ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

சங்கைமிகு இமாம் ஷாஃபிஈ (ரஹ்)


அறபுத் தமிழில்:  மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்

அழகு தமிழில்:  கிப்லா ஹள்ரத், திருச்சி.ஒரு தடவை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களிடம் ஹள்ரத் முஸ்ன் (ரஹ்) அவர்கள், இமாம் அபூஹனீபா (ரஹ்), இமாம் மாலிக் (ரஹ்) ஆகியோரின் நண்பர்கள் தங்களை விட அதிகமான அளவு நூற்கள் எழுதியுள்ளார்களே என்று கேட்டார்கள்!அதற்கு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள், இப்றாஹீமே! எனக்கு இருக்கும் மூல நோய் வியாதியின் வேதனை உமக்குத் தெரியுமா? இக்கொடிய நோயிருந்தும் நான் கிதாபுகளைக் கோவை செய்வதை விட அல்லாஹ்வின் ரசூல்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் சட்ட - திட்டங்களை என்றும் நிலைத்திருக்கும் பால பாடங்களைக் கோவை செய்வது இறையின் நன்கொடையல்லவா? என்று பணிவாகக் கூறினார்கள்!ஹள்ரத் ஹஸன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:


இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கிதாபுகளை மிகுதமானவர்கள் எழுதிப் பதிவு செய்து கொள்கிறார்கள்.  மேற்கிலும் கிழக்கிலும் ஒவ்வொரு கிராமங்களிலும் பட்டணங்களிலும் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்களின் கிதாபுகளில் ஒன்றேயாயினும் ஒவ்வொரு வீட்டிலும் கண்டிப்பாக இருக்கின்றன; இருக்கத்தான் வேண்டும்!மேலும் நபிகள் நாயகம்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள், குறை´ வம்சத்தில் வரும் ஆலிம் ஒருவர், பூமியின் தட்டங்களை அறிவால் நிரப்பி விடுவார் என்று அருளினார்கள் அல்லவா? அந்த குறை´ ஆலிம் நிச்சயமாக இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் தாம்..... எனக் கருதுகிறேன்!இமாமுல் ஹஸனைன் சொல்கிறார்கள்:


மக்காவில் பிரசித்தி பெற்ற ஃபத்வாக் குழுவிற்கு முதன் முதலாகத் தலைமையேற்றவர்கள் ஹள்ரத் அப்துல்லாஹ் இபுனு அப்பாஸ் (ரலி) அவர்களேயாவார்கள்! அன்னவர்களைத் தொடர்ந்து, அதாஉ இபுனு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள்! அன்னவர்களுக்குப் பின்னால் ஹள்ரத் இபுனு ஜுரைஹ் (ரஹ்) அவர்கள்! அன்னவர்களுக்குப் பின் ஹள்ரத் முஸ்லிம் இபுனு காலித் (ரஹ்) அவர்கள்! அன்னவர்களுக்குப் பின்னர் ஹளரத் ஸயீது இபுனு ஸாலிமில் கிதாஹ் அவர்கள்! அன்னவர்களுக்குப் பின்னால் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்! இவர்களில் விசே­ம் என்னவென்றால் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் 20 வயது நிரம்பிய நிலையிலேயே முஃப்தீ (மார்க்கத் தீர்ப்பு வழங்கக்கூடியவர்களாகத்) திகழ்ந்தார்கள் என்பதே!


(சங்கைமிகு இமாமவர்களின் சமுதாயப் பங்களிப்பு இன்னும் பவனி வரும்! இன்ஷா அல்லாஹ்!)