ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

கலீபா பெருந்தகைகள்


தமிழ்மாமணி, மெளலவி என்.எஸ்.என். ஆலிம். பி.காம்.திருச்சி

 


 

கலிபா அப்துல் கறீம் ஆலிம் ஜமாலி அவர்களுக்கு சங்கைமிகு நாயகமவர்கள் அருளிய பட்டோலை ஒன்றை ஈங்கண் காண்போம்...ஷைகு என்பவர் ஹாதீ (நேர்வழி காட்டுகிறவராவார்) (குத்பிய்யத்துடைய) ஷைகே அல்லாஹு தஆலாவின் மள்ஹாராவார்வேறொருவருமல்லாத தான் பின்பற்றும் ஷைய்களவிலே தான் (கல்ப்) மனதை நேமமாய்க் கட்டுப்படுத்தல் வேண்டும்தன்னில் அஸ்ரார்கள் (இரகசியங்கள்) வெளியாகவும் ஹக்கின் மள்ஹாரான ஷைய்கை இவர்தான் ஹக்கால் எமக்குக் குறிப்பாக்கப்பட்டவர் என உறுதியாக எண்ணிக் கொள்ள வேண்டும்.  


(உலகத்திலே பல ஷைய்குமார்களும், பல வலீமார்களும், பல குத்புமார்களும் இருந்தாலும் தரத்தில் உயர்ந்தவர் குத்புல் அக்தாபேயாவார்).  எனவே பல ஷைய்குகள் இவ்வுலகத்திலே நிறைந்திருந்தாலும் தான் பற்றிக் கொண்ட ஷைய்கு மூலமேயல்லாது தன்னுடைய எந்த நாட்டங்களும் ஹாஸிலாகாதுதன்னுடைய ஷைய்கு அல்லாத வேறொரு ஷைய்கில் தனக்கு இச்சையும் நாட்டமும் ஏற்பட்டாலும் (தான் முரீதல்லாத புறத்தால்) அவருடைய உபதேசங்களாயிருந்தாலும் வேறெதுவும் தன்னுடைய பாதினை (உங்ரங்கத்தை) திறந்துவிடாது.  


(ஷைய்குமாரைப்பற்றிய சில ஹதீஸ்களும் கொடுக்கப்படுகிறது) ஒரு ஷைய்காகிறவர் தம்முடைய கூட்டத்தில் ஒரு நபியின் உம்மத்துக்களுக்கு நபியைப் போலாயிருக்கும் என்பதாகும்.  (இப்படியான ஷைய்கு ஒரு வலிய்யோ அல்லது குத்போ அல்லது குத்புல் அக்தாபோ அல்லது பொதுவாக மேற்கூறப்பட்டவர்களின் கலீபாக்களாகவுமிருக்கலாம்).  இப்படியான ­ய்குகளின் (கலீபாக்களின்) முரீதுகள் தன் ஷைய்கையே பற்றிக் கொள்வதோடு, மேற்கூறப்பட்ட வலீமார்கள், குத்புமார்களின் துஆ, நிர்ணயம் இவைகளை மதிப்பாகத் தேடிக் கொள்ள வேண்டும்சிறப்பான ஒரு ஷைய்கிடத்தில் உதவி தேடுவது நபிகள் நாயகத்திடமிருந்து உதவி தேடுவது போலாகும்ஏனென்றால், பரிசுத்த ஹக்கிடமிருந்து ஜிப்ரீல் (அலை) மூலமாக நபிகள் நாயகத்துக்கு தீன் (மார்க்கம்) கிடைத்ததுஎனவே ஹக்கு அவர்களைத் தன் மள்ஹாராகத் தெரிந்து கொண்டது.

 

 

இவர்களிடமிருந்து பைஅத்துப் பெற்ற ஸஹாபாக்கள் அல்லது விஷேசமாக கலீபாக்களிடமிருந்து கிலாபத்தைப் பெற்ற சந்ததி வாரிஸ்களாக வந்தவர்களையே (முரீத்களையே) ஷைய்கு என்போம்இப்படியான ஷைய்கைப் பின்பற்றியவர்கள் பைஅத்  ஸில்ஸிலாவில் நபி (ஸல்) அவர்களைப் போய் அடைவதாலே நாயகத்தில் நின்றும் உதவி தேடியதாய் தன் ஷைய்கிடம் உதவியைத் தேடுவான்.  (இந்த முறையிலே முரீதிலோ, பைஅத்திலோ எம் குடும்பத்துக்கு நிகரான குடும்பம் எங்கும் இராதுஅல்ஹம்து லில்லாஹ்) நபி நாயகம் என் பாட்டனார்ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொடுத்து நான் வரை குத்புமாராகிய ஷைய்குமார்களே இங்கு வந்திருக்கிறார்கள்அல்ஹம்துலில்லாஹ்.

இந்தப் பல கயிற்றைப் பற்றிப் பிடிக்கக் கிடைத்த பாக்கியம் உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும் உரிமையானதுஅல்ஹம்துலில்லாஹ்.  தன் ஷைய்கின் பேரிலும், அவர் ஏவல் பேரிலும் அன்பு, ஆதரவு, ஆசை இவைகள் அவசியம் இருத்தல் வேண்டும்தன்னுடைய ஷைய்கையே கிப்லாவாகக் கொள்ள வேண்டும்தன் ஷைய்கில் ஒரு முரீதுக்கு வெறுப்பிருந்தால் தன் பைளி (அருள்)னுடைய வாசல் அடைக்கப்பட்டுப் போவதோடு எந்த இல்ஹாமும் (தெய்வீக உதிப்பு) எந்த ஹகீகிய்யத்தும் (ஆத்மார்த்தம்) அந்த அஸ்ரார்களும் (இரகசியங்கள்) வெளியாகாதுமுரீதினுடைய கல்பு (உள்ளம்) ஷைய்கைப் பார்க்கும் கண்ணாடியாக இருக்க வேண்டும்இல்லாதுபோயின் மள்ஹர் அவனளவில் உதயமாகாதுதன்னுடைய ஷைய்கின் முன்னில் ஒரு முரீது குளிப்பாட்டப்படும் ஒரு மைய்யித்தைப் போல் இருக்க வேண்டும்அப்படியானவனே பூரண முரீதாவான்இவனே எல்லா பைளுகளையும் பெற்றுக் கொள்ளுவான்தன் ஷைய்கின் மீது நல்ல நம்பிக்கை இருத்தல் வேண்டும்.  ஒரு முரீது தன் ஷைய்கிடம் ஒரு வைத்தியனிடமுள்ள நோயாளியைப் போல் இருக்க வேண்டும்மேலே கூறப்பட்டவைகளிலிருந்து  ஒப்பற்ற ஒரு மாபெரும் ஷைய்கைப் பின்பற்றிய, கைப்பிடித்த முரீதீன்கள், கலீபாக்கள், பக்தர்கள் முதலானோருக்கு இதாஅத் எனக் கூறப்படும் வழிபாடு என்னும் ஷைய்குக்கு முற்றிலும் வழிப்பட்டு அவருடைய எந்தவொரு சொல்லையும் ஏவலையும் இஷாராவையும் மிகமிக முக்கியமாக மதித்து தீனுடைய காரியமானாலும், துன்யாவுடைய காரியமானாலும் அப்படியே நிறைவேற்றுவது மிக மிக முக்கியமும், மிக மிக அவசியமுமாகும்இதைவிட்டு வழி தவறுவோர் ஜயமடையமாட்டார்கள். (தவறிய வழியிற் செல்வோரையும், செல்ல முயல்வோரையும் இதைக் காட்டி நேர்வழிப்படுத்துங்கள்)


சில கல்புகளின் ஊசலாட்டங்கள் எனக்கு விளங்குகின்றனஅறியவும் கிடைத்தனஇறைவன் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுவான்.(தொடரும்)