ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai     »      2014      »      Jul2014      »      ஈதுப்பெருநாள்


கொண்டாடுவோம் !

ஈதுப்பெருநாள்

இறைவனின் பரிசு !அனஸ்பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:


ஈதுல் ஃபித்ர் இரவில், ரமளான் மாதநோன்பு நோற்றவர்களுக்கு அல்லாஹ், ஈதுல் ஃபித்ர் அன்று காலையில் மலக்குகளிடம் “நீங்கள்அனைவரும் பூமிக்குச் செல்லுங்கள்என்கிறான். அவர்கள் பாதையின் ஓரங்களில் நின்று கொண்டு அனைத்து வழிகளிலும்செல்பவர்களை சப்தமிட்டு அழைக்கிறார்கள். மனிதனையும் ஜின்னையும் தவிர மற்ற அனைத்துபடைப்புகளும் அச்சப்தத்தைக் கேட்கின்றன.


அவர்கள் முஹம்மத்நபியின் சமுதாயமே! நீங்கள் உங்கள் இறைவன்பால் புறப்பட்டுச் செல்லுங்கள். அவன் சிறியபணிகளையும் ஏற்று நிறைய நற்கூலியை வழங்குகிறான். பெரும் பாவங்களைமன்னிக்கின்றான். நீங்கள் உங்கள் தொழும் இடத்திற்குச் சென்றால் தொழுங்கள். பிரார்த்தனைசெய்யுங்கள். அல்லாஹ் உங்கள் எந்தத் தேவையையும் நிறைவேற்றாமல் விடுவதில்லை. உங்கள் கோரிக்கைகளுக்குபதிலளிக்காமல் இருப்பதில்லை. உங்கள் எந்தப் பாவத்தையும் மன்னிக்காமல் இருப்பதில்லை. நீங்கள்அனைவரும் (திரும்புகையில்) மன்னிப்பைப் பெற்றே திரும்புவீர்கள்”. என வானவர்கள் கூறுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : அல்குன்யா)இப்னு அப்பாஸ் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:


மக்கள் அனைவரும் தொழும் இடத்திற்கு வந்ததும், அல்லாஹ்மலக்குகளிடம் மலக்குகளே!” என்கிறான் . அவர்கள் இதோ வந்து விட்டோம் என்கிறார்கள்.   அவர்களிடம் அல்லாஹ், “ அவர்கள்தங்கள் வேலையை மிகவும் நேர்த்தியாக செய்ததற்கு கூலி என்ன?” என்றதற்கு மலக்குகள் எங்கள் இறைவனே! எங்கள் தலைவனே! எங்கள் அதிபதியே! அவர்களின் கூலியை நீயே நிறைவேற்று,” என பதிலளிப்பார்கள். அல்லாஹ்சொல்கிறான். “ எனது மலக்குகளே! உங்களை நான் சாட்சிகளாக வைத்து ரமளான் மாதத்தில் அவர்கள் நோன்பு நோற்றதற்கும், நின்று வணங்கியதற்கும் கூலியாக எனது பொருத்தத்தையும், இன்னும் எனது மன்னிப்பையும் வழங்கிவிட்டேன் என்று சொல்கிறான் என நபிகளார் நவின்றார்கள். (நூல் : அல்குன்யா)


இரண்டு பெருநாட்களிலும் குளித்துவிட்டுபுத்தாடை புனைந்து வாசனைத் திரவியங்கள் பூசிக்கொள்வது ஸுன்னத்தாகும்.அப்துல்லாஹ்பின் உமர் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:


கடைத்தெருவில் விற்பனை செய்யப்பட்ட பட்டு அங்கி ஒன்றை உமர் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் எடுத்துக் கொண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின்தூதரே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். பெருநாளிலும், தூதுக் குழுவினர்களைச்சந்திக்கும் போதும் நீங்கள் இதையணிந்து அலங்கரித்துக் கொள்ளலாம்,” என்று கூறினார்கள்உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது ( மறுமைப் ) பேறு அற்றவர்களின் அடையாளமாகும் எனக் கூறினார்கள். (உமர் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் பட்டு அங்கியைக் கொடுத்ததால் நபிகளார் மறுத்துவிட்டார்கள்.  என்பது குறிப்பிடத் தக்கது.

(நூல் : நஸயி 1559, முஸ்லிம் , அபூதாவூத் , புகாரி)


நோன்புப் பெருநாள் அன்று ஸுப்ஹுதொழுகைக்குப் பிறகு ஒற்றைப்படையாக பேரீத்தம் கனியை சாப்பிடுவதும் காலை உணவை முடித்துவிட்டு ஈத் தொழுக செல்வதும், ஹஜ்ஜுப் பெருநாளில் காலை உணவு சாப்பிடாமல் பேரீத்தம் கனியை மட்டும்சாப்பிட்டுவிட்டு தொழச் செல்வதும் சுன்னத் ஆகும்.அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்அறிவிக்கிறார்கள்:


சில பேரீத்தம் பழங்களைஉண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறப்பட மாட்டார்கள். மேலும் அவற்றைஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிடுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

(நூல் : மிஷ்காத்)புரைதா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்அறிவிக்கிறார்கள்:


நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் ஈதுல் ஃபித்ர் (நோன்புப் பெருநாள்) அன்று சாப்பிடாமல்தொழுவதற்குப் போக மாட்டார்கள். ஈதுல் அல்ஹா (ஹஜ்ஜுப் பெருநாள்) வில் தொழுது முடிக்கும்வரை சாப்பிமாட்டார்கள்.

(நூல் : திர்மிதி , இப்னுமாஜா , தாரமி)


இரண்டு பெருநாட்களின் தொழுகைநேரம் சூரியன் உதயமானதிலிருந்து முற்பகல் நேரம் வரையாகும்.அப்துல்லாஹ்பின் புஸ்ரா ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்: 


லுஹாஎனும் முற்பகல்நேரத் தொழுகை நேரத்தில் நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் பெருநாள் தொழுது முடித்து விடுவோம்.

(நூல் : அபூதாவூத் . பக்கம் : 16)


பெருநாள் தொழுகையை பள்ளியில்தொழாமல் ஊரைவிட்டு வெளியில் திடலில் தொழுவது ஸுன்னத்தாகும்.அபூஸயீத் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்:


நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் நோன்புப் பெருநாளிலும் ஹஜ்ஜுப் பெருநாளிலும் (பள்ளிவாசலில்தொழாமல்) மைதானத்திற்கு செல்பவர்களாக இருந்தார்கள். (புகாரி , பக்கம் 131)


பெருநாள் தொழ திடலுக்கு ஒருவழியில்சென்று மற்றொரு வழியில் வருவது ஸுன்னத்தாகும்.ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்அறிவிக்கிறார்கள்:


பெருநாள் வந்துவிட்டால்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ( செல்வதற்கும் திரும்புவதற்கும்) பாதைகளைமாற்றிக் கொள்வார்கள்.

(நூல் : மிஷ்காத் , புகாரி , முஸ்லிம்)


இஸ்லாமியர்கள் தங்கள் ஒற்றுமையையும், சக்தியையும்மற்றவர்களுக்குக் காட்ட வேண்டும் என்று எண்ணி மாநாடுகள் போடத் தேவையில்லை. (இவைகளை நடத்தபெருமானார் வழியும் காட்டவில்லை) பெருநாள் தொழுகைக்காக ஓர் ஊரிலுள்ள அனைத்துப் பள்ளியிலும் தொழும்மக்கள் பெருநாள் திடலுக்கு வந்து தொழுது விட்டு பெருமானார் கூறியபடி கலைந்து சென்றால்போதும், இது அரசியல் கலக்காத ஆன்மீக மாநாடாக அற்புத ஊர்வலமாக அமையும். அதே வேளையில்நமது சக்தி என்ன? என்பதையும் பிறருக்குக் காட்டிட முடியும். இதற்கு பெருமானாரின்வழிகாட்டுதலும் உள்ளது, இதனைப் பின்பற்ற சென்னை, மதுரை, திருச்சிபோன்ற பெரும் நகரில், பல பள்ளிகள் உள்ள ஊரில் வசிப்பவர்கள் இக்கருத்தினை யோசிக்க வேண்டும்.

(நன்றி : புண்ணியம்பூத்திடும் புனித ரமளான்)