ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai   »  2015   »  July2015   » 

ஹதீஸ் பக்கம்நான் என் மாமா ஹின்த் இப்னு அபீஹாலா அவர்களிடம் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் அங்க அடையாளங்களைப் பற்றி வினவினேன்அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி வர்ணிக்கக் கூடியவர்களாக இருந்தார்கள்எனவே அவர்களைப் பற்றி (அறிந்து) மனனம் செய்து கொள்ள ஆசைப்பட்டேன்அவர்கள் கூறினார்கள் :நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கண்ணியம் வாய்ந்தவர்களாகவும் பிறரால் மதிக்கப்படுபவர்களாகவும் இருந்தார்கள்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் முகம் பவுர்ணமி இரவின் சந்திரன் போல் பிரகாசிக்கும்நடுத்தரமான உயரமுடையவர்களை விட சற்றுக் கூடுதலாகவும், நெட்டையான மனிதர்களை விட சற்றுக் குறைவானவர்களாயும் இருந்தனர்தலை நடுத்தரத்தை விடச் சற்றுப் பெரியதாக இருந்தது.  அவர்களின் (தலை) முடி சற்று சுருண்டிருந்ததுதலையில் தற்செயலாக வகிடு படிந்துவிடுமாயின் அதை அப்படியே விட்டுவிடுவார்கள்இல்லையயனில் (வகிடு எடுப்பதை) பிரதானப்படுத்துவதில்லை. முடியை வளர விட்டிருந்தால் அது காதின் சோனையைத் தாண்டிவிடுவதும் உண்டுமேனி ஒளி வீசிக் கொண்டிருக்கும்.படர்ந்த நெற்றி, அடர்ந்த புருவம், இரு புருவங்களும் சேர்ந்திருக்காதுஇரு புருவங்களுக்கு மத்தியில் ஒரு நரம்பு இருக்கும்கோபம் ஏற்படும்போது அது எம்பிக் கொள்ளும்அவர்களை முதன் முதல் காண்போர் மூக்கு நீண்டதாகக் காண்பர்ஆனால் கவனித்துப் பார்த்தால் அது ஒளி வீசிக் கொண்டிருக்கும்.  (அதனை நீண்டதென எண்ணிக் கொள்வர்தாடி அடர்ந்திருக்கும்கன்னங்கள் மிருதுவாக இருக்கும்வாய் அகன்றிருக்கும்பற்கள் இடைவெளி விட்டவையாக இருக்கும்நெஞ்சிலிருந்து தொப்புள் வரை (கோடு போன்ற) முடியிருக்கும்அவர்களின் கழுத்து சுத்தமான வெள்ளியால் செதுக்கப்பட்ட உருவத்தைப் போல் அழகாயிருக்கும்அவர்களின் அவயங்கள் அனைத்தும் நடுத்தரமானதாகவும் சதைப் பிடிப்புள்ளதாகவும் இருக்கும்வயிறும் நெஞ்சும் சமமானதாக இருக்கும்நெஞ்சு விரிந்திருக்கும்இரண்டு தோல் புஜங்களுக்கு மத்தியில் இடைவெளி அதிகமாக இருக்கும்மூட்டுக்கள் உறுதி வாய்ந்தவையாக இருக்கும்ஆடைகளை அகற்றும் போது உடல் பிரகாசிக்கும்நெஞ்சுக்கும் தொப்புளுக்கும் மத்தியில் கோடுகள் போன்ற (நீண்டமுடியிருக்கும்மார்பிலும், வயிற்றிலும் முடியிருக்காது.

  

 

முழங்கைகள், தோள்புஜங்கள்,நெஞ்சின் மேற்பகுதி ஆகியவற்றில் முடியிருக்கும்இரு உள்ளங்கையின் மூட்டுக்கள் நீளமாக இருக்கும்உள்ளங்கை விரிந்திருக்கும்.  (பெரிதாய் இருக்கும்).  உள்ளங்கையும் பாதமும் சதைப்பிடிப்புடன் இருக்கும்கை, கால் விரல்கள் பொருத்தமான அளவிலிருக்கும். பாதங்கால் சற்றுக் குழிந்திருக்கும்இரு பாதங்களும் சமமாய் இருக்கும்.  (பாதங்கள் மிருதுவாய் இருப்பதால்) அதன் மீது தண்ணீர் பட்டால் தங்குவதில்லைநடக்கும்போது  முன்புறம் சாய்ந்து நடப்பார்கள்பாதத்தைப் பலமாக எடுத்து மெதுவாக வைப்பார்கள்அகலமாக அடியயடுத்து வேகமாக நடப்பார்கள்நடக்கும்போது மேடான பகுதியிலிருந்து பள்ளமான பகுதியில் இறங்குவது போல் (அவர்கள் நடை) இருக்கும்யாராவது அழைத்தால் திரும்பும் போது (முகத்தை மட்டும்திருப்பாமல்) முழுமையாகத் திரும்புவார்கள்.  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பார்வை பூமியைப் பார்த்தே இருக்கும்.  (நடக்கும் போது) அவர்களின் பார்வை வானத்தைப் பார்ப்பதை விட பூமியைப் பார்ப்பது அதிகமாக இருந்ததுஒரு பொருளைச் சாதாரணமாகப் பார்ப்பார்கள்தன் தோழர்களை முன்னால் செல்ல விட்டு அவர்கள் பின்னால் வருவார்கள்.  (தன்னை) சந்திப்பவர்களுக்கு அவர்களே ஸலாம் கூறி ஆரம்பிப்பார்கள்.  


(அறிவிப்பாளர் : ஹஸன் இப்னு அலீ (ரலி))


முத்திரை


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் தம் தோழர்கள் சிலருடன் இருந்த போது நான் அங்கு சென்று அவர்களின் பின்னால் சுற்றிச் சுற்றி வந்தேன்... என்னுடைய நோக்கத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் அறிந்து கொண்டார்கள். தம் முதுகிலிருந்த மேல்துண்டை அகற்றினர்கள்.  அப்போது நபித்துவ முத்திரையிருந்த இடத்தை இரண்டு தோற்புஜங்களுக்கு இடையில் முன் கைவிரல்களை மடக்கி வைத்திருந்தால் எப்படியிருக்குமோ அது போன்று (கொழுக்கட்டை போன்று) இருந்தது.  அதைச் சுற்றிலும் கருநிற மச்சங்கள் போலிருந்தன.


பின்னர் நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னோக்கி அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களின் பாவங்களை மன்னித்து விட்டான் என்று கூறினேன்.  அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உமக்கும் (அல்லாஹ் மன்னிப்பை வழங்குவானாக!)  என்று கூறினார்கள்.  அப்போது (அங்கிருந்த) கூட்டத்தினர் உமக்காக நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் பாவ மன்னிப்பு கேட்டுள்ளார்கள் என்றார்கள்.  அதற்கு நான் ஆம் என்று கூறிவிட்டு உங்களுக்கும் தான் என்று கூறி உன் பாவத்திற்கும் முஃமினான ஆண்கள், முஃமினான பெண்கள் (பாவத்திற்காகவும் நபியே!) பாவ மன்னிப்புத் தேடுவீராக! என்ற (47 : 19) வசனத்தை ஓதிக் காட்டினேன்.


அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு ஸர்ஜிஸ் (ரலி)