ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai      »      2014      »      Jul 2014      »    ஞானதுளிகள்ஞானதுளிகள்


தொகுத்தவர் : -

திருமதி G.R.J. திவ்யா பிரபு I.F.S., சென்னை

 


அருள் தாகம் மனிதருக்கு எப்போதுஉண்டாகும்?


மனிதன் உலக ஆசைகளில் உழன்று கொண்டிருக்கிறான். இந்த ஆசைகளை நிறைவேற்றிச் சலித்துப் போன பிறகு அருள் தாகம் தானாகவருகிறதுபொம்மைகளை வைத்து விளையாடும்போது குழந்தை தாயை நினைப்பதில்லைவிளையாடிச் சலித்துப் போன பிறகுதான்தாயின் ஞாபகம் வருகிறது.


நீ எம்மதத்தைச் சேர்ந்தவன் என்பது முக்கியமானதல்ல. நீ எவ்வளவு தூரம் அருள் தாகம் பிடித்தவனாக இருக்கிறாய் என்பதே முக்கியமானது. ஒருவனுக்கு அருள்தாகம் தீவிரமாக உண்டாகுமாகில் அவன் எம்மதத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் இறைவனை நிச்சயமாக அடைவான்.


நாடகத்தில் பெண்பாலாக நடிக்கிறவனுக்கு நாளடைவில் பெண்ணியல்பு வந்து அமைகிறது . பித்தம் அளவுக்கு மீறினால் காமாலை வந்து சேர்கிறதுஅப்பொழுது பார்க்கும் பொருளெல்லாம் மஞ்சள் நிறமாகத் தென்படும்அதே விதத்தில் தீவிரமான அருள்தாகம் யாரிடத்து இருக்கிறதோ அவன் இறையை அறிகின்றான்; அடைகின்றான்.


இறையை இக்கலியுகத்தில் சரியான அருள் தாகமெடுத்து மனிதன் கதறியழுவானாகில் ஒரே நாளில் இறை அனுக்கிரகத்துக்குப் பாத்திரமாகமுடியும் என்று சொல்லப் பட்டிருக்கிறது.


அருள்தாகம் என்றால் என்ன ?


தன் உத்தியோகத்தை இழந்து விட்ட குமாஸ்தா மீண்டும் பணி கிடைத்தால் அவனடையும் நிம்மதியும் சந்தோ ­ மும் போன்றதே அருள்தாகம்.


இறையருள் அடையப் பெற்றதன் அறிகுறிகள் சில இருக்கின்றனயார் ஒருவனிடம் அருள்தாகம் தீவிரமாக உண்டாகியிருக்கிறதோ அவன் அதிவிரைவில் இறையைக் காண்பான். அருள்தாகம் உண்டாவதற்கு முன்பு ஒருவனிடத்து நித்திய அநித்தியவஸ்து விவேகம், அநித்தியவஸ்துவிடத்து வைராக்கியம், உயிர்களிடத்து அன்பு, இறைவனுடைய திருநாமத்தை உச்சரிப்பதில் ஆர்வம், சாதுமகாத்மாக்களுக்குத் தொண்டு புரிதல் , சத்சங்கத்தில் விருப்பம், சத்தியமே பேசுதல் ஆகிய பேரியல்புகள் உண்டாகின்றன.


அவற்றைப் படைத்திருப்பவனுக்கு அருள் தாகமும் விரைவில் வந்தமைகிறது. அத்தகையவன் விரைவில் இறையருள்பெறுவான். இலங்கையில் சிறைகிடந்த சீதையை நீ எவ்வாறு கண்டாய்? என்று ராமர் ஆஞ்சநேயனிடம் கேட்டார். அதற்கு ஆஞ்சநேயன், சீதையின் உடல் மட்டும் ஆங்குச்சிறை கிடக்கிறது. அவளுடைய உள்ளமும் உயிரும் யாண்டும் உன் திருவடியைச் சார்ந்துகிடக்கின்றன என விடை தொடுத்தான். உன்னைக் கண்டேன் உன்னில் அவனைக் கண்டேன்.


உனக்கு மனபரிபாகம் வரும்பொழுது அதைத் தொடர்ந்து அருள் தாகமும் வருகிறது. தூய மனம் படைத்திருக்கிறவன் செய்கிற பிரார்த்தனைக்கு இறைவன் செவி சாய்க்கிறான்அருள் தாகம் பிடித்திருக்கிற ஒருவன் தனது மார்க்கத்தைச் சரியாக அறிந்து கொள்ளாதிருந்தாலும் அதனால் அவனுக்கு இடைஞ்சல் ஏற்படாது!


உலக வாழ்வைச் சிறிது அனுபவிஎன்று இறை உலகத்தவருக்கு அனுமதி கொடுப்பது இறை விளையாட்டுஇறை அருள் இன்றி மனதானது உலகபந்த பாசத்தினின்று விலகி இறையை நாடுவதில்லை.


ஒருவன் ஆயிரந்தடவை முயலலாம்ஆனால் இறைவனுடைய அருள் இன்றிஅவன் இறையைக் காண முடியாது. செயலுக்கு நான் கர்த்தா என்கிற எண்ணம் சிறிதளவாவது ஒருவன் உள்ளத்தில் இருக்கும் பொழுது அவன் அருளுக்குப் புறம்பானவன் ஆகிறான். அருள் எளிதில் வாய்ப்பதன்று. ஒருவன் அதற்கென்றே தன்னை முற்றிலும்இறைவனிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.


இறைவன் நமக்குப் பக்தியையும் ஞானத்தையும் நல்குவாராகில் அதைக் கருணை எனலாம். அவரை வற்புறுத்தி அவருடைய கருணையைப் பெற நாம் முயல வேண்டும். மகன் ஒருவன் தனக்குத் தக்க வயது வரும் முன்பே தந்தையோடுப் போராடித்தனக்குரிய சொத்தைப் பட்டினி கிடந்தாவது பெற்று விடுகிறான்சிறுவன் ஒருவன் பரிந்தழுதுதாயிடமிருந்து தனக்குத் தேவையாயுள்ள சில்லரைக் காசு சிலவற்றை வாங்குகிறான்அங்ஙனம் இறைவனுடன் போராடி நாம்அவர் அருளை நமக்குரியதாக்கலாம்.


உயிர்கள் தவித்திருந்த பிறகே இறைவனை அடைவதற்கு அவர் அனுக்கிரகம் பண்ணுவது அவருடைய பெரிய விளையாட்டு.


தாய் வேண்டுமென்றே மறைந்திருக்கிறாள்அப்பொழுது குழந்தை ஏக்கம் பிடித்தவனாக இங்குமங்கும் பதறி அழுது கொண்டு தாயைத் தேடுகிறான்அவனுடைய பரிதாபகரமான நிலையைப் பார்த்துத் தாய்க்கு இரக்கம் வருகிறதுஇறைவனுடைய கிருபையும் அத்தகையது.


இறை அருளை நீ முதலில் பெறுவாயாகில் பிறகு அவருடைய மகிமை முழுதும் உனக்கு எளிதில் விளங்குகிறது.


இறை அனுக்கிரகம் சிறிதளவாவது ஒருவனுக்கு வாய்க்குமாகில் அவன் முன்னிலையில் மகா பண்டிதர் களெல்லாம் புழுவுக்குச் சமமானவர்கள்.


தானியத்தை ஒருவன் அளக்கின்றபொழுது மற்றொருவன் அதைத் தள்ளிக் கொடுக்கிறான். இறைவனுடைய அருளைப் பெற்றிருக்கிறவனுக்கு ஞான விஷயங்களையெல்லாம் இறைவனே தள்ளிக் கொடுக்கிறார்.


அருள் நிலையிலிருந்து பாடுகிறவர்களுடையபாடல்களில் அருள் சக்தி உண்டு . மற்றவர்கள் உள்ளத்தினும் பேருணர்வை அப்பாடல்கள் கிளப்புகின்றனபிரம்மம் சத்தியம்; ஜகத் மித்தை என்னும் வேதாந்தத்தின்சாரத்தை இறை, கிருபைகூர்ந்து எனக்கு காட்டியளிக்கின்றது. இனி சாஸ்திரங்களால் எனக்கு ஆவதென்ன? வேதங்களின் உட் கருத்தையும்புராண சாஸ்திரங்களின் உட்கருத்தையும், நீ எனக்குக் காட்டியருள்வாயாக! என்று இறையிடம் கண்ணீரும் கம்பலையுமாக நான் பிரார்த்தனை பண்ணினேன் . கிருபை கூர்ந்து எனக்கு அனைத்தையும் காட்டியருளியுள்ளது.