ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai     »      2014      »      Jul2014      »     நோன்பு எனும் மாண்புநோன்பு எனும் மாண்பு

நீங்கள் இறையச்சமுடையோராக , ஆன்மீகப்பக்குவமடைவதற்காக நோன்பு உங்கள் மீது கடமையாக்கப்பட்டது . (குர்ஆன் 2: 183)


பொய் பேசுவதையும், தீய செயல்களையும்யார் விட்டொழிக்க வில்லையோ அவர் தமது உணவையும் பானத்தையும் தியாகம் செய்து என்ன பயன் ? - ஹதீது.


உண்ணாவிரதம், உபவாசம் (நோன்பு) என்ற இரண்டுமேபட்டினியாக இருப்பதைத்தான் குறிக்கிறது என்றாலும் கடைப்பிடிப்பவர்களைப் பொறுத்து பெயரும்நோக்கமும் மாறுபடுகிறது. உபவாசம் (நோன்பு) என்பது இறைவழிப்பாட்டின் ஒரு பகுதியாகவும், உடல் நலத்திற்காகவும்கடைப்பிடிப்பதாகும்உண்ணாவிரதம் என்பது தமது கொள்கையை வலியுறுத்த ஒருவரோ, பலரோ பட்டினிகிடத்தலைக் குறிக்கிறது. உபவாசமு (நோன்பு) ம் , பட்டினிகிடத்தலும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட தன்மையுடையன .


உடலுக்கு உணவு தேவையில்லாதகாலத்தில் உடலுறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து , அவற்றின்செயல்பாடுகளை மேம்படுத்தி உடல் நலம் பெறுவதற்காக நோன்பு (உபவாசம்) இருக்கிறார்கள்.


ஆனால் பட்டினி என்பது உடலுக்குஉணவு தேவைப்படும் காலங்களிலும், உணவின்றி இருப்பது. இதனால் உறுப்புகளும், திசுக்களும்சீர்கெட்டுச் செயல் இழக்கும் நிலை தோன்றுகிறது. நீண்ட நாள்பட்டினியால் இறப்பும் ஏற்படுகிறதுநோன்பு காலங்களில் செரிமானமண்டலத்திற்கு ஓய்வு கிடைப்பதால், நச்சுப் பொருள்கள் உடலை விட்டு வெளியேறும் . கல்லீரலின்செயலாற்றலும் , அதன் காரணமாக உயிர்ப்பு ஆற்றலும் மனத் தெளிவும் , திடமும்கிடைக்கிறது.


மனிதனுக்கு எப்படி உணவு தேவையோ, அதே போல்நோன்பும் தேவை.   முன்னதுஉடலுக்கு ஆற்றலைத் தரும். பின்னது , நச்சுநீக்கம் செய்து உடலுறுப்புகளுக்கு ஓய்வு தந்து உடலைச் செம்மைப்படுத்தும். பல மருத்துவர்களால் கொடுக்கப்பட்டமருந்துகளால் குணமடையாத நோய்கள், நோன்பினால்குணமடைந்து விட்டதாகக் கூறப் படுகிறது . வயதுக்கேற்ற சமச்சீர் உணவைச் சீராகச் சாப்பிட்டு, அப்போதைக்குஅப்போது சரியான முறையில், உபரி (நபில்) நோன்பு இருந்து வந்தால், நீண்ட நாள் உடல் நலத்துடன் வாழலாம்.


பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் கூட உடல் கேடு உண்டாகும் . அக்காலங்களில் அவைகள் உணவு உட்கொள்ளாமல் இருந்து உடல் நலம் பெறுகின்றன. ஆகவே நோன்பு என்பது இறைவன் நமக்கு அளித்துள்ள ஒரு நோய் நீக்கும் முறையாகும்உடல் நலமுள்ள காலங்களில் நோன்புஇருந்தால், நோயையும், நோய்க் காரணிகளை எதிர்த்துச் செயல்படுவதிலும் நோயினால் உண்டானநச்சுக்கள், புறப் பொருள்களை நீக்குவதிலும், உடல் சக்திமுழுவதும் பயன்படுகிறது.


உடல் நலமில்லாத காலங்களில் எப்போதும் போல உணவு உட்கொண்டால் அதைச்செரிக்கப் போதுமான சக்தி உடம்பில் இருப்பதில்லைஅதனால்தான் லங்கணம்பரம ஒளஷ ­ தம் என்கிறார்கள். உண்ணா நோன்பினால் மனிதன் சாக மாட்டான். அவனது நோய்தான்சாகும். (லங்கணம் - நோன்பு) நோன்பு காலங்களிலும் உடம்பிற்கு சக்தி தேவை. உடல் வெப்பமாகவைக்கப்பட வேண்டும். உயிர்ச் செயல்கள் குறைபாடு இல்லாமல் நடக்க வேண்டும். இதற்காகஉடலின் திசுக்களோ, செல்களோ அழிக்கப் படுவதில்லை. உடல் சேமித்துள்ள, ஊட்டச் சத்துக்களிலிருந்துதேவையான சக்தி எடுத்துக் கொள்ளப்படும்.


ஆனால் ஏற்கனவே, உணவு இன்மையால்பட்டினி கிடப்பவன் உடலில் சத்துச் சேமிப்புகள் இருக்காது. அவன் உறுப்புக்களும், செல்களும்சிதைந்து, அச்சிதைவுகளே நச்சுக் கழிவுப் பொருளாக மாறிவிடும். உபவாசம்ஒருவரின் உடலில் அமிலத் தன்மையை அதிகரிக்கும் . அத்தகையநிலை அதிக நாட்கள் நோன்பு இருப்பவர்களுக்கே உண்டாகும்.


நோன்பு மூலம் நோய் நீக்கம்செய்து கொள்ள விரும்புபவர்கள், பல வாரங்கள் தொடர்ந்து நோன்பு இருக்க வேண்டிய நிலை உண்டாகும். எனவே, அவர்கள்நோன்புக்கு முன்பே, தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நோன்பு தொடங்கஒரு வாரத்திற்கு முன்பிருந்து அவர்கள் நல்ல ஊட்டமிக்க உணவை உட்கொள்ள வேண்டும்.


உணவின் அளவைப் படிப்படியாகக்குறைக்க வேண்டும். அப்படிச் செய்பவர்களுக்குப் பசியோ , களைப்போஇராது. நோன்பு இருக்கும் காலங்களில், குடல் சுத்தமாகஇருக்க வேண்டும். இது மிக மிக அவசியம்.


நோன்பு திறக்கும் நேரம், முதலாவதாககுடிக்கும் நீரில் எலுமிச்சைச் சாறும், தேனும் கலந்துகுடித்தால் உடல் களைப்பின்றிஇருக்கும். எலுமிச்சை ஆரஞ்சு சாறுகளுடன் சிறிது உப்பு சேர்த்துக் குடிக்கலாம். பழச்சாறிலுள்ளபொருள்களும், உப்பும் உடலைத் தூய்மைப்படுத்த உதவும் .


நோன்பு நோற்பவர்கள் திறந்தவெளியில் மாலை வெயில் உடலில் படும்படி சிறிது நேரம் அமர்ந்திருப்பது நல்ல பயன் தரும். அவரவர் மனதைஅடக்கி சிந்தனையைச் சிதற விடாமல் மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும் .


நோன்பு காலம் முடிந்த பின்புநல்ல பசி எடுக்கத் தொடங்கிவிட்டால் , உடலில் உள்ள தீய பொருள்கள் நீங்கிவிட்டதாகவும், உடல் நல்லநிலையை அடைந்துவிட்டதாகவும் கருதிக் கெள்ள வேண்டும் .


இரைப்பை, உணவுப் பாதைமுதலியன நோன்பு முடியும் வரை   முழுமையானஉழைப்பு இல்லாதிருத் தலால் நோன்பு முடிந்தவுடன் திடீரென்று அதிக அளவில் சாப்பிடுவதுநல்லதல்ல . ஓரிரு நாட்களுக்கு எளிதாகச் செரிக்கும் உணவு வகைகளைச் சாப்பிடலாம் . அல்லது பழரசம்குடிக்கலாம்.


எல்லா மதத்தவரும் அவரவர் சம்பிரதாயப்படிஉபவாசம் மேற்கொள்வர்   என்றாலும் , முஸ்லிம்கள் ரம்ஜான் மாதம் முழுவதும் பகலில் தண்ணீர் கூடப் பருகாமல் நோன்பு இருக்கிறார்கள். நோன்பு திறக்கும்போது அரிசி, உளுந்து, சுக்கு சேர்ந்த கஞ்சி செய்து சாப்பிடுகிறார்கள் . இவைகள் உடம்புக்குதெம்பு கொடுக்கும்.


நோன்பால் புலன்கள் கட்டுப்படும். ஜீரண உறுப்புக்களுக்குஓய்வு கிடைக்கும்.   பட்டினிகிடக்கும் அடுத்தவரின் துன்பமும் புரியும் .

உபவாசமிருப்போம் ..

உற்சாகமாக வாழ்வோம் ...


(தழுவல் , தினமணி கதிர் 26-01-2003 எழுதியவர் டாக்டர் S. பிரேமா)

தகவல் : கறீம்கான்பாக்கவி