ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

 

மிஃராஜ் என்னும் நபிகளாரின் விண்ணகப்பயணம்


 

 

  விண்ணகமும் மண்ணகமும்

  வியந்து போற்றும் நபிகளார் (ஸல்)

  விண்ணகப் பயணமாகியள

  விந்தைமிகு நன்னாள்!

  விண்ணகத்திலிருந்து வாங்கி வந்த

  வெற்றித் திறவுகோல் தொழுகை

  மண்ணகத்தின் மாந்தர்க்கு

  மாபெரியோன் வழங்கிய பொன்னாள்!

  ஹிரா குகைளில் தனிமையில்தவம்

  இடைவிடாத பிரசார பலன்

  புராக் வாகனமேறி வந்த நபி (ஸல்)க்கு

  புலமையோன் கொடுத்த வரம்!

  ஒளியுடன் ஒளியும்

  உரையாடிய நேரலை

  மிளிரும் அத்தஹிய்யாத்

  மிஃராஜ் வடிவிலே!

  மூசா (அலை)க்குக் கிட்டவில்லை;

  முஹம்மது (ஸல்)க்குக் கிட்டியது

  ஆசையுடன் வரவழைத்து

  ஆனந்தம் கொண்டான் அல்லாஹ்

  எந்தக் கண்ணும் கண்டிராத

  எந்தச் செவியும் கேட்டிராத

  அந்தச் சுவன இன்பங்களை

  அஹ்மத் நபி (ஸல்) பார்த்த நாள்!