ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai      »      2014      »      Jul 2014      »     மகளிர் பக்கம்


மகளிர் பக்கம்

இயங்க வேண்டும்
செயல் வீராங்கனைகளாக ..!

ஹாஜ்ஜா . பாத்திமுத்துசித்தீக் .


 

இஸ்லாமியருக்கு இந்துக்கள், கிறிஸ்துவர்கள், புத்த மதத்தவர்களைப்பற்றித் தெரிந்த அளவு விஷயங்கள் இஸ்லாமியரைப் பற்றியே அவர்களுக்குத் தெரிந்திருப்பதில்லை. தெரிந்துகொள்ளவும் முயல்வதில்லை. அதனால் தான் முஸ்லிம்களைப் பற்றி தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள்.


அதிகம் பரிச்சயமில்லாதவர்களுடன்எதேட்சையாக சம்பாஷிக்க நேர்ந்தால் ஏங்க உங்கள் கணவர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள்செய்து கொண்டால்...? உங்கள் கணவர் கோபத்தில் தலாக்... தலாக்... கூறிவிட்டால்? எனக் கேட்பதுசர்வ சாதாரணம். வேறு சிலர் ஒருபடி மேலே போய் ஏங்க உங்களவர்களில் பெண்களை வீட்டுக்குள்ளேயேமுடக்கி வைத்து விடுகிறார்கள்..? என்கிறார்கள்.


அறியாமையாலோ, காழ்ப்புணர்ச்சியாலோ நம்முடைய கட்டுப்பாடான வாழ்க்கை நெறிமுறைகளைப் பார்க்கும் பிற சமூகத்தவர்களுக்கு சுலபத்தில்கை கொடுப்பது, முஸ்லிம்கள் நான்கு கல்யாணம் வரை செய்து கொள்ளலாம் என்று பொருள்படும்பலதார மணம் தான் ! இஸ்லாமிய தலையாய குறிக்கோளே அது தான்   என்பது போல விமர்சித்து எரிச்சலைத் தூண்டுவது போலக் காயப்படுத்துவதுண்டு !


இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில்பொறுமையாக அமைதி காத்து  விருப்பப்பட்டால் அதன் தாற்பரியத்தை எளிய வார்த்தைகளில் எடுத்துரைக்கலாம்.   இப்படி எடுத்துரைப்பதற்கு மார்க்கத்தைப் பற்றிய வி ­ ஷயங்களைத் தெள்ளத் தெளிவாகத்தெரிந்திருக்க வேண்டும்.

பலதார மணத்தைப் பொறுத்த வரைஇஸ்லாம் இதை ஒரு சலுகையாகத்தான் தந்திருக்கிறது , மனித இயல்பைநன்கு புரிந்து கொண்டு.


ஒருவனுடைய மனைவி தீராத வியாதிக்காரியாகவோ வாரிசுகளைப் பெற்றுத்தரமுடியாதவளாகவோ, புத்தி சுவாதீனமில்லாதவளாகவோ இருந்தால் பலதார மணச் சலுகை உதவியாகஇருக்கும். ஒரே மனைவியுடன் திருப்தி ஏற்படாத, பாலுணர்வுஅதிகமுள்ள ஒரு மனிதன் செல்வந்தனாகவும், இறையச்சமுள்ளவனாகவும் இருந்தால் மார்க்க ஒழுங்குக்குப் புறம்பானவழியில் சென்று கெட்டுப் போகாமல் தக்க அந்தஸ்து அளித்து நீதி நெறிமுறை தவறாமல் நடக்க, சலுகை தான்அளித்துள்ளதே தவிர வேறு எந்தவிதக் கட்டாயமும் இல்லை. அதோடு இஸ்லாமியச் சட்டப்படி முதல் மனைவி இருக்கும் போது ஒருவன் இரண்டாம் திருமணம் செய்து கொள்வதும் அத்தனைஎளிதல்ல , திருமறை சொன்ன நியதிக்கு உட்பட்டு!


திருமணம் மூலம் இஸ்லாமியச்சட்டப் பூர்வமாக பெண்களுக்குத் தரும் அந்தஸ்தை பிற சமுதாய ஆண்கள் தருவதில்லை. சின்ன வீடு - களாக , வைப்பாட்டிகளாகசெட்அப் செய்து கொள்வதோடு சரி ! அல்லது சிவப்பு விளக்குப் பகுதிகளுக்குச் சென்று சீரழிகிறார்கள் . இதனால் ஏற்படும்தீமைகளை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. நாமும் தக்க தருணங்களில் சுட்டிக் காட்டுவதில்லை. திருமண பந்தமின்றிப் பிறக்கும் வாரிசுகளுக்கும் தக்க உரிமைகள்கிடைப்பதில்லை!


தலாக் : தலாக், தலாக், தலாக் என்றுமூன்று முறை சொன்னதுமே மண விடுதலை.. என்று கிண்டலாக நம்முடைய மணமுறிவைப் பற்றிக் கூறிவிடுகிறார்கள். ஒரு பெண்நடத்தை பிசகினால், தவறான பாதையில் சென்றால், கணவன் தன்மனைவியைக் கடுமையாகத் திட்டலாம் அல்லது எச்சரிக்கலாம்; அப்படியும்சரிப்படவில்லையெனில் சில நாட்களுக்கு படுக்கையிலிருந்து தள்ளி வைக்கலாம்.   அப்படியும் திருந்தாதவளை இலேசாக காயம் ஏற்படுத்தாத வகையில் அடிக்கலாம், மேற்கண்டஎந்த வகையிலும் திருந்தாவிடில் மணமுறிவு தேடலாம். என்று படிப்படியாகவி ­ ஷயங்களை விவரித்துள்ளது திருமறை வசனங்கள். (4: 34)


(கணவன் - மனைவியாகிய) இருவருக்குள் (பிணக்கு உண்டாகி) பிரிவினைஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சினால், அவன் குடும்பத்தில் ஒருவரை மத்தியஸ்தராகவும் அவளின் குடும்பத்தில் ஒருவரை மத்தியஸ்தராகவும் நீங்கள் ஏற்படுத்துங்கள். அவ்விருவரும் (இவர்களுக்குள்) சமாதானத்தை உண்டு பண்ண விரும்பி ( முயற்சித்தார்களா) னால் அல்லாஹ் அவ்விருவரையும் ஒற்றுமையாக்கிவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் (யாவரையும்) நன்கறிந்தோனும் கவனிப்போனுமாயிருக்கிறான்.(4 :35)


முடிந்த வரையில் கணவன் - மனைவிக்குள்மணமுறிவு ஏற்பட்டு விடாமல் காப்பாற்றவே அத்தனை முயற்சிகளும்! உண்மையில்பெண்களுக்கு சாதகமாகவே இருக்கிறது இஸ்லாத்தின் மணமுறிவுச்சட்டம். கணவன் கண்ணியமில்லாதவனாக, நடத்தை கெட்டவனாக, ஒழுங்கீனமானவனாகஇருந்தாலோ, தீராத வியாதியோ, சித்தப் பிரமையில் இருந்தாலோ பெண்களும் குலாஎனும் மணவிடுதலைகோரலாம் திருமண பந்தத்திலிருந்து.


இறைவன் தான் வெறுக்கும் காரியங்களிலேயேமுக்கியமானதாக மணமுறிவைக் கருதினாலும், வேறு வழியற்ற நிலையில் வாழ்க்கையை வீணாக்கிக்கொள்ளாதிருக்க உரிமையளித்துள்ளது. அந்நிலையிலும் கூட மணமுறிவு ஏற்படுத்திய பெண்ணை அன்பாக நடத்தவேண்டும் என்றும் அவளைப் பற்றிய இரகசியங்களை முன்னால் கணவனாலும் பிறராலும் பாதுகாக்கப்படவேண்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது.


கேரளத்து ஐஸ்டிஸ் கிருஷ்ணய்யர்தன்னுடைய தீர்ப்பு ஒன்றில், இந்தியாவில் இன்று வழக்கிலிருக்கும் திருமணச் சட்டங்களில் மிகநவீனமானதாக இருப்பதோடு தவறின் விளைவாக நேரும் மணமுறிவுக்குக் கூட அனுபவப்பூர்வமான பொறுப்பேற்று தீர்ப்பளிக்கும் ஒரே சட்டம் இஸ்லாமிய சட்டம் தான் என்று கூறியிருப்பது இங்கு கவனிக்கத்தக்கது.


பலதாரமணம், மணமுறிவு... போன்ற புனிதமானசலுகைகளை சமூகத்தில் ஒரு சிலர் துஷ்பிரயோகம் செய்வதாலும் சினிமா, செய்திப்பத்திரிகைகள்... என்று மீடியாக்களின் மிகைப்படுத்தப்பட்டு வரும் தகவல்களாலும்தாம் தவறான எண்ணங்கள் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது என்று கருத வேண்டியுள்ளது.


முஸ்லிம்கள் என்றாலேயே பெண்களைவீட்டுக்குள்ளே முடக்கி வைப்பவர்கள் எனும் தினுசில் பேசுவது அவர்களுடைய அறியாமையையேபிரதிபலிப்பதாக உள்ளது. பெண்களைக் கொத்தடிமைகளாகவும் ஆத்மா இல்லாத ஜடங்களாகவும்   உலக சமுதாயங்கள் நடத்தி வந்த காலத்திலேயே பெண்ணுக்குரிய அத்தனை உரிமைகளையும் கொடுத்து உயர் அந்தஸ்து அளித்திருந்தது இஸ்லாம் மட்டுமே! மறைக்கப்படவேண்டிய உடல் உறுப்புகளை தக்க விதமாக மறைத்துக் கொண்டு அவர்களுடைய வெளிவேளைகளைக் கவனிக்கச்செல்ல இஸ்லாம் எந்தத் தடையும் விதிக்கவில்லை!


எகிப்து, ஈரான், ஈராக், சூடான், மலேசியா, இந்தோனேசியா... போன்ற இஸ்லாமிய நாடுகளில் தொண்ணூறு சதவீதப் பெண்கள் அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் , கல்லூரிகளில்இஸ்லாம் கூறும் பர்தா முறைகளோடு வரம்பு மீறாமல் பணியாற்றுகிறார்கள்இன்றைக்குவெகுவாக அலசப்படும் மனித உரிமைகளோ இஸ்லாத்தின் அடிப்படைத் தத்துவமாக, காலங்காலமாகஇயங்கி வருகின்றது! நம் தொழுகை, நோன்பு, ஏழைவரி, ஹஜ்ஜூ, பெருநாட்கள்... பற்றியெல்லாம் அவர்கள் விசாரிக்கும் போது பொறுமையாக நயம் பட அவர்கள் மனதில் பதிகிறாற் போல் தெளிவாக விளக்குவது சமய நல்லிணக்கத்துக்கு வழிகாட்டும். இதற்குப்போதுமான அளவு அடிப்படை விஷய ஞானம் நம் பெண்களுக்குத் தேவை.


ஓஹோ வென்று வாழ்ந்து காட்டியமார்க்கம், பிற்போக்கு வாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு இன்று நிற்பதற்குக்காரணம் இஸ்லாம் தந்த உரிமைகளையும் கடமைகளையும் ஒழுங்காகப் பின்பற்றாமல் போனதே! இஸ்லாமியப்புனரமைப்புக்குப் பெண்கள் இஸ்லாம் தந்த முன்னேற்றக் கருத்துகளை நடைமுறைப்படுத்தும்செயல் வீராங்கனைகளாக இயங்க முன்வர வேண்டும்.