ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

சங்கைமிகு செய்கு நாயகம் அவர்களின்


உமர் (ரலிபுராணம்
( உதயகாண்டம் - இறைவாழ்த்துப்படலம்  பகுதியிலிருந்து....)

 

 


கானுங் கடலுங் கரையுங் காற்றும்

வானும் வருபுனல் வாயும் வரையும்

ஈனு மிரவி யிராக்கதி ரின்னவும்

ஆனா வதிலிருந் தாயவை யாமே.அந்தகத் திதியி லனைத்தாய்ப் பிரியாச்

சிந்தனைக் கெட்டாத் திருவா யுறைந்து

மந்த நிலையாய் மருண்டிருந் ததது

இந்தத் தரத்தி லெமக்குத வுகவே.பூரணத் திருந்தே பூதங்கள் வந்தன

காரணத் தாகி கலைந்தைத் தாயின

தாரண மாகித் தரித்தவற் றாலே

தாரணி மற்றெலாந் தனித்தனி யாயினமண்ணி நீரின் மறிகாற் றீயிற்

றிண்ணிய வெளியிற்  றிரிந்தே பொருட்கள்

எண்ணிய வாறே எண்ணிற் றோற்றிய

கண்ணிய னுக்குக் காலமுந் துதியாம்.சிறுவித் துயர்ந்து சினைபல விரித்து

உறுபெரு மரமா யுருவிரிந் ததுபோல்

மறுவி லெங்கும் வாரியி னிறைந்த

அறுமல னவற்கே யநுதினம் வந்தனம்.அனைத்திலு மாகி யனைத்து மாகி

தினைத்துணை தானுந் திரிந்தில தாகி

சினையது விலதாய்ச் சேர்ந்துள தாகி

இனையன வான இறைவாழ்த் துதுமே.உடைநடை யூணு முறக்கமு மெல்லாம்

அடையு வாழ்வி னாசை யயல்லாம்

தடையாந் தனியனை யடைவதி லென்க

சடைவிலா தடையச் சார்பு கொண்மே.

 

  

கற்றவை காண்பவை கழிபகை யுறவு

சொற்றவை செய்பவை சுகா நுபோகம்

மற்றவை யயல்லாம் மறுப்பிறை யணுக

பற்றருள் வையே பாமர ரெமக்கே.மேனி மறந்து வானிலை யோர்ந்து

நானிலை யாகி நாயனைக் கலந்து

மேனிலை யடைதன் மேன்மை யாமே

தூநிலை பெறவே துணையருள் வாயே.இறையருட் பொழிக வேகனே யீக

நிறைதவத் தவர்க்கு நீடே யருள்க

நறையி னின்ப நலம்பொரு டருக

கறையற வாழக் கரந்தரு வாயே.தித்திக் காது தீந்நறை யதுவும்

எத்தகைக் கனியு மின்பம் பயக்கா

சித்த னவனின் றிருநினைப் பல்லால்

நித்திய னவனை நிதம்வாழ்த் துதுமே.எல்லாப் பொருட்கு மிறையோ னீயே

வல்லவ னீயே மனநிறை நீயே

இல்லவ னென்றிலா வுள்ளவ னீயே

நல்லவ னீயே நாமுனைப் போற்றுதும்.இல்லகி நீயே யீசனு(ம்) நீயே

அல்லல்க ணீக்கி யாள்பவ னீயே

நல்லவர் நாட்டம் நல்குவ னீயே

எல்லைய தில்லா வேகனு(ம்) நீயே.வண்ண வண்ண மாகத் தோற்றிக்

கண்ணுக் கழகு காட்டி நிற்கும்

எண்ணி லாத வின்பக் காட்சி

எண்ண வெண்ண வின்ப மூட்டும்.காட்சி யாகிக் காட்சிப் பொருளாய்ச்

சாட்சி யாகித் தன்னி னின்று

ஆட்சி செய்யு மருவ னீயே

மாட்சி மையுடை மறையோற் குப்புகழ்