்படியில்லாமல் எல்லா நல் அமலைச் செய்தாலும் பயனில்லை.

மனிதன் ஒருவனுக்கு வாழக்கூடிய எல்லா அம்சங்களும் ரசூல்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடம் இருந்தது.  நபி எனச் சொல்லி அவர்கள் அப்படியே இருந்துவிடவில்லை. 

எல்லோரும் நீதம் பேசுகிறார்கள்.  யாரும் நீதமாக நடப்பதில்லை.  எதைப் பேசினாலும் மனந்திருந்தி பேச வேண்டும்.  இல்லையயனில் அது வெறும் ஊருக்கு உபதேசமாகப் போய்விடும். 

நம்மிற் சிலர் நம் மனைவிமாரையும் நம் பெண் பிள்ளைகளையும் அலங்கரித்து ஆண் துணையின்றிப் பாதையில் அனுப்புகின்றோம்.  இஃது இஸ்லாமிய சட்டங்களுக்கும் ஒழுங்கு முறைகளுக்கும் இஸ்லாமியரான எமக்கும் பொருத்தமானதா? என்பதை  உணர வேண்டும்.  அவர்களை எத்தனை கண்கள் கொண்டு இழிவான வருணனைகளை வருணிக்கும்?


எம்பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் பிறந்த பெருநாளின் சிறப்பும் மேன்மையும் அம்மாதத்தின் ஒவ்வொரு நாளிலும் உண்டு.  எனவே அவ்வொரு மாதமே ஈமான் கொண்ட முஸ்லிம்களுக்குப் பெருநாளாகும். 


விலாயத் - இயற்கையாக ஏற்படுவதுதான்.  இறையோடு இரண்டறக்கலந்த நிலையில் இருப்பவர்கள் தாம் விலாயத்தையுடையவர்கள்.  ஹக்கோடு சம்மந்தப்பட்ட நேரங்கள் உண்டு.  அந்த நேரத்தில்தான் எல்லாம் தெரியும்; மற்ற நேரங்களில் இல்லை.  வலிமார்களுடைய நிலை எந்த நாளுமே மிஃராஜ்தான்.  ஹக்கோடு சம்மந்தப்படுவதெல்லாம் வலிமார்களுக்கு மிஃராஜ்.  முஃமின்களுக்குத் தொழுகைதான் மிஃராஜ். 


மிஃராஜின்போது இறைவனுக்கும் இரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கும் நிகழ்ந்த உரையாடலாகிய அத்தஹிய்யாத் (தின்பொருளைக் கவனித்தால்) அல்லாஹ் - இரசூல் எதிரேயிருந்து பேச்சுக்களைப் பரிமாறிக் கொள்வது  போல தெரிகிறது.  ஆனால் இரண்டுமே ஒன்றாய் இருப்பதுதான்.நல்ல முறையில் சம்பாதித்து வியாபாரம் செய்ய வேண்டும்.  புத்திசாலித்தனமாக வியாபாரம் செய்ய வேண்டும்.  வியாபாரம் செய்வது நாம் வைத்திருக்கும் முதலீட்டில் பாதித் தொகையை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும்.  நஷ்டமாகிவிட்டால் மீதிப் பாதித் தொகையை வைத்து அடுத்து ஏதும் செய்யலாம். 


வரவு செலவு கணக்குகளை  சரியானபடிப் பார்த்துக் கொள்ள வேண்டும்.  நல்ல எண்ணம் மனதில் இருக்க வேண்டும்.  பெரிய முதலீட்டை வைத்து வியாபாரம் செய்வதை விட, சிறிய முதலீட்டில் வியாபாரம் செய்வது சாலச் சிறந்தது. தொழில் முன்னேற்றத்திற்காகக் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேகரித்து வையுங்கள்.  சம்பாதிக்கின்ற பணத்தை முழுவதும் வீட்டுக்கு அனுப்ப இயலாது.  ஒரு குறைந்த தொகையை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.  கணவன் மனைவி இரு பேர்களில் யாரேனும் ஒருவர் புத்திசாலியாக இருக்க வேண்டும்.  அப்போதுதான் அந்தக் குடும்பம் முன்னேற்றம் அடையும்.டி.வி பார்ப்பது ஹராம் அல்ல. அறிவுப் பூர்வமான வி­யங்களை அதில் காட்டுகிறார்கள். அதைப் பார்ப்பது ஹராமல்ல. தேவையில்லாத ஆபாசமானவற்றைப் பார்க்கக் கூடாது. 


மனிதனுடைய வாழ்க்கையே மனவலிமை தான். ரசூல்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் மனவலிமை மிக்கவராக இருந்தால்தான் நாம் முஸ்லிம்களானோம். 


செய்ந்நன்றி மறவாதே.  செய்த நன்றியை இயற்கை பதிவு செய்து வைத்திருக்கும்.  மறந்தால் நீ உன்னை மறந்தால் கேடு உன்னைச் சாவும் வரை சிறிது சிறிதாய் வந்தடையும்!  நீ இதற்குக் காரணம் யாதென்பதை அறிய மாட்டாய்.  ஆயினும் நீயேதான் இதற்குக் காரணமாவாய்.