ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai      »      2014      »      Jul 2014      »    உமர் ( ரலி ) புராணம்உமர் ( ரலி ) புராணம்
ஆசிரியர்

ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்

முதலாவது உதய காண்டம்

வண்ண வண்ணமாகத் தோற்றிக்
    
கண்ணுக் கழகு காட்டி நிற்கும்
எண்ணி லாத வின்பக் காட்சி
      எண்ண வெண்ண வின்ப மூட்டும்.


கொண்டுகூட்டு:


      வண்ணம் வண்ணம் ஆகத் தோற்றி கண்ணுக்கு அழகு காட்டி நிற்கும் எண் இ ( ல் ) லாதஇன்பக் காட்சி எண்ண எண்ண இன்பம் ஊட்டும்.பொருள்:


      பற்பல வண்ணங்களாகத் தோற்றி கண்ணுக்கு அழகு ( அலங்காரங்களைக் ) காட்டிநிற்கும் எண்ணற்ற இன்பக் காட்சிகள் மனத்தே யெண்ண வெண்ண வின்ப மூட்டுவனவாம் . அஃதேஇறையின்பக் காட்சி.குறிப்பு :

      வண்ணம் : அழகு , எழில் . எண்ணிலாத : எண்ணற்ற . எண்ணஎண்ண : உன்ன வுன்ன . காட்சிகளாகஇறை தன்னைத் தோற்று வித்தல் . அவை தெய்வத் தூரிகைகளால் வருணந் தீட்டப்பட்ட காட்சிகள் . மானிடனோஅதற்கருகதை யற்றவன் . இயற்கையின் அருங்காட்சி அவறன்றிருக்காட்சி.