ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை


திருக்குறள்


  அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை

  திறனறிந்து தேர்ந்து கொளல்.


அறத்தின் நுட்பங்களை அறிவதோடு தம்மைவிட அறிவில் முதிர்ச்சியுடைய பெரியோரின் நட்பு கிடைத்தற்கரியது என உணர்ந்து அவரது நட்பைப் பெறவேண்டும். (441)

 

 

ஒரு குறள்

 

அளவாக  இன்றேல்  ஆறாக செல்வம்

அளிப்பான்அல் லாஹ்நாடு வோர்க்கு.

 

 


மிஃராஜுக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரயீல் (அலை) என இரண்டு பேர் சென்றார்கள்அங்குப் போனவுடன் இரண்டு பேர் நீங்கி தனியாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் மட்டும் ஓர் ஆளாக ஆகிவிட்டார்கள்ஜிப்ரயீல் (அலை)அவர்களுக்கு அதற்கு மேல் போக இயலாதுஅதாவது அறிவோடு சேர்ந்த வி­யம் அந்த அளவோடு போய்விட்டதுஅதற்கு அப்பால் போனது அறிவுக்கும் அப்பாற்பட்டது.  


(சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்)

 

திருக்குர்ஆன் ஷ­ரீஃபை எதற்கும் ஒப்பிட முடியாதுதிருக்குர்ஆன் ­ஷரீஃப் என்பது பரிபூரணத்திலிருந்து பரிபூரணமாய் பரிபூரணமாகவே வெளியானதுதிருக்குர்ஆன் ­ஷரீஃப் என்பதே அண்ட பிரபஞ்சமே தான்திருக்குர்ஆன் ­ரீஃப் படைக்கப்பட்டதோ சமைக்கப்பட்டதோ அல்லதிருக்குர்ஆன் ஷ­ரீஃபில் கூறப்படும் எல்லாக் கருத்துக்களும் எக்காலத்திற்கும் பொருத்தமானதாகவே உள்ளன.    


(சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் 

 

 

 

அறிந்தவனுக்கு தஸ்பீஹும், எண்ணிக்கையும் தேவையில்லைஒரு முறை அல்லாஹ் என்று கூறினாலே போதும்


 இக்கால ஆலிம்களை விட நம் பிள்ளைகள் மேலானவர்கள்

 

 ( சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்)

 

 

 

அக்பரும் துறவியும்

 

 

அக்பர் சக்கரவர்த்தி மாளிகைக்குள் தங்குதடையின்றிச் செல்லுவதற்கு சாதுக்களுக்கு உரிமை இருந்ததுஒரு நாள் அக்பர் இறை வணக்கத்தில் ஈடுபட்டிருந்த பொழுது சாது ஒருவர் வந்து ஒரு பக்கம் அமர்ந்திருந்தார்எனக்கு இன்னும் அதிகமான செல்வம், ராஜ்யம் முதலியவைகளை இறைவா, தந்தருள்வாயாக! என்று இயம்பித் தமது பிரார்த்தனைகளை அவர் முடிவுக்குக் கொண்டு வந்தார்அதைக் கேட்டதும் சாது அமைதியாக எழுந்து வெளியில் போக ஆரம்பித்தார்ஆனால் சற்று அமர்ந்திருக்கும்படி அக்பர் சைகை செய்தார்.பிரார்த்தனையை முடித்துக் கொண்ட பிறகு தம்மிடம் வந்து சாது பேசாது எழுந்து போனதற்குக் காரணம் என்னவென்று அவர் கேட்டார்வேந்தே, அதையயல்லாம் தங்களிடம் விளக்க வேண்டிய அவசியமில்லையயன்று தோன்றுகிறது என சாது விடை கொடுத்தார்ஆயினும் அவர் வந்த காரியத்தைக் கூறியாக வேண்டும் என்று அக்பர் வற்புறுத்தினார்சாது பகரலானார் : நான் வனத்தில் ஒரு குடிசையில் வசித்து வருகிறேன்என்னைப் பார்க்க வருகிறவர்களைச் சரியாக உபசரிப்பதற்குத் தங்களிடமிருந்து ஏதாவது பொருளுதவி பெற்றுப் போகலாம் என்று வந்தேன்அப்படி வந்த நான், தாங்களே ஒரு யாசகனாக இறைவனிடம் விண்ணப்பித்துக் கொண்டிருந்ததைக் கேட்டேன்உங்கள் போன்ற ஒரு யாசகனிடம் நான் யாசிப்பதை விட எந்தப் பரமனிடம் நீங்கள் விண்ணப்பிக்கிறீர்களோ அந்தப் பரமனிடம் நானும் விண்ணப்பித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிப் போனார்.


(தகவல்: திவ்யா பிரபு ..எஸ்)

 

  

 

மனித வாழ்வில் மனிதனுக்கு மிக முக்கியமானது நேர்மையாகும்நேர்மையும் நீதமும் வாழ்வின் முக்கிய அம்சங்களாகும்நேர்மையுள்ளவர்கள் பாவங்கள், பொய்யுரைகள், தகாத செயல்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்பட்டவர்களாக உள்ளார்கள்


ஒவ்வொரு முரீதான ஆண்கள் தத்தம் மனைவிமார்களிடத்து தமக்குத் தெரிந்த ஞான விளக்கங்களைக் கூற வேண்டும்


வஹ்தத்துல் வுஜூதைக் கொண்டு வந்ததே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள்தாம்அல்லாஹ் என்னும் சொல்லே வஹ்தத்துல் வுஜூத் தான்கராமத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அறிவு ஞானத்துக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.


பெருமானார்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், ஸஹாபாப் பெருமக்களுக்கு ஆசிரியராக இருந்து இஸ்லாம் எனும் தரீக்காவை (நேரான வழியை) கற்றுத் தந்தார்கள்


குழந்தைப் பருவத்திலே தானம் - தர்மம் செய்யும் பழக்கம் பிள்ளைகளுக்கு ஏற்பட வேண்டும்பிள்ளைகளுக்கு ஒழுங்கு முறைகளைக் கற்றுத் தர வேண்டும்


மனிதனின் உடல் திக்ரு செய்து கொண்டே இருக்கிறதுஆனால் அவனுக்குத் தெரியாதுஎன்ன செய்வது? அவன் மறந்து விடுகிறான்அவன் தன் உடலை விட மோசமாக இருக்கின்றான்அவன் தன் மூளையை விட மோசமாக இருக்கின்றான்.  


       (சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்

 

  

மஉரூபுல் கிர்கீ (ரலி) அவர்கள், நான் ரப்பு என்னை நீங்கள் வணங்குங்கள் என்றார்கள்இது பொது மனிதனுக்கு விளங்க முடியாதுஎனவே பொது மனிதன் இதில் தலையைப் போட்டு உடைத்துக் கொள்வதும் வீணான சர்ச்சைகளை ஏற்படுத்திக்  கொள்வதும் தேவையில்லாத வி­யம்பொது மனிதனுக்கு இதில் நம்பிக்கையில்லையாயின் இதனை விட்டு ஒதுங்கிவிடுவதுதான் நல்லது

 

  (சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்

 பெண்களைத் துன்புறுத்துவது, மார்க்கத்தில் கூறும் சரியான காரணங்களின்றி விவாகரத்துச் செய்வது போன்ற பாபங்களிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்கணவனோ, மனைவியோ நோய்வாய்ப்பட்டுவிட்டால் கடைசி வரையில் ஒருவரையயாருவர் தாங்கிச் சிரமங்களைப் பொறுத்து அன்பு மயமான வாழ்க்கை வாழ வேண்டும்ஒரு துன்பம் நேர்ந்துவிட்டால் வாழ்வே முடிந்துவிட்டது என்று சோர்ந்துவிடாதீர்கள்.பெண்கள் பல்கலைக்கழகமாக விளங்கும் குடும்பத்தை உருவாக்குகிறவர்கள்பெருமானாரின் குடும்பவியலைப் படித்து புரிந்து கொள்வதே பெண்களுக்குச் சிறந்த கல்வியாகும்.  


(சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்