ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

காவியம்

    

உமர் (ரலி) புராணம்


ஆசிரியர்

ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா

    அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்


 

 

அகழ்யுத்தம்

 

 

 

  ஆகலி னீவிர் அரியதோ ருபாய

  வாகுலம் செய்திடின் வந்திடும் வழியே

  ஏகினே குரைஷ்களி லிருபெருந் தலைவர்

  வாகாய் நந்தலை வருதல் வேண்டும்
கொண்டுகூட்டு:  


(இவ்வாறு முஸ்லிம்கள் யுத்தஞ் செய்து மதீனாவையும் மதீனாவைச் சூழவுள்ள பகுதிகளையும் பிடித்துக் கொள்வர்) ஆகலின் நீவிர் அரியசெய்திடின் (வெற்றி) வழியே வந்திடும். குரைஷ்களில் இரு பெருந்தலைவர் வாகாய் நம் தலை வருதல் வேண்டும்.பொருள்


இவ்வாறு  முஸ்லிம்கள் யுத்தஞ் செய்து மதீனாவையும் அதைச்சூழ உள்ள பகுதிகளயும் கைப்பற்றுவார்கள்ஆதலால் அவர்களுடன் யுத்தஞ்செய்யப் போதல் நன்றன்று. (இது பனீகுரைளா வர்க்கத்திடம் நயீம் போய்க் கூறியது)ஆதலினால் நீங்கள் (பனிகுரைளாக்கள்) நீங்கள் மாறுபாடான அருமையான ஓர் உபாயம் செய்கஅவ்வாறு செய்திடின் வெற்றிக்கு வழி வந்துவிடும். இந்த வழியிற் சென்றீர்களாயின் வெற்றிவந்து விடும். ஆதலினால் குரைஷ்களில் இரு பெருந்தலைவர்கள் ஒழுங்குப்படி நம்மிடம் (குரைளா) வருதல் வேண்டும்  என்றுபாயம் கூறினர் நயீம் அவர்கள்.குறிப்புஆகலின் : ஆதலினால்நீவிர் : நீங்கள்ஆகுலம் : மாறுபாடுவாகாய் : ஒழுங்குப் பிரகாரம் தலைஇடம்ஏகினேஅவ்வாறு செல்லின்.