ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

I.A. முஹம்மது அப்துல் காதர்  D.Pharm / DAcu.,

  அலை : 97861 32022.

 

 

 

எந்த உணவுகளையும், நாம் சமைக்கும் முறை கொண்டு பலன்கள் அதிகமாகவோ குறைவாகவோ கிட்டுகின்றன அல்லது தீமைகள் விளைகின்றனஉதாரணமாக, அசைவ உணவுகளை நீராவியில் சமைத்து அல்லது தீயிலிட்டுப் பொசுக்கி சமைத்துண்டால் பலன் கிட்டும்எண்ணெய்யிலிட்டுப் பொரித்துச் சாப்பிட்டால் தீமைகள் விளையும்அரபு நாட்டினர் கோழி இறைச்சியை தீயிலிட்டுப் பொசுக்கி அதிலுள்ள கொழுப்பை எடுத்துவிட்டு அதற்குத் துணையாக பச்சை வெங்காயம், வெள்ளரிக்காய், எலுமிச்சை போன்ற பச்சைக் காய்கறிகளைச் சேர்த்து உண்கின்றனர்பெரும்பாலானோர் டீ, காபிக்கு பால், சர்க்கரை சேர்ப்பதில்லைபுதீனா இலை, துளசி இலையைச் சேர்க்கின்றனர்இனிப்பு வேண்டின் பேரீத்தம்பழங்களைச் சாப்பிடுகின்றனர்நீண்ட ஆயுள் பெற்று நலமாக வாழ்கின்றனர்.

சைவ உணவான காய்கறிகளில் சிலவற்றை நாம் தீயிட்டுச் சமைத்துத்தான் ஆக வேண்டும்உதாரணமாக கத்தரிக்காய், பாகற்காய், கிழங்கு வகைகள் பெரும்பாலானவற்றை தீயிட்டுச் சமைப்பதை விட பச்சையாகச் சாப்பிட்டால் அதிலுள்ள தாது உப்புக்களும், வைட்டமின் சத்துக்களும் அப்படியே கிட்டும்

உதாரணம்ரூட் வெஜ்  (Root Veg)  எனப்படும் கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், கீரைகள். அவைகளை நன்கு தண்ணீரில் ஊற வைத்து கழுவிப் பயன்படுத்தலாம்சமையல் என்றால் உண்பதற்குப் பக்குவப்படுத்துதல் என்று பொருள்கீழ்க்கண்ட முறைப்படி அடுப்பில்லாச் சமையல் செய்துதான் பாருங்களேன்.1. பேரீச்சைச் சாறு:


பேரீத்தம்பழத்தைக் கழுவி குறைந்து 6 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்த பின் பிசைந்து வடிகட்டி அருந்தலாம்


அளவு : 200 மி.லி தண்ணீருக்கு 3 - 6 பேரீத்தம்பழங்கள்.2. எலுமிச்சைப் பானகம்:


ஒரு எலுமிச்சம்பழம் பிழிந்து சுமார் அரை லிட்டர் தண்ணீர் கலந்து நாட்டுச்

 

சக்கரை அல்லது வெல்லம் 50கி. அல்லது 100கி. கலந்து அருந்தலாம்வாசனைக்காக ஏலக்காய்த்தூள் சிறிது போட்டுக் கொள்ளலாம்.3. கேரட் நீர்:


கேரட்டுத் துருவலை மிக்ஸியில் இட்டு சாறு எடுத்து அத்துடன் தேங்காய்ப் பால், நாட்டுச் சர்க்கரை அல்லது தேன், ஏலக்காய் சேர்க்கவும்


அளவு : 5 நபருக்கு அரை கிலோ கேரட், பெரிய தேங்காய் - 1, நாட்டுச் சர்க்கரை 100 - 150கி. மற்றும் தேன் - 2 பெரிய ஸ்பூன்.


பலன்கள்:


பேரீச்சை சாறு  - கால்சியம், இரும்புச் சத்து நிறைந்ததுஇரத்த சோகையை நீக்கும்.


எலுமிச்சைப் பானகம் - வைட்டமின் - சி நிறைந்ததுஉடல் சூடு தணிக்கும்.


கேரட் நீர் - இரத்த சோகையை நீக்கும், கண்பார்வைக் கோளாறுகளை நீக்கும்வைட்டமின் - சத்து நிறைந்தது.4. முளைவிட்ட நிலக்கடலை:


நிலக்கடலையை 24 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, நீர் வடித்து, கடலையை மட்டும் ஒரு பருத்தித் துணியில் கட்டி தொங்க விடுகஅடுத்த 24 மணி நேரத்தில் முளை தோன்றிவிடும்தற்போது சாப்பிட ரெடிஇதனைக் கொண்டு சுண்டலும் செய்யலாம்.


பலன்கள்:


ஜீரணக் கோளாறு, வாயுக் கோளாறு உள்ளவர்கள் பச்சைக் கடலை சாப்பிட இயலாதுகொலஸ்ட்ரால் உள்ளவர்கள் வறுத்த நிலக்கடலை சாப்பிடக் கூடாதுஆனால் முளைகட்டிய கடலை தாவர நிலைக்கு வந்துவிடுவதால் எல்லோரும் சாப்பிட்டுப் பலன் பெறலாம்.


வைட்டமின் , பி, புரோட்டீன், கார்போஹைட்ரேட் நிறைந்தது.


குறிப்பு:நிலக்கடலையைப் போன்றே பச்சைப் பயறு, கேழ்வரகு, கருப்பு உளுந்து முதலியவற்றையும் முளைவிடச் செய்யலாம்.5. பசுங் கலவை:


கேரட், பீட்ரூட், செள செள, வெள்ளரிக்காய், தக்காளி, வெங்காயம், புடலங்காய்,


முட்டைக்கோஸ் முதலியவற்றில் ஏதேனும் 4 அல்லது அனைத்தையும் சிறு  துண்டுகளாக நறுக்கி தேங்காய்த் துறுவல், மிளகு தூள், குறைந்த அளவு உப்பு சேர்த்து உண்ணலாம்.


பலன்எடை குறை விரும்புபவர்களுக்கு சத்து மிகுந்த இடைத்தீனி.6. மாம்பிஞ்சு சாறு:


சமையல் மாங்காயைத் துருவி, மிக்ஸியிலிட்டுச் சாறு எடுத்து, தண்ணீல் கலந்து மிளகு தூள் சேர்த்துச் சாப்பிடலாம்.


பலன் : டீ, காபி தவிர்க்க வேண்டியவர்களுக்கு சுவையான வைட்டமின் - சி நிறைந்த பானம்.7. மாங்காய் சட்னி:


மாங்காய்த் துருவலுடன் தேங்காய்த் துருவலும், தேவைக்கேற்ப உப்பு, பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை, சின்ன வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.


பலன் : வைட்டமின் - சி சத்து நிறைந்த சட்னி.