ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

அ. ஆஷிக் அலி ஹக்கிய்யுள் காதிரிய், பெரம்பலூர்

  

நபி பாதம் தேடுதே   கண்கள் வாடுதே ...

நபி குரல் கேட்கவே  ஆவல் மீறுதே ...

நபியே... உம்மை பார்க்கணும்   உசூரே... உமக்காய் கொடுக்கணும்

என் வாழ்வும் உடலுயிரும் உமக்காக அர்ப்பணம்  


 (நபி பாதம்)என்ன பாவம் செய்தேன் நானும்   உம்மைக் காணவில்லையே

எங்கே போவேன் உம்மைத் தேடி  பாதை தோன்றவில்லையே

கண்ணீரில் வாடினேன்  நெஞ்சம் முழுதும் காதலாய்

உயிரே என்னை உம்மோடு   அழைத்துக் கொள்வீர்

அழைத்தே  உந்தன் நெஞ்சோடு   அணைத்துக் கொள்வீர் 


 (நபி பாதம்)


வெயிலில் வரும் நிழலைப் போல  உங்கள் நினைவு நெஞ்சினிலே

காலம் தோறும் வாழ வேண்டும்  பிலாலின் திரு பண்பிலே

உங்கள் அடிமை நானென்று  கூற வேண்டும் கூவலாய்

அடிமை... என் மனதை பார்ப்பீரே  விரைவாய்... என துயரம் களைவீரே  


(நபி பாதம்)


( மெட்டு : உன்ன இப்ப பார்க்கணும். படம்  : கயல் ) 

 

 

 

 

  குருவே நாயகமே

  மன்னர் நபி வழி வந்த அருளே அவ்னாரே

  உங்கள் அருள் தேடி தவிக்கின்றேன்

  துன்பம் வரும் வேளை அழைக்கின்றேன்

  அருள் செய்வீர் ... அருள் செய்வீர்  

(குருவே)


  பாதம் பணிந்தேன் புகழ்தனை அடைந்தேன்

  இறைதனில் வாழும் நிலை என்னில் உணர்ந்தேன்

  அடியேன் என்னை மன்னித்தே

  அருள் காட்டி கரை சேர்ப்பீரே  

(குருவே)


  இறைவனைத் தேடி உம்மிடம் வந்தேன்

  நானே தலைவனாய் இருப்பதை அறிந்தேன்

  நானே அனைத்தானேன்

  எக்காலமும் வாழ்ந்திடும் நிலை கொண்டேன்

  உம் அருளின்றி ஏது நிம்மதி

  உம் பாதம் என்னும் என் சன்னிதி  

  கண்ணே உயிர் அவ்னே... 

(குருவே)


  ( மெட்டுகண்ணே கலைமானேபடம்  :  மூன்றாம் பிறை)

 

 


 


ஹஜ்ஜா. பாத்திமுத்து சித்தீக்

 

 

அன்பு, ஜீவகாருண்யம்.. போதித்த

அஹிம்சாவாதி காந்தி மகாத்துமா

அவதரித்த  இம்மண்ணில்

இன்று சகிப்புத்தன்மை சாரம் இற்று

முளைத்துள்ளனர்


நச்சுக் காளான்களாய்

வம்பர்களின் வாரிசுகள்!

வளர்கின்றனர்

வெடிகுண்டு கலாச்சாரத்துடன்

இரத்தவெறி பாதகர்களாய்!!

வெடிக்கின்றன ஆங்காங்கு


மத இனக் கலவரங்கள்

அரசியல் அதிகாரப் பூச்சுடன்!

அவசரயுகம் என்பதால்

தண்டிக்க முடியுமா

தீர விசாரிக்காமல்??


நிம்மதிப்பட
முடியுமா

செயல் முறையற்ற

வெற்று உறுதிமொழிகளில்?!

தேடுங்கள்...


திரும்பியும் திருப்பியும்

வரலாற்று ஆவணங்களை!

தென்படும் தெள்ளத் தெளிவாய்

சத்தியத்துக்கு முன்

அசத்தியம் அழிந்தே தீரும் எனும்

நிச்திய பசுமைப் பூக்களை!!