ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai    »    2014    »    Jul2014    »    அதோ வானிலே.. ஆயிரம் ரகசியம்


அதோ வானிலே..  ஆயிரம் ரகசியம்!

வானங்கள் (Galaxies) மற்றும்பூமி (Earth) ஆகியவை எவ்வாறு படைக்கப்பட்டன என்பதைப் பற்றி அல்லாஹ்வின் திருவசனங்கள்மிகத் தெளிவாகத் தெரிவிக்கின்றனஇதனை விண்ணியல்இயற்பியலாரும் (Astrophysicists) ஏற்றுக் கொள்கின்றனர்வானங்கள் எனச் சொல்லப்படுவது விண்ணில் உள்ள சூரியன், அதைச் சுற்றிவரும் கிரகங்கள் (Planets) சந்திரன் போன்ற உபகிரகங்கள் (Satellites) மற்றும்விண்மீன் கூட்டங்களின் தொகுப்புகளான பால்வெளி மண்டலங்கள் (Galaxies) அனைத்தையும்குறிக்கும்.


வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் படைப்பைக் குறித்து ரப்புல்ஆலமீன் அல்குர்ஆன் வசனங்களில் சொல்லியிருப்பதையே தங்கள் ஆராய்ச்சியின் முடிவில் விண்ணியல்விஞ்ஞானிகள் கண்டுபிடித்துக் கூறியுள்ளனர்வானங்கள்மற்றும் பூமி ஆகியவற்றின் படைப்பைக் குறித்துச் சொல்லப்படும் குர்ஆன் வசனங்களை ஒவ்வொன்றாகஆராய்வோம்.


(அல்லாஹ்) வானங்களையும் பூமியையும் முன் மாதிரியின்றி ஆதியில் தானே உண்டாக்கினான். அவன் ஒன்றைஉண்டாக்க விதித்து அதனிடம் குன் - ஆகுக ! என்றுகூறினால் உடனே அது ஆகிவிடுகிறது (அல்பகரா - 2: 117)


இறைவன் இவ்வசனத்தில் விண்ணிலுள்ளவிண்மீன்கள் கூட்டங்களிலிருந்து மண்ணிலுள்ள அணுக்களின் கூட்டங்கள் வரை இன்னும் நம்கண்புலனுக்கு   அப்பாற்பட்டதையும் (மறைவானதையும்) சேர்த்துஆதியில் தானே அவனது   நாட்டப்படிபடைத்துள்ளான் (Primeval and eternal). ஏக இறைவன் நிர்ணயித்த விதிகளுக்கு உட்பட்டு படைக்கப்பட்டுள்ளஇவையனைத்தும் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும் அவனது ஏட்டில் பதிவு செய்யப்பட்டே உள்ளன. இதனை வானங்களிலோபூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும்அதைவிடச் சிறியதோ இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்படாமல்   இல்லை (34:3) என்னும் வசனம் மூலம் அறிகிறோம்.


இறைவன் ஒன்றைப் படைக்க நாடினால்குன் - ஆகுக (Be) என்ற கட்டளைதான் . உடனே அது படைக்கப்படுகிறது. இதனைப் பிறிதொருவசனத்தில் (54 : 50) இது கண்மூடி விழிப்பது போன்றதொரு நிகழ்வேயன்றி வேறில்லை என்றுஇறைவன் எடுத்தியம்புகிறான்.பால்வெளி மண்டலங்கள் தோற்றமும் அல்குர்ஆன் வசனமும்.


அடுத்து, வானம் புகையாகஇருக்கும்பொழுது பூமியையும் விண்ணிலுள்ளவற்றையும் இறைவன் படைத்ததைப் பற்றிக் கீழ்க்காணும்திருவசனத்தின் மூலம் ஆராய்வோம்பிறகு அவன் (இறைவன்) புகையாகவாயுக்களாக இருந்த பொழுது வானத்தையும் பூமியையும் படைக்க நாடினான். நீங்கள்விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வானமாகவும் , பூமியாகவும்உருவாகி விடுங்கள் என்று கூறினான். அவையிரண்டும் நாங்கள் (அவ்விதமே) விருப்பத்துடனேயேவருகின்றோம் என்று கூறின. (ஹாமீம் ஸஜ்தா 41:11)


வானம் புகையாக இருந்த பொழுதுபடைப்பைத் தொடங்கியதைப் பற்றி இறைவன் ஒரே வரியில் சொல்லியதை விண்ணியல் அறிவியலாரின்கண்ணோட்டத்தில் இனி விரிவாகக் காணலாம்.


இவ்வாறு தோன்றிய பலகோடி விண்மீன்கூட்டத் தொகுப்புகளில் (Galaxies) ஒரு குறிப்பிட்ட விண்மீன் கூட்டமைப்பில்தான் நமது சூரியக்குடும்பம் (சூரியனும்அதைச் சுற்றி வரும் கிரகங்களும்) உள்ளது. சூரியக்குடும்பம் உள்ள இந்த விண்மீன் கூட்டத் தொகுப்புக்குப்பெயர் பால்வெளி மண்டலம். (MilkywayGalaxy) இந்தப் பால்வெளி மண்டலம் பெரியதொருசுருள்வளைவுகளுக்குள்ள பொருளாக (SpiralMass) 200 பில்லியன் விண்மீன்களையும் , வாயுக்களையும்துகள்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.


அந்தச் சுருள் வடிவ அமைப்பின் குறுக்களவுசுமார் 1,00,000 ஒளி வருடங்களாகும். (ஓர் ஒளிவருடம் என்பது ஒரு வருடத்திற்கு ஒளி செல்லும் தூரம்) அதாவது 9.5 லட்சம் கோடிகி. மீநமது சூரியக் குடும்பம் பால்வெளி மண்டலத்தில் அதன் மையப் பகுதியிலிருந்துபாதி தொலைவில் ஒரு சுற்று வளைவில் உள்ளதுஇந்தச் சுருள் வளைவுகளுடன் கூடிய பால்வெளி மண்டலம் ஒரு வினாடிக்கு 250 கி.மீ வேகத்தில் சங்கு சக்கரமத்தாப்பு போல சுழன்று செல்கிறது .


பால்வெளி மண்டலத்தின் மையத்திலிருந்துபாதி தூரத்தில் ஒரு சுழல் வளைவில் சூரிய மண்டலம் உள்ளது. ஒவ்வொருசுற்று வளைவுகளிலும் இளம்விண்மீன்கள் முதல் நடுவயதையடைந்த விண்மீன்கள் வரை உள்ளன. சங்குச்சக்கரத்தையொத்த இந்தப் பால்வெளி மண்டலத்தின் விட்டம் 95000000000 கோடி கி.மீ அப்படியானால் விண்வெளியின் விரிவு? கற்பனைக்கு எட்டாதது. பால்வெளி மண்டலத்தில் உள்ள நமது சூரியனும் ஒரு விண்மீன்தான். விண்ணியல்விஞ்ஞானிகளின் கூற்றுப்படி சூரியன் 5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது. இவ்விதமே பூமியும் சூரியனும் ஒரு கிரகமாகப் படைக்கப்பட்டது. ஆரம்ப நிலைபூமி வாயுக்களையும் திடப்பெருள்களையும் கொண்டிருந்தது. காலக்கிராமத்தில் அதன் பருமன் சிறுத்துவிட்டது.


இவ்வாறு விண்மீன்கள், சூரியன், சந்திரன், பூமி, கிரகங்கள்மற்றும் விண்ணிலுள்ளவை அனைத்தும் ஒரு பொதுவான வாயுப்புகையிலிருந்து (Nebula) தோன்றினஎன்பதை 1400 ஆண்டுகளுக்கு முன்னரே திருக்குர்ஆன் வசனங்கள் தெரிவித்துவிட்டன என்பதை அறிந்த பேராசிரியர் டாக்டர் ஆல்ஃபிரட் குரோனர் (Professor of Geology, Institute of Geosciences,Johannes Gutenberg University, Maniz, Germany) வியப்படைந்து கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.


கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்தான்வானம் மற்றும் பூமி படைக்கப்பட்ட விதம் குறித்து அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி உதவியுடன்அறிவியலாளர் கண்டுபிடித்திருக்கின்றனர். அப்படியிருக்க அணு இயற்பியல் அறிவு இல்லாத 1400 ஆண்டுகளுக்குமுன்னர் ஒருவரால் நிச்சயமாக கண்டுபிடித்திருக்க முடியாதுஇது போன்றஎண்ணம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எவ்வாறு தோன்றியது என வியந்துவினா எழுப்பினார்.


அடுத்து இறைவன் வானம் , பூமி இவற்றைப்படிப்படியாகப் படைக்கப்பட்ட கால அளவைக் குறித்தும் சில வசனங்கள் வாயிலாக நமக்குச் சுட்டிக்காட்டுகிறான்பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனைநிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமா நீங்கள்தாமா ஏற்படுத்தினீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம்இறைவன் என்று (நபியே) கூறுங்கள்!

( ஹாமீம் ஸஜ்தா 41:9)


அவனே அதன் மேலிருந்து உயரமானமலைகளை அமைத்தான் . அதன் மீது (சகலவிதமான ) பாக்கியங்களையும் பொழிந்தான். இன்னும்அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப்பற்றி) கேட்கக்கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்)

(ஹாமீம் ஸஜ்தா 41:10)


அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையிலிருப்பவற்றையும் ஆறு நாட்களில் படைத்துப் பின் அர்ஷின்மீது அமைந்தான்; அவனையன்றி உங்களுக்கு உதவியாளரோ, பரிந்துபேசுபவரோ இல்லைஎனவே ( இவற்றையெல்லாம்) நீங்கள் (நினைத்து) சிந்திக்கவேண்டாமா?

(அல்ஸஜ்தா 32:4)


வியப்புகள் இன்னும் தொடரும் ...