ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai     »      2014      »      Jul2014      »      அமுத மொழிகள்


சங்கைமிகு ஷைகு நாயகம் அவர்களின்

அமுத மொழிகள்


   14.05.2014 அன்று திண்டுக்கல் தலைமை கலீபா எச் . எம் . ஹபீபுல்லாஹ் ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற மஜ்லிஸில் ஆற்றிய அருளுரை தொடர்ச்சி ...


தாற்பரியம் அறிக !


    நமக்குதவ்ஹீதுதான் முக்கியம் . கண்ட கதைகளை கதைப்பதனால்எந்தப்பயனும் இல்லைஅந்த சரித்திரம். இந்த சரித்திரம் என பலவற்றைப் பேசுவதில்பயன் இல்லை . எனவே தாற்பரியத்தையே விளங்க வேண்டும். உலகம் என்றால் என்ன? மலாயிகாமார் என்றால் என்ன? ரஸூல்மார்கள் என்றால் என்ன? அவர்களின் தாற்பரியம் என்ன? என விளங்க வேண்டும்.


    மனிதனாக நான் பிறந்திருக்கின்றேனே என்னுடையதாற்பரியம் என்னஎன்னைப் பற்றி நானே தெரிந்திருக்கவில்லையென்றால் என்ன பயன்அதனால் தான் ரஸூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் மன் அரப நப்ஸஹு பகத் அரப ரப்பஹுஎவன் தன்னை அறிந்தானோ அவன் தன் ரப்பை அறிந்து கொண்டான் எனதன்னைஅறிவது எப்படி? தன்னை அறிய முயற்சிக்க வேண்டும்.


 அதற்கு ஆர்வம் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பொருளை நாம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு ஆர்வம் இருக்க வேண்டுமல்லவா? காலையில் குர்ஆன் ஓதச் சொல்லப்பட்டுள்ளது. நாங்கள் ஓதாமலே இருக்கிறோம். கட்டாயம் ஓதச் சொல்லி இருக்கிறதல்லவா? எனவே அவசியம் ஓத வேண்டும் என மனதில் ஒருதிடம் வர வேண்டும். எனவே தெளஹீதை விளங்குவதற்கு ஆர்வம் இருக்கவேண்டும்ஏன்?


  ஷரீஅத்தை விளங்குவதற்கும் ஆர்வம் இருக்கத்தான்வேண்டும். ஆர்வமில்லாமல் தொழப்போய் அல்லாஹு அக்பர்என தக்பீர் கட்டி, எதை எதையோ எண்ணிக் கொண்டு, குனிந்து , நிமிர்ந்து தலையைக் குத்தி எழுவதால் புண்ணிமிருக்கிறதா ? ஒழுங்குமுறைப்படி செய்தால் தான் அது தொழுகை!


யானையும் பூனையும்!


    தொழுகையின் நிலையில் கால்களை யானை போகுமளவு அகட்டி வைப்பது... அது ஒரு புதிய மார்க்கம். ஒரு பூனை போகுமளவு வைக்க வேண்டுமெனச் சொல்கின்றார்கள்அதுதான் முறைபூனை போகுமளவுக்கும் யானை போகுமளவுக்கும் எவ்வளவு வித்தியாசம்? இப்படித் தொழுவதெல்லாம்தொழுகையெனக் கூற முடியாது! தலையில் கை கட்டுவது. நெஞ்சின் மேலே கையைக் கட்டுவது. இதெல்லாம் ஓர் ஒழுங்குமுறை அல்ல.


    முதன் முதலாகக் காட்டிக் கொடுக்கப்பட்டதுதான்ஒழுங்குமுறை. ஹனஃபிய்யாக்கள் வயிற்றில் தொப்புளுக்குக்கீழும், ஷாஃபியாக்கள் இடது மார்பின் மீதும் கைகட்டுவார்கள். மத்ஹபுகள் சொன்னபடி ஒழுங்கு முறையில் தொழுதால் தான் தொழுகை. இந்த முறைகள் அறியாத ஒருவர் எனக்குத் தெரியாதேஎன தொழாமல் இருக்க முடியாது. எப்படியும் தெரிந்த முறையில் தொழுதுவிட்டு, தொழுவது எப்படி எனும் முறையை கற்றுக் கொள்வது அவருக்கு பர்ளாகும். தொழுகையைப் பற்றி அறிந்தவரிடம் சென்று பர்ள் என்ன? சுன்னத் என்ன? என்பதெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.


    தொழும் முறையைப் பற்றி அறிந்தால் கூட அதிலேயே பர்ளு சுன்னத் எல்லாம் அடங்கி விடுகிறது. எனவே தொழாமல் இருப்பதற்கு எந்த வழியுமில்லை. எந்த சட்டமுமில்லை. அதனை நிறைவேற்ற வேண்டும். அது ஒழுங்காகவும் இருக்க வேண்டும். அப்படி ஒழுங்காக நிறைவேற்றப்பட்ட தொழுகைதான் அல்லாஹ்விடம் ஒப்புக் கொள்ளப்படும்.


ஓர் ஆபிதின் நிலை !


    பேரின்பப்பாதை நூலில் ஓர் ஆபிதைப் பற்றி எழுதியிருந்ததை வாசித்திருப்பீர்கள்! அந்த ஆபித் அதிகமாகத் தொழுது வந்ததன் அடையாளமாக இருகைகள் - முழங்கால் - நெற்றி -   இவற்றிலெல்லாம்காய்ப்பு வடு ஏற்பட்டிருக்குமாம் . அவர் , எங்கள் பாட்டனார் ஜமாலிய்யா மெளலானா ( ரலி ) அவர்களின் அத்தியந்த நண்பராக இருந்தவர். அவர் மறைந்த பிறகு இவர்கள் கனவில் அவரைக்கண்டபோது, உங்கள் பிரயாணம் எப்படி இருந்தது? என எம்பாட்டனார் கேட்க , என்னை கப்ரில் வைத்துவிட்டு மக்கள் அகன்றதும் , கப்ரு என்னை நெருக்கத் தொடங்கியது ! நான் பூமியிடம் என்னை ஏன் நெருக்குகிறாய் ? என்னை ஆபிதென மற்றவர்கள் அழைக்கும் அளவுஅதிகமான வணக்கம் புரிந்தவனல்லவா ? எனக் கேட்டேன். அதற்கு பூமி சொன்னது! நீங்கள் தொழுத அத்துணை தொழுகையிலும் ஒரு குறிப்பிட்ட தொழுகைகளே ஏற்றுக் கொள்ளப்பட்டதும்அதனால் தான் நெருக்குகிறேன் என்றது


    அதேபோல சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்கள்பள்ளிக்குத் தொழவராமலே இருந்த தங்கள் தம்பியை தாயாரிடம் சொல்லி பள்ளிக்கு வரச்செய்தார்கள். அப்பா அவர்கள் இமாமாக நின்று தொழவைக்க, பின்னாலே நின்று தொழுத தம்பி இடையிலேயே தொழுகையை விட்டுவிட்டு வெளியே போய்விட்டார். தம் தம்பி செய்த காரியத்தை தாயாரிடம் கூறி விசாரிக்கச் செய்தபோது, அண்ணன் தொழவைக்கும் போது தம் மனதில், மழைவருவதுபோல இருந்ததே... மழைவந்து விட்டால் மாடு நனைந்துவிடுமே... என நினைத்துக் கொண்டே தொழ வைத்தார். தொழுகை சேராதல்லவா? அதனால்தான் வந்துவிட்டேன் எனச் சொன்னாராம். இந்த விஷயத்தை அறிந்த அப்பா அவர்கள் தம்தம்பியின் நிலையைப் புரிந்து, தம்பியின் விஷயத்தில் இனி யாரும் எதுவும் பேச வேண்டாம் எனச் சொல்லிவிட்டார்களாம். இத்தகைய பெரியார்களுக்கே அந்த இடங்கள்வருகிறது.


தொழுகை - ஓதல்


    எனவே தொழுகையில் அந்த எண்ணம் வருகிறது. இந்த எண்ணம் வருகிறது என நீங்கள் தொழாமலிருக்க முடியாது. தொழுகை விஷயத்தில் கவனமாக இருந்து எல்லோரும் கட்டாயமாக தொழுதுவர வேண்டும்.


    ஸுபுஹு தொழுகைக்கு எழுந்து தொழுதுவிட்டு குர்ஆன் ­ ஷரீஃபை கொஞ்சமேனும் கட்டாயமாக ஓதிவரவேண்டும். அப்படி ஓதவில்லையென்றால் எல்லாமே வீண்தான். ஓரிரு வரிகளாவது ஓதிவிட்டபின்னரே மற்றஎல்லா வேலைகளையும் வைத்துக் கொள்ள வேண்டும்.

( அமுதம் மேலும் பொழியும் )