ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai     »      2014      »      Jul2014      »      திருமறைப்பக்கம்


திருமறைப் பக்கம்

ஜக்காத்து வழங்கி தற்காத்து கொள்வோம்


   தொழுகையைநிலை நிறுத்துங்கள் . மேலும் ஜக்காத்தைவழங்கி வாருங்கள் ! என அல்லாஹ் அருள்மறையில் அருளியுள்ளான். அகீமுஸ்ஸாத்த வஆதுஸ்ஸகாத்த” எனும் தொடர் வாக்கியம் திருமறையில் பலஇடங்களில் மீண்டும் மீண்டும் வருகிறது . இறைவன் தொழுகையைப் பற்றி ஆணையிடும்போதெல்லாம் தொடர்ந்து ஜக்காத்தைப்பற்றியும் ஆணையிடுகின்றான்

.

    இன்றுமுஸ்லிம்களிடம், தொழுகையில் காட்டும் ஆர்வம் ஜக்காத்துவழங்குவதில் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறியாகத்தான் நிற்கும். இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் இரண்டை வசதிபடைத்தவர்களுக்காக அல்லாஹ் ஒதுக்கிவிட்டான் . ஒன்று ஜக்காத் - மற்றொன்று ஹஜ்ஜு.


    வசதியானவர்கள் ஹஜ்ஜுக்குச் செல்வதில் காட்டும்வேகம் ஜக்காத்து வழங்குவதில் காட்டுகிறார்களா? எனில் அதுவும் கேள்விக்குறிதான் ! மீண்டும் மீண்டும் உம்ராவுக்குச் செல்பவர்கள்கூட நாம் நம் பணத்தை சரியாக கணக்கிட்டு ஜக்காத்து கொடுத்து விட்டுத்தான் மக்காவுக்குவந்தோமா ? என கவலைப்படுவதாகத் தெரியவில்லை.


    பணம் கைக்கு வரும்போது ஏற்படும் மகிழ்ச்சிஅது கையை விட்டுப் போகும்போது ஏற்படுவதில்லை . ஜகாத்தில் பொருள் போவதுபோல் தெரியும் . ஆனால் அதுவே பணம் நம்மைவிட்டுப் போகாமலிக்கஇறைவன் வகுத்த   நியதி.


    தொழுகையிலும் ஜக்காத்திலும் ஒரு ரகசியம்பொதிந்திருக்கிறதுநாம் பஜ்ருத் தொழுகையை தொழுது முடித்துவிட்டால் லுஹர் வரை உள்ள நேரம் நமக்கு   ஹலாலாகி விடுகிறது !   லுஹர்முடித்தால் அஸர் வரை உள்ள பொழுதும் ...   இப்படியே ஒவ்வொரு தொழுகை முடிக்கும்போதும்அடுத்துவரும் நேரம் அல்லாஹ்வின் அருளாக நமக்குத் தரப்படுகிறது.


    அதுபோலவே நம்மிடம் சேர்ந்த பணத்திற்கு 21/2 சதவிகிதம் கணக்கிட்டுக் கொடுத்து விடும் போது மீத முள்ள பணமெல்லாம் அருளுக்குரியதாக - பரக்கத்தானதாக மாறிவிடுகிறது .   பொருளாக இருந்த அது அருளாக மாற்றம் பெறுகிறது .   விதிக்கப்பட்ட ஜக்காத்து கொடுக்காமல் போனாலோ - அது இறைவனின் பாதுகாப்பு வளையத்தை விட்டு மாறி ஆபத்தானதாகவும், அருவருப்பாகவும் மாறிவிடுகிறது.


    ஜக்காத்து கொடுக்கப்பட வேண்டிய பணம் ; அது உடம்பில் சேரும் கொலஸ்ட்ராலைப்போல்கொழுப்புச்சத்து நீக்கப்படாவிட்டால் அது இதயத்தை இயங்காமல் தடைசெய்துவிடும்கொலஸ்ட்ரால்சேராமல் தற்காத்துக் கொள்வதுபோல ஜக்காத்துப் பொருளையும் உரியவர்களுக்கு வழங்கிவிட வேண்டும்அப்போதுதான் இம்மையிலும் - மறுமையிலும் பாதுகாப்பாக வாழ முடியும்.