ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

ஞானத்துளிகள்

 

 

காணப்படாததாயும், கிரகிக்க முடியாததாயும், பிறவாததாயும், நிறமற்றதாயும், கண் காது கை கால்கள் இல்லாததாயும், (மற்று) நித்தியமாயும், திண்ணியமாயும், எங்கும் நிறைந்ததாயும், மிக நுண்ணியதாயும், அழிவற்றதாயும் இருப்பதை மூலப்பொருளென ஞானிகள் முற்க் காண்கின்றனர்.  - உபநி­தம்.  அத்துவித வஸ்துவைச் சொற்ப்ர காசத்தனியை

  அருமறைகள் முரசறையவே

  அறிவினுக் கறிவாகி ஆனந்த மயமான

  ஆதியை அநாதியேக

  தத்துவ சொரூபத்தை மதசம்ம தம்பெறாச்

  சாலம்ப ரஹிதமான

  சாசுவத புஷ்கல நிராலம்ப ஆலம்ப

  சாந்தபத  வ்யோமநிலையை

  நித்தநிர் மலசஹீத நிஷ்ப்ரபஞ் சப்பொருளை

  நிர்வி­ சுத்தமான

  நிர்விகா ரத்தைத் தடஸ்தமாய் நின்றொளிர்

  நிரஞ்சன  நிராமயத்தைச்

  சித்தமறி யாதபடி சித்தத்தில் நின்றிலகு

  திவ்யதே ஜோமயத்தைச்

  சிற்பர வெளிக்குள்வளர் தற்பரம தானபர

  தேவதையை  அஞ்சலிசெய்வாம்.  நிர்க்குணப் பிரம்மம் எத்தகையது  என்பதைக் கிரகிக்க மானுட அறிவுக்கு இயலாதுநிர்க்குணப் பிரம்மத்தை தானே தன்னில் தானான நிலைக்குத் திருப்பி வருகிறவர்களே பக்தியின் ரசத்தை உள்ளபடி அனுபவிக்க முடியும்.

  

 

நிர்க்குணப் பிரம்மத்தில் மட்டும் நம்பிக்கை வைக்கிறவர்கள் சுராவளியில் இருக்கிற கடைசி சுரமாகிய நீ என்பதை மட்டும் பிடித்துக் கொள்வதற்கு ஒப்பானது. ஆனால் சகுணப் பிரம்ம உபாசனை செய்கிறவர்கள் சுராவளியிலுள்ள ரி   நீ ஆகிய எல்லாச் சுரங்களையும் எடுத்துக் கொள்கின்றனர். இறைவனுடைய எண்ணிறைந்த இறை அருள்களை அவர்கள் ரசிக்கின்றனர்கணக்கற்ற விதங்களில் இறைவனோடு அவர்கள் இணக்கம் கொள்கின்றனர். நிர்க்குண நிராகார உபாசனை பண்ண சாதகன் ஒருவனுக்கு இயலுமா?ஆம்நிச்சயமாக இயலும். ஆனால் அந்த மார்க்கம் மிகக் கடினமானதுபழங்காலத்து ரி´கள் கடினமான தவங்கள் புரிந்து அந்நிலையை எட்டினர்எல்லார் உள்ளத்திலும் வீற்றிருக்கிற சுத்த சைதன்யம்தான் நிர்க்குணப் பிரம்மம்ஆனால் கடினமான சாதனத்தாலன்றி அதை அறிந்து கொள்ள முடியாது.சகுண சரகார பிரம்மம் என் தாய்; நிர்க்குண நிராகாரப் பிரம்மம் என் தந்தை என்று கபீர் பகர்வதுண்டுதராசு ஒன்றின் இரு பக்கங்களும் சமனாக இருக்கின்றன. சகுணப் பிரம்மமும் நிர்க்குணப் பிரம்மும் ஒன்றேசாதகன் ஒருவன் எதை வேண்டுமானாலும் தியானிக்கலாம்எந்த சொரூபத்தில் நம்பிக்கை வைத்தாலும் அவன் இறையையடைவது திண்ணம்.சிருஷ்டி, ஸ்திதி, சம்ஹாரம் ஆகிய முத்தொழில்களில் ஈடுபட்டிருக்கும் பொழுது அப்பொருளுக்கு சகுணப் பிரம்மம் அல்லது ஆதிசக்தி என்று பெயர். முத்தொழில்களுக்கு அப்பாற்பட்டதாக அப்பொருள் இருக்கும் பொழுது அதற்கு பரப்பிரம்மம் அல்லது நிர்க்குணப் பிரம்மம் என்று பெயர்சொற்பம் கடந்தது அது.

பிரம்மம் ஒன்றே சத்தியம்பிரம்மத்துக்கு அந்நியமாகப் பார்ப்பதெல்லாம் வெறும் பிராந்தி.உபமானத்தால் பிரம்மத்தை விளக்க முடியாது. அதை இருள் என்றோ ஒளி என்றோ இயம்ப முடியாதுஒரு விதத்தில் அது ஒளிஆனால் சந்திர சூரிய அக்கினி ஒளியோடு அதைச் சீர்தூக்க முடியாது.சுகந்தம் துர்கந்தம் ஆகிய கந்த வேறுபாட்டைக் காற்றில் காணலாம்ஆயினும் காற்றானது நறுமணம் துர்நாற்றம் ஆகிய இரண்டிலும் கட்டுப்படாததாக இருக்கிறது. பிரம்மம் காற்றுப் போன்றதுநன்மை தீமை எதும் அதைச் சார்வதில்லை.


நாயனே நாயனே என்று வாயால் வெறுமனே மொழிந்து ஏன் வீண்காலம் போக்குகின்றாய்? பிரம்மம் உளது; அதை உணர்.