ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

மரணம் என்றால் அனைவருக்கும் பயம்ஆனால் அல்லாஹ்வின் அவ்லியாக்களுக்கு எந்த பயமும் இல்லை, கவலையும் இல்லை என்கிறது திருக்குர்ஆன்.ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும். (3 : 185)


மரணம் என்பது அழியக்கூடிய உலகத்திலிருந்து (தாருல் ஃபனாவிலிருந்து) அழியாத உலகத்திற்கு (தாருல் பகாவிற்கு) செல்வது.


மரணம் என்றால் உடலுடன் இருக்கும் ரூஹுடைய தொடர்பைத் துண்டித்து மற்றொரு உலகத்திற்குச் செல்வது  (நூல் : தத்கிரா 8)


நபிகளாருக்கும் மறைவுண்டு; ஆனால் மரணமில்லை.


நபியே! நீரும் மறையக் கூடியவரே! அவர்களும் மறையக் கூடியவரே!.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரண்டு மரணமில்லைமற்ற அனைவருக்கும் இரு மரணம் உண்டு என்பதை திருக்குர்ஆனில் (40:11)லும் (2:28)லும் கூறுகிறான்.


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் : நபிகளார் மறைவின் போது அபூபக்கர் (ரலி) அங்கு வந்து நபி மீதிருந்த போர்வையை விலக்கி, நெற்றியில் முத்தமிட்டு யாரஸூலல்லாஹ்! தங்களுக்கு என் தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும்நீங்கள் உயிரோடு இருந்தபோது நறுமணம் கமழ்ந்தீர்கள்இறைவன் மீது ஆணையாக! உங்களுக்கு இறைவன் இரு மரணங்களை அளிக்கப் போவதில்லை என்று கூறினார்கள்.     


(நூல் : புகாரீ 3667 பைஹகீ 8/142)நபிமார்களையும், ­ஹீதுகளையும் இறந்தவர்கள் எனச் சொல்வதும் நினைப்பதும் பாவமாகும்.


அல்லாஹ்வின் பாதையில் மறைந்தவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள்.அதை அறிய மாட்டீர்கள்.(2:  154)


அல்லாஹ்வுடைய பாதையில் மறைந்தவர்களை இறந்தவர்கள் என நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ருகளுக்குச் சென்று அஸ்ஸலாமு அலைக்கும் முஃமீன்களே என்பார்கள்.  


(முஸ்லிம்)

 

 

 

இவ்வாறு முஸ்லிம்களின் கப்ருகளை ஜியாரத் செய்யவும் அவர்களுக்கு ஸலாம் சொல்லவும், அனுமதியளித்துள்ளார்கள் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.


இவ்வாறு ஸலாம் கூறினால் மய்யித்திற்கு ஸலாம் கூறுபவர் முன்பே பழக்கமுள்ளவராக இருந்தால் அவர்களைப் புரிந்து கொண்டு மய்யித் ஸலாமிற்கு பதில் கூறுகிறது

 (நூல் : இப்னு அன்பார்)பத்ருப் போரில் கொலை செய்யப்பட்ட குரை´ தலைவர்களை ஒரு கிணற்றில் போட்டபோது பிறகு அவர்களை அழைத்து நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் பேசினார்கள்பிண உடல்கள் கேட்குமா? என்று உமர் (ரலி) அவர்களின் கேள்விக்கு நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள். அவர்கள் (காபிர்கள்) உம்மைவிட கேட்பார்கள் என்றார்கள் நபியவர்கள். (நூல் : புகாரீ, முஸ்லிம்) இவ்வாறு மய்யித் பார்க்கவும், கேட்கவும், பேசவும் செய்கிறது.நமது அமல்கள் மரணித்தவர்களுக்குக் காட்டப்படுகிறது.


வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் செய்யும் அமலை அவர்களது மரணித்த உறவினர்களுக்குக் காட்டப்படுகின்றது.  

(நூல் : அஹ்மதுநீங்கள் செய்பவற்றை அல்லாஹ்வும், ரஸூலும் மற்ற நம்பிக்கையாளர்களும் பார்க்கிறார்கள். (9:105)ஆத்மாக்களின் பயணம்:


இறை நம்பிக்கையாளர்களின் ஆத்மாக்களுக்கு அவர்களின் கப்ருகளின் சுற்றுப் பகுதியில் விரும்பிய இடங்களில் பயணம் செய்ய அல்லாஹ் ஆற்றல் கொடுத்துள்ளான்இமாம் மாலிக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:


ஆத்மாக்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களில் செல்வதற்குரிய ஆற்றல் ரூஹ்களுக்கு இருக்கிறது.  

(நூல் : இப்னு அபித்துன்யா)கப்ரின் பக்கம் சாய்ந்து உட்காருவது கூட அந்த கப்ராளிக்கு தொந்தரவு அளிக்குமென்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்.  

(நூல் : அஹ்மது)மரணித்தவர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்கிறார்கள்:


கப்ராளிகள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்கிறார்கள் என்பதால் கஃபன் துணிகளை சரி செய்யுமாறு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கட்டளையிட்டார்கள். 

 (நூல் : திர்மிதி, முஸ்லிம்)ஒரு ஸஹாபியின் கனவில் வீட்டில் இறந்தவர்களைப் பார்க்கும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள். ஒரு தடவை அவரது மனைவி இறந்துவிட்டார்கள்.  ஆனால் கனவில் வரவில்லை.  மற்றவர்களிடம் காரணம் கேட்ட போது கஃபன் துணி சரியாக வைக்கவில்லை என்றனர்.  நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று கூறியபோது யாராவது மரணித்தால் அவருடைய கஃபனுடன் மற்றொரு கஃபன் துணியை வைத்து விடுங்கள் என்றார்கள். அந்த ஸஹாபியும் ஒரு மனிதரிடம் (மரணப் படுக்கையில் உள்ளவரிடம்) எனது மனைவிக்கு கஃபன் துணி கொடுத்து விடுங்கள் என்று கூறி வைத்தார்கள்.  அன்றே அவரது மனைவி அவர் கனவில் வந்தார்கள்.  


(நூல் : இப்னு அபீதுன்யா)கப்ராளி குர்ஆன் ஓதுகிறார், தொழுகிறார்:


சில ஸஹாபாக்கள் கப்ர் இருக்கிறதென்று தெரியாமல் அதன் மீது கூடாரம் கட்டினார்கள்இரவு நேரங்களில் அந்த கூடாரத்தின் கீழிருந்து முல்க் சூரா ஓதும் சப்தத்தைக் கேட்கிறார்கள்இந்த செய்தியை ஸஹாபாக்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறியபோது நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் தண்டனைகளிலிருந்து பாதுகாக்கும் சூராதான் முல்க் சூரா என்றார்கள்


(நூல் : திர்மிதி)இறந்தவர்களுக்கு ஈசால் ஸவாப்:


ஈசால் ஸவாப் என்பது நன்மைகளைச் சேர்த்து வைப்பது என்று பொருள்பொதுவாக புழக்கத்தில் ஈசால் ஸவாப் என்றால் உயிருடனிருப்பவர்கள் இறந்தவர்களுக்குச் செய்யும் சதகா ஆகும்ஹத்தம் ஓதுவது, உணவு கொடுப்பது இது போன்ற நல்ல அமல்களாகும்.


மரணித்தவர்களுக்காக துஆச் செய்வது: (ஆயத்)


எங்கள் இறைவனே! எங்களையும் எங்களின் முன்னோர்களையும் மன்னித்தருள் என்று துஆச் செய்தார்கள். (59:10).


இந்த  ஆயத்தை இமாம் ராஜி (ரலி) அவர்கள் இவ்வாறு விளக்குகிறார்கள்:


முஹாஜிர், அன்ஸார் ஸஹாபாக்களுக்குப் பிறகு வருபவர்கள் (இவர்களை) நல்ல விதமாக நினைக்கவும், அவர்களுக்காக துஆச் செய்யவும் இந்த வசனம் கட்டளையிட்டிருக்கிறது. யார் இவ்வாறு இன்றி ஸஹாபாக்களை தவறாக எண்ணுகிறார்களோ அவர்களும் முஃமீன்களது பார்வையிலிருந்து வெளியேறியவர் ஆவார். 

 (நூல் : தப்ஸீர் ராஜி 29/289)
மரணித்தவர்களுக்காக துஆச் செய்வது (ஹதீஸ்)


ஹள்ரத் அலீ (ரலி) அவர்களின் தாயார் ஃபாத்திமா பின்த் அஸத் (ரலி) அவர்கள் மரணித்த போது நபி (ஸல்) அவர்கள், யா அல்லாஹ் எனது பொருட்டாலும் என் அன்னையை மன்னித்து விடு என்று துஆ செய்தார்கள்.ஹள்ரத் உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள் : நீங்கள் நோயாளிகளிடமோ, மரணித்தவர்களிடமோ சென்றால் நன்மையே கூறுங்கள்ஏனெனில் நீங்கள் கூறுவதற்கு மலக்குகள் ஆமீன் கூறுகிறார்கள்