ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்எது பரிபூணமோ அஃதுவே அல்லாஹ். எது பரிபூரணமோ அஃதுவே எல்லாம்

எது பரிபூரணமோ அஃதுவே இறைவன். அந்தப் பரிபூரண இறையை விட்டும் நாம் எவ்வாறு பிரிந்திருக்கக முடியும்?

அல்லாஹ் என்பது ஒன்று அந்த ஒன்றே வெளியாகி எங்கும் பரிபூரணமாய் நின்றிலங்குகின்றது என்பதனைத் தான் தெய்வீகம் என்கிறோம்.

அல்லாஹ் என்றும் வார்த்தையையும் ஒளியையும், பள்ளியையும், மரம் - மட்டைகளையும் கல்லையும் மண்ணையும் வணங்குவதல்ல வணக்கம்.  உண்மையையறிந்து வணங்குவதில்தான் இன்பம் உள்ளது.  ஆதலால் நாம் நிச்சயமாக இறைவனை அறிந்து கொள்ளவில்லையோ என நினைத்து வணங்கிவரும் வணக்கங்களை விட்டுவிடுவதல்ல.  வணக்கங்கள் மிக முக்கியமானவை.  நிச்சயமாக இறைவனை அறியும் வரை வணக்கங்களை எப்படியும் செய்ய வேண்டும்.  இறைவனையறிந்து பின்பு அந்த வணக்கத்தில் இன்பம் பூரணமாய் ஏற்படும்.

தெளஹீது அறிவு எங்களுக்குக் கண்போன்றது. ஞானத்தை யறிந்தார் அனைத்தும் ஒன்றென நினைத்து வாழ்வர்.

வேறுபட்ட பொருட்கள் கண்பார் வைக்குத்தான் உண்டேயல்லாமல் எங்கள் உடல் முழுவதும் அறிவுக் கண்ணாகும் போது அவை யயல்லாம் ஒன்றாகவே தோன்றும்.


அங்கங்களை மட்டும் ஆராய்வதால் ஏற்படும் முடிவு இல்லை என்பதாகும்ஆயினும் முழுமையை முழுமையாக ஆராய்வதால் ஏற்படும் முடிவு உண்டு என்பதாகும்.


அல்லாஹ்வை ஆராயக்கூடாது, சிந்திக்கக் கூடாது எனச் சிலர் அறியாமையினால் கூறித் திரிகின்றனர்ஹக்கை அறியாமல் அவனை நாம் எங்ஙனம் வணங்க இயலும்? எனவே ஹக்கை அறிவது மிகவும் அவசியமாகும்.


இந்தச் சபை ஏற்படுத்தப்பட்டதன் நோக்கம் தவ்ஹீதென்னும் உயரிய கொள்கையை விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான்.


அல்லாஹ்வை - ஹக்காகக் காட்டித் தந்தவர்கள் எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.


அல்லாஹ் என்னும் ஒருவனே ஏகன் - அனைத்தும் அவனே என்பதுதான் வஹ்ததுல் வுஜூத் அகும்.  ஆதம் (அலை) அவர்களை என் உருவத்தில் படைத்தேன். எனது ரூஹை அவரிலே ஊதினேன் என ஏக இறை கூறுவதே தவ்ஹீதின் கருத்திற்கு

அடிப்படையாக இருக்கின்றது.  இதிலிருந்து (தஜல்லியாக) வெளியாகியிருப்பது ஹக்கே என்பதும் எல்லாமும் அதிலிருந்தே வெளியாயின என்பவையும் தெளிவாகின்றன! இதுவே தான் தவ்ஹீதும் ­ஷரீஅத்தும்.  இதனை எங்ஙனம் பிரிக்க இயலும்?


நீரில் இருக்கும் மீன் தான் நீரில் இருப்பதை அறியாமலேயே ஓடித்திரிகின்றதுநாம் ஆகாயத்துடன்....  நாம் பூரணமாய் ஒன்று சேர்ந்தவர்கள் என்பது எம் மனதிற்தோன்றுவதில்லை.


குர்ஆனின் தாற்பரியம்


குர்ஆன் என்பது யாரோ ஒருவர் எழுதிவைத்து வாசிக்கக்கூடிய புத்தகமல்லஅல்லது யாரோ ஒருவர் சொல்லக்கூடிய பேச்சும் அல்லகுர்ஆன் என்பது ஏக இறையின் பரிபூரண சக்தி எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாயிலிருந்து வெளிப்பட்ட பேருண்மைகளாகும்அந்தத் திருமறையை  நாம் அனுதினமும் ஓதி வருவது மிகவும் முக்கியம்!


தவ்ஹீதின் அடிப்படை


நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அன்பு கொள்ளுங்கள் என அல்லாஹ்தன் திருமறையில் இவ்வாறு கூறுமாறு ரஸுலுல்லாஹ் அவர்களை ஏவுகிறான். “நீங்கள் அல்லாஹ்வை  நேசிக்கிறவர்களாக இருந்தால் என்னை        (நாயகம் அவர்களை)ப் பின் பற்றுங்கள்: அல்லாஹ் உங்களை உகப்பான்உங்களுடைய பாபங்களையும் மன்னித்து விடுவான்” (3 : 31)


எனவே ரஸுல் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னபடி நடப்பவர்கள் அல்லாஹ்வின் மீது உகப்புடையவர்கள் ஆயின், அதற்கு மாற்றமாக நடப்பவர்கள் அல்லாஹ்வின் மீது உகப்புடையவர்களாஇல்லையே இல்லைஅப்படியாயின் அவர் நிலையயன்ன? எம்பெருமானாரைப் பின்பற்றி அல்லாஹ்வின் உவப்பைப் பெற்றுக் கொள்கிறவர்களுடைய பாபங்களும் மன்னிக்கப்படுவிதாகக் கூறப்படுகிறதுஎனவே ரஸுல் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றுகிறவர்களுடைய பாபங்கள் மன்னிக்கப்படுகின்றனஎன்பது நன்கு விளங்குகின்றது மேலும் ரஸூல் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதாவது.  “எவருமே தங்களது தந்தை, பிள்ளைகள் இன்னும் மனிதர்கள் அனைவரை விடவும் என்னை அதிகம் நேசிக்காதவரை உங்களில் ஒருவரும் ஈமான் கொண்டவராக முடியாது”.


(தொகுத்தவர்: எஸ். காஜா நஜ்முத்தீன்ஹக்கிய்யுல் காதிரி)