ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் தெளிவுரை தந்த

  

ஹகாஇகுஸ் ஸஃபா - துளிகள்.
 

3. வுஜூதிய்யா (அத்துவித சித்தாந்தம்)

 

 

இம்மாபெரும் வகுப்புக் கொள்கைதான் இஸ்லாமிய தத்துவார்த்தத்தின் மீது பாரிய விசே­த் தன்மையை அளித்ததாகும்செய்குல் அக்பர் முஹிய்யுத்தீன் இப்னு அரபி (ரலி) அவர்கள் கி.பி.1241 ஆம் வருடத்தில் ஸ்பெயின் தேசத்தில் அவதரித்த சிறந்த ஞானியாவார்கள். இவர்களின் மரணம் சிரியாவில் நிகழ்ந்தபோதிலும் இவர்களை மேனாட்டு சூபியாக்கள், ஞானிகள் ஆகியோர் கூட்டத்தில் தான் சேர்க்கின்றனர்இம்மகான் அவர்களின் பரமார்த்த ஞானம் எத்தகையதென விளங்கக் கீழ்க் குறிப்பிட்டனவற்றைக் கவனிக்கவும்.


மனிதனோவன்றி உலகமோ ஹக்குடைய இல்மு என்னும் அறிவில் நின்றும் தோன்றி அனுபவங்களையடையப் பெற்றதும், தத்தம்ஐன்ஆகிய சுயம் அல்லது அகமியத்தின் பால்மீண்டுவிடுகின்றதுஅதாவது ஒரே உள்ளமைப் பொருள் தனது அறிவிலே கணக்கற்ற வகையில்கஸ்ரத்என்னும் பலவற்றை பிரதிபலிக்கச் செய்த போதிலும் அந்த அறிவு தான் தானாகவேயிருக்கின்றதுதோன்றுதலடைந்த  இத்தாதி வஸ்துக்கள் அனுபவங்கள் பெற்றுக் கொண்டவுடன் தங்கள் அகமியத்தின் பால் மீண்டு விடுகின்ற தன்மையிலிருக்கும் எல்லாம் அவனேயாம்.” (ஹமவோஸ்த்)வஹ்ததுல் வுஜூதில் துவிதமில்லைஹுலூல் (ஊடே நுழைதல்) இத்திஹாது (இரண்டறக் கலத்தல்) எனும் இருவித தோசங்களும் அடியோடு நிவர்த்தியாகி விடுகின்றன. (இரண்டறக்கலத்தல் என்பது தோசமன்று. இது விஸாலுடைய நிலை. இதுவே உண்மை நிலை.)விளக்கம்:


மீ(ஆதியிலேயே அனைத்தும் இரண்டறக் கலந்தே இருப்பதால்நாம்இப்போது வேறுபட்டுத் தோன்றுகிறோமே தவிர யதார்த்தத்தில் வேற்றுமையே இல்லையாதலால் இரண்டறக் கலத்தலையும் தோ­ம் என்றார்ஆயினும் மனிதன் மறதியோடேயே இருப்பதனால் அவன் உண்மையறிதலும் பழைய நிலைக்கு வருதலும் இரண்டறக் கலத்தலாகும்.)  இரண்டறக் கலத்தல் தோ­ம் எனக் கூறல் பொருந்தாது. ஹுலூல் என்பது இரண்டறக் கலத்தலின்றி உள்ளே புகுதலால் இதனை இத்திஹாதோடு சேர்த்துக் கூறுதல் பொருந்தாது.) 

 

  

தெளஹீதென்ற அத்வைதமாகிறது கண்டிப்புகளையும் குறிப்புகளையும் விட்டு விடுவதேயாகும்.  “அத்தெளஹீது இஸ்காதுல் இசாரா” ( மீ தெளஹீதென்பது சைக்கினையை விட்டும் வாய்மூடியிருப்பது )


இதனை (மீ இந்த வுஜூதிய்யாவை ) இஸ்திரப் படுத்தும் குர்ஆன் அத்தாட்சிகளான சுருதிப் பிரமாணங்கள் கீழ் வருவனவாம்.


இறைவன் கிழக்கிலும் மேற்கிலும் இருக்கின்றான், ஆதலின் நீர் உமது முகத்தை எங்கு திருப்பினும் அங்கு அல்லாஹ்வின் முகம் இருக்கின்றது.” ( மீ முகம் என்பது வுஜூத் என்னும் உள்ளமை )     


(ஸூரா : பகரா : 2, ஆயத்து : 115)நிச்சயமாக இறைவன் ஒவ்வொரு வஸ்துவையும் சூழ்ந்திருக்கிறான்”:        (ஸூரா : அன்நிஸாஉ : ஆயத்து : 126)


நாம் மனிதனுக்கு அவனுடைய பிடரி நரம்பை விட அதிக சமீபத்தில் இருக்கிறோம்.”


நீங்கள் எங்கிருப்பினும் அல்லாஹ் உங்களோடிருக்கிறான்”  


(ஸூரா : ஹதீத், ஆயத்து : 4)நான் உங்கள் நப்ஸுகளிலே இருக்கிறேன். ஆனால் நீங்கள் நோட்டமிடுவதில்லை.”


அவனே முன்னவன்; அவனே பின்னவன்;அவனே வெளியீடானவன்; அவனே உள்ளீடானவன்;அவன் ஒவ்வொரு வஸ்தையும் அறிபவனா யிருக்கிறான்.”


  “நாம் அல்லா(ஹ்)விடமிருந்துள்ளவர்களே; மேலும் அவனிடமே நாம் மீள்கிறோம்”.


  மேலும் ஹதீஸ் குதுஸியில் அல்லாஹுதஆலா, “நான் அதி மறைவான புதையலாயிருந்தேன்; என்னை அறியப்பட நான் ஆசித்தேன்; அவ்வாறு அறியப்பட சிருஷ்டிகளை உண்டு பண்ணினேன்என்பதாகக் கூறியிருக்கிறான்.


  இன்னும் கீழ்வரும் நாயக வாக்கியமான ஹதீது படியும் ஏகத்துவமானது நன்கு தரிபடுத்துப்படுகிறது.


  “நான் ஐன் இன்றி அரபாக இருக்கிறேன்

  “நான் மீமின்றி அஹ்மதாக இருக்கிறேன்

 

 

   மீ  ஐன் இல்லாத அரபு = () ரபு = ரப்பு

   மீமில்லாத அஹ்மது = அஹ்()து = அஹதுமீன்இந்த அருமையான ஹதீதுகள் இன்று காணக்கிடைத்தலே அரிதுதம்மை இணைவைக்காதவர்கள் எனச் சொல்லிக் கொண்டு திரியும் துவித சித்தாந்திகள் இப்படியானசிறப்புக்குரிய ஹதீஸிகளை நூல்களிலிருந்து எடுத்துவிட்டனர்கொடியவஹ்ஹாபிகள் இன்னும் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்இது அவர்களின் அழிவுக்குக்காரணமாகலாம்இவற்றை உண்மையறியாத துவைதவாதிகள் ஹதீஸ் அல்லவென்று வம்பாடுகின்றனர்இப்படிப்பட்ட ஹதீஸ்களை துவைதவாதிகள் மறைத்தும் விட்டார்கள்.திநீங்கள் நீர் மொள்ளும் பாத்திரத்தை ஒரு கிணற்றினுள் இறக்குவீர்களானால் நிச்சயமாக அது அல்லாஹ்வின் மீதன்றி பிறிதொரு வஸ்துவின் மீதும் படுவதில்லை”. அனைத்தும் ஹக்காகவிருக்க பிறிதொன்று  ஏற்படப் போவதில்லை.மீன்இக்கொள்கையே பரிசுத்த தத்துவார்த்தக் கொள்கையாகும். இது எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிலிருந்த வந்ததுஅலி (ரலி) அவர்கள் இந்த அறிவின் வாயிலாக இருந்துள்ளார்கள்வாயிலிலிருந்தே தான் எப்பொருளும் வெளியாக வேண்டியுள்ளது. ஆதலால் அவ்வாறு கூறப்பட்டதுமுஹிய்யுத்தீன் அப்துல் காதிர் ஜீலானி ஆண்டகை இவ்வறிவில் மிக மிக முக்கியமானவர்கள்இவ்வறிவை மறுப்பவர்கள், தாம் மனித இனம் என்பதையே மறுப்பவர்கள்இன்னும் இந்நூலில் உள்ள அந்தரங்கமான வி­யங்களையும் வெளியிடுவதாயின் அறிவற்றோர் மருள இடமுண்டு.தி