ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

மின் கட்டணத்தைப் பாதியாகக் குறைப்பதற்கான வழிமுறைகள்...




மின் கட்டணத்தைப் பாதியாகக் குறைக்க என்ன செய்யலாம்?


கோடை வெயில் சுட்டெரிப்பது ஒரு புறம் என்றால், அறிவிக்கப்படாத மின் வெட்டு மற்றொரு புறம் நம்மை வாட்டி வதைத்து வருகிறதுஇருப்பினும், மின் சிக்கனத்தைக் கடைப்பிடித்தால், ஆண்டுதோறும் இப்படிப் புலம்ப வேண்டியதில்லை.



எதற்கெடுத்தாலும் அரசைக் குற்றம் சொல்லிக் கொண்டே இருக்காமல், நம்மால் முடிந்ததை செய்தாலே, பாதி பிரச்சினை தீர்ந்து விடும். மின் வெட்டு பிரச்சினைக்கு முக்கியக் காரணம், மின் பயன்பாடு அதிகரித்திருப்பதுதான்முன்பெல்லாம் பணக்காரர்கள் வீட்டில்தான் ஏசியும். குளிர்சாதனப் பெட்டியும் இருக்கும்இப்போது பெரும்பாலான வீடுகளில் உள்ளனகாரணம், மின் பயன்பாடு அதிகரித்து விட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் செலுத்திய மின் கட்டணத்துக்கும், இப்போது செலுத்தும் மின் கட்டணத்துக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்கும்கட்டணம் அதிகரித்து விட்டது என்று சொன்னால் அது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு சமம்நாம், மின்சாரப் பயன்பாட்டை அதிகரித்து விட்டோம் என்பது தான் உண்மை.அதற்காக, இவையயல்லாம் இல்லாமல் வாழ முடியுமா? என்ற கேள்வி எழும்முடியாது தான்அதே சமயம், நம் வீட்டின் மின் நுகர்வையும் குறைக்க வேண்டும்அதற்கு, சிறு சிறு வி­யங்களில் கவனம் செலுத்தினாலே போதும்பெரும்பாலான வீடுகளில் குளிர்சாதனப் பெட்டிகளை மெகா சைஸ் குப்பைத் தொட்டியாகத்தான் பயன்படுத்துகிறார்கள்.



கெட்டுப் போகும் பொருட்களை ஓரிரு நாட்கள் வைத்திருப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் அதுஆனால், ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு தயிர், பால், குளிர் பானம், இட்லி மாவு என வைப்பதுடன், காய்கறிகள், சாக்லெட், மருந்து, பூ என எல்லாமே குளிர்சாதனப் பெட்டியை ஆக்கிரமித்துள்ளனசட்னியும், இட்லி மாவும் தவிர்க்க முடியாததுகாய்கறி மற்றும் பாலை அன்றாடம் வாங்குவது நல்லது.

 

 

தயிரை தினமும் உறை ஊற்றலாம்வாரத்தில் ஒரு நாள் பிரிட்ஜை சுத்தம் செய்யுங்கள்குறிப்பாக, பிரீசரில் உள்ள ஐஸ், முற்றிலும் கரைக்கப்பட வேண்டும்அடுத்து, பொருட்கள் வைக்கும் போது, பிரிட்ஜ்க்கு என உருவாக்கப்பட்ட டப்பாக்களில் வையுங்கள்எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் மெட்டல் பாக்ஸ்களில் வைக்க வேண்டாம். இதன் மூலம், 10 சதவீதம் பிரிஜ்ஜின் பயன்பாடு குறைக்கப்படுகிறதுஅதே போன்று குளிர் குடிநீருக்கு மண்பானை வாங்குங்கள்.



அடுத்தது, ஏசிஇதன் பில்டர்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும்அதிலுள்ள பேனிலும் தூசி அதிகம் படிந்து இருக்கும்குறிப்பாக, குளிர் காலத்தில் பயன்பாடன்றி வைத்துவிட்டு, வெயில் துவங்கியதும் ஏசியை இயக்கும்போது அதன் செயல்பாடுகளில் 40 சதவீதம் இழப்பு ஏற்படுகிறதுஇதனால், கோடை துவங்கும் முன் ஏசி மெக்கானிக்கை அழைத்து சுத்தம் செய்வது அவசியம்.



அடுத்து, மின் விளக்குகள்சி.எப்.எல்அல்லது அதை விட குறைந்த மின்சாரம் பயன்படுத்தக்கூடிய எல்..டி பல்புகளை பயன்படுத்தலாம்இதனால், டியூப் லைட்டுக்கு பயன்படுத்திய மின்சாரத்தில், நான்கில் ஒரு பங்குதான் செலவாகும்.

அதே போன்று பழைய பிக்சர் டியூப், டிவிக்கள் மின்சாரம் அதிகம் எடுக்கக் கூடியவைஎல்..டி மற்றும் எல்.சி.டி டிவிக்கள் என்றால், பாதி மின்சாரம் மட்டுமே பயன்படும்.


இதையயல்லாம் செய்தாலும், நம் வீட்டில் எவ்வளவு மின்சாரம் சேமித்து விட முடியும் என்ற அவநம்பிக்கை எழுகிறதா?


முதல் நாள் மாலை 5:00 மணிக்கு, உங்கள் வீட்டு மின்சார மீட்டரின் ரீடிங்கை குறித்துக் கொள்ளுங்கள்அதன்பின், வீட்டில் எந்தெந்த விளக்கை எப்போது போடுகிறோம், அணைக்கிறோம் என்பதைக் குறிக்கத் துவங்குங்கள்.  மறுநாள் மாலை 5:00 மணி வரை எவ்வளவு யூனிட் வந்துள்ளது எனக் குறித்துக் கொள்ளுங்கள்.


அடுத்து, பிரிஜ்ஜில் உள்ள தேவையற்ற பொருட்களை வெளியில் எடுத்து, சுத்தம் செய்யுங்கள்ஏசியையும் சுத்தம் செய்யுங்கள்டியூப் லைட் இருக்கும் அறைகளில் எல்லாம் எல்..டி விளக்குகளைப் பொருத்துங்கள்.


அதன்பின், மாலை 5:00 மணிக்கு மீண்டும் ரீடிங்கை குறித்துக் கொள்ளுங்கள்முன்பு செய்தது போலவே, எந்தெந்த விளக்குகளை எப்போதுஆன் செய்கிறோம், ஆப் செய்கிறோம் என மீண்டும் குறியுங்கள்மறுநாள் மாலை 5:00 மணிக்கு ரீடிங்கை பாருங்கள்.  20 முதல் 30 சதவீத மின் நுகர்வு குறைந்திருக்கும். ஒரு நாளில் இந்த அளவு எனும்போது, கட்டணத்தில் எவ்வளவு குறையும் என நினைத்துப் பாருங்கள்.  நம் வீட்டுக் கட்டணம் குறைவது மட்டுமின்றி, நாட்டுக்கும் நம்மால் நல்லது நடப்பதை உணருங்கள்.