ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai     »      2014      »      Jul2014      »      ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்


ஜமாலிய்யா தோட்டத்தில் கொய்த மலர்இறைகேட்டது   :    நீர் இப்படியே பரிபூரணமாய் இருக்க விரும்பினீரா ?


யான் விடுத்தது  :    இறைவா , ஆம் , அப்படியே இருப்பதோடு என்னை வெளிக்கொணரவும்விரும்பினேன் .


இறைகேட்டது    :    அப்போது பரிபூரணத்திற்கு என்னவானது ?


யான் விடுத்தது  :    இறைவா அப்போது பரிபூரணம் சலனமடையத் தொடங்கிற்று.

இறைகேட்டது    :    சலனமென்பதென்ன ?


யான் விடுத்தது  :    இறைவா , அது தோன்றவிருக்கும் நிலை.


இறைகேட்டது    :    அது எப்படி ?


யான் விடுத்தது  :    இறைவா , அஃது யானென்ன விருந்தது நாமாகத் தோன்றஇருந்த ஆரம்ப நிலை.


இறைகேட்டது    :    நான் வெளித்தோன்ற நினைத்தேன் என்கிறீரே அதன் தாற்பரியம் என்ன ?


யான் விடுத்தது  :    இறைவா , நானெனக்கூறும் நீ வெளித்தோன்ற நினைத்ததாலேதான்     நாம் வெளிவந்தோம். நாம் வராவிட்டால் உம்மை எப்படி அறிந்து கொள்ள முடியும் ?


இறைகேட்டது    :    அப்போது என்ன நடந்தது ?


யான் விடுத்தது  :    சிறிது சிறிதாய் முழுமை பிரியத் தொடங்கிற்று.


இறைகேட்டது    :    நான் நாமானது எப்படி ?


யான் விடுத்தது  :    இறைவா , நான் மிக நுணுக்கமாய்ப் பிரிந்தேன் . நுண்ணணுக்களானேன் அப்படிப்பிரிந்த என்னிலிருந்தே ஐம்பூதங்களும்பிரிந்தன. இதுவேதான் நானாயிருந்த நான் நாமான வாறு.


(தாகிபிரபம் எனும் மெய்ஞ்ஞான இலக்கியக்கருவூலத்தில் சங்கைமிகு செய்கு நாயகம்அவர்கள் )