ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

யாரஸுலல்லாஹ் ! எங்களை மன்னியுங்கள்ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமே பாவ மன்னிப்பு தேடுதல்:நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை அல்லாஹ் நபியே!நீங்கள் மன்னியுங்கள் என்று கட்டளையிட்டுள்ளான். அவற்றில் சில ஆயத்துக்கள்:


1.  நபியே! இவர்களை (பாவம் செய்தவர்களை மன்னியுங்கள்)  -  (குர்ஆன் 5 : 13)


2. நபியே! (இறை நம்பிக்çயாளர்களின்) பாவங்களை மன்னித்து இறைவனும் அவர்களை மன்னிக்கப் பிரார்த்தியுங்கள்.  (குர்ஆன் : 3 : 159)


3. நபியே! மன்னிப்பை எடுத்துக் கொள்ளுங்கள்.  (மன்னியுங்கள்)  நன்மையை ஏவுங்கள். அறிவீனர்களைப் புறக்கணியுங்கள்.  (குர்ஆன் 7  - 199)


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மன்னிப்பைப் பற்றிய ஹதீஸ்கள்:


ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:


நான் ஒரு போர்வையை வாங்கினேன். அதில் ஓர் உருவம் இருந்தது. நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அதைப் பார்த்து விட்டு வாசலிலே நின்றுவிட்டார்கள். வீட்டில் நுழையவில்லை. நான் அவர்களின் முகத்தில் வெறுப்பை (கோபத்தை)ப் பார்த்தேன். எனவே நான் கூறினேன்,யாரஸூலல்லாஹ் அல்லாஹ்விடம் அவனது  ரஸூலிடமும் பாவ மன்னிப்புத் தேடுகிறேன் என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.  (நூல் : புகாரி)அதாஃ இப்னு யஸார் (ரலி) அறிவிக்கிறார்கள்:


ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தன்மைகளைப் பற்றித் தவ்ராத் வேதத்தில் எவ்வாறு கூறப்பட்டிருந்தது? என்று அப்துல்லாஹிப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அப்துல்லா (ரலி)  அவர்கள்; நிச்சயமாக நான் கூறுகிறேன்.அல்லாஹ் மீது ஆணையாக குர்ஆனில் கூறப்பட்டுள்ள தன்மைகளைக் கொண்டே நபியவர்கள் வருணிக்கப்  பட்டிருந்தார்கள். அதாவது :  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே! நிச்சயமாக உங்களை சாட்சியாளராகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவும், மக்களுக்கு பாதுகாவலராகவும் அனுப்பினோம்.நீங்கள் எனது தூதரும் எனது அடியாரும் ஆவீர். உங்களுக்கு (முதவக்கிலீன்) பொறுப்பாளர் என்ற பெயருமிட்டேன். நீங்கள் கடினமாகவும், கல்நெஞ்சங் கொண்டவராகவுமில்லை. வீடுகளில் சப்தமிடுபவரும் இல்லை.  தீமைகளை தீமைகளைக் கொண்டு தடுப்பவருமல்ல. பாவங்களை மன்னிக்கக் கூடியவர். இன்னும் தீமைகளையும் மன்னிக்கக் கூடியவர் என்று தவ்ராத்தில் வந்துள்ளது என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.3.  ஜூபைர் இப்னு முத்இம் (ரலி) அறிவிக்கிறார்கள்:


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனக்கு ஐந்து பெயர்கள் இருக்கிறது.


1.  முஹம்மது (அதிகம் புகழப்பட்டவர்)

2.  அஹ்மது (அதிகம் புகழ்பவர்)

3.  மாஹி (பாவங்களை அழிப்பவர்). என் மூலம் அல்லாஹ் மிகப் பெரும் பாவமான குப்ர் என்றும் இறை மறுப்பை அழிக்கிறான்.

4.  ஷாஹிர் (ஒன்று திரட்டுபவர்) மறுமையில் மக்கள் அனைவரும் என் பாதத்தில் ஒன்று திரட்டப்படுவார்கள்.

5.  ஆகிப் (ரஸூல்மார்களின் இறுதியானவர்) என்று கூறினார்கள்.  (நூல் : புகாரி - முஸ்லிம், மிஷ்காத் - 515)4. அபூஹூரைரா (ரலி) அறிவிக்கிறார்கள்:


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். நான் முஹம்மது, நான் அஹ்மது, நான் முகஃப்பீ (இறுதி நபி) நான் ஹா´ர், நான் நபியுத் தெளபா.  நான் நபியுர் ரஹ்மத் என்று கூறினார்கள்.  (நூல் : - முஸ்லிம், மிஷ்காத் - 515)5. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவைப் புலவர் ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அவர்கள் நபிகளாçப் பற்றிப் பாடும் போது... பாவங்களை மன்னித்து காரணங்களை ஏற்றுக் கொள்பவர்களே! நபியே! என்று ஹஸ்ஸான் (ரலி) பாடினார்கள்.  (நூல் : சீரத் இப்னு ஹிஷாம் 4 / 282)6. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களே! பாவ மன்னிப்பு வழங்குவதற்கு தகுதி வழங்கப்பட்ட நபி என்பதை உறுதிப்படுத்தும் விதமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே கூறியிருக்கிறார்கள். அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரசங்கம் செய்யும்போது கூறினார்கள். இங்கு அல்லாஹ்விடமும் அவனது ரஸூலிடமும் பாவ மன்னிப்பு வேண்டும்.  எந்தப் பெண்மணியாவது இருக்கிறார்களா? என்று மூன்று முறை கூறினார்கள்.  (நூல் : அபூதாவூத் 4386)7.  கஃஅப் இப்னு ஜூஹைர் (ரலி) அவர்கள் கண்மணி நாயகம் (ஸல்)  அவர்களின் முன் வந்து தான் செய்த தவற்றிற்காக மன்னிப்பு வேண்டி பாடிய கவிகள்:


நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் மன்னிப்பை ஆவலுடன் எதிர்பார்த்து நான் வந்திருக்கிறேன். (நூல் : தப்ரானி : 403, ஹாகிம் : 6479) என்று பாடி நபியவர்களிடம் மன்னிப்புக் கேட்டு இஸ்லாமானார்கள்.8. அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


ஹாதிப் இப்னு அபீபல் தஆ (ரலி) அவர்கள் இஸ்லாமிய இராணுவ ரகசியங்களை சாரா என்ற பெண் மூலம் மக்காவாசிகளுக்குத் தெரிவித்த கடிதத்தை நானும் (அலீ (ரலி)), ஜுபைர் (ரலி) அவர்களும் நபியவர்களின் கட்டளைக்கு இணங்க ஷாஹின் என்ற தோட்டத்தில் சாராவின் மூலம் (நபியவர்கள் தெரிவித்தது போல்) கடிதத்தைப் பறிமுதல் செய்து நபியவர்களிடம் கொடுத்தோம்.


அப்போது உமர் (ரலி) அவர்கள் யாரஸூலல்லாஹ் இவரை நான் வெட்டி விடுகிறேன்.  எனக்கு அனுமதி தாருங்கள் என்றதும் நபியவர்கள் நடந்ததை விசாரித்து, அவர் பத்ரு ஸஹாபி! எனவே அவருக்கு சுவனம் கடமையாகிவிட்டது என்று கூறி,நான் உங்களை மன்னித்து விட்டேன் என்று கூறினார்கள் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.  (நூல் : புகாரி 3684)9.  அம்ர் இப்னு ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து யாரஸூலல்லாஹ் எனக்கு பைஅத் செய்ய தங்கள் கரங்களை நீட்டுங்கள் என்று கூறினேன். நபியவர்கள் கையை நீட்டியதும் எனது கையைக் கொடுக்காமல் மடக்கிக் கொண்டேன். இவ்வாறு மூன்று முறை செய்தேன்.  இதைப் பார்த்த நபியவர்கள்,  அம்ரே! என்ன வி­யம் என்றார்கள். அதற்கு நான் யாரஸூலல்லாஹ் என் பாவத்தை மன்னித்துவிடுவதாக எனக்கு வாக்களியுங்கள்.  நான் பைஅத் செய்கிறேன் (என்னை மன்னித்து விடுங்கள்) எனக் கூறினார்கள்.  (நூல் : முஸ்லிம்)10.  குல்ஸூம் இப்னு ஹுஸைன் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:


தபூக் போர் முடிந்து வரும் போது வழியில் இரவு நேரத்தில் அஇக்ளர் என்றபள்ளத்தாக்கின் வழியாக நபிகளாருடன் நானும் வந்தேன்.  என் ஒட்டகம் நபிகளாரின் ஒட்டகம் மீது உரசிவிட்டது. எனக்கு தூக்கம் மிகைத்து மீண்டும் ஒருமுறை என் ஒட்டகம் நபிகளாரின் ஒட்டகம் மீது உரசி பெருமானாரின் பாதங்களில் காயம் ஏற்பட்டு விட்டது.எனவே நான் விழித்து யாரஸூலல்லாஹ் என்னை மன்னித்து விடுங்கள் என்று நான் கூறினேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை வெற்றி கொண்டபோது மக்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பை அளித்தார்கள். குறிப்பாக அபூஸுப்யான், ஹம்ஜா (ரலி) அவர்களை கொலை செய்த (1) ஹிந்தா (2) வஹ்´ போன்றோரையும் இக்ரிமாபின் அபூஜஹ்ல் கஃஅப் இப்னு ஜுஹைர் போன்றவர்களையும் மன்னித்தார்கள் என நமக்கு வரலாறு சுட்டிக் காட்டுகிறது.மன்னிப்பு பெற்று இவர்கள் பெரும் பெரும் ஸஹாபாக்களாகத் திகழ்ந்தார்கள் என்பதையும் நமக்கு வரலாறு தெரிவிக்கிறது.மேற்கூறப்பட்ட ஆயத் மற்றும் ஹதீஸ்களைப் பார்க்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பாவ மன்னிப்புத் தேட வேண்டும் என்பதை இறைவன் சுட்டிக் காட்டுகின்றான். அதே போன்று ஸஹாபாக்களின் அன்றாட வாழ்விலும் ஏதேனும் சிறிய குற்றங்கள் செய்தாலும் ரஸூல்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிடம் பாவ மன்னிப்பு கேட்கும் வழக்கமுடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.அதைத்தான் இறைவன் குர்ஆனிலும், மற்ற வேதங்களிலும் சிறப்பித்துக் கூறியிருக்கின்றான். பாவங்களை மன்னிப்பவர் என்ற பெயரே நபிகளுக்கு இருக்கிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.அதே போல எதிரி நாட்டுக்கு இரகசியத்தை தெரிவித்த ஸஹாபியையும் மன்னித்தார்கள். அதே போல் பாவத்தில் மிகக் கொடியது குப்ர். அதையே நபியவர்களின் மூலமாக அல்லாஹ் அழிக்கிறான் என்று நபியவர்களே கூறியிருக்கிறார்கள்.நபியவர்கள் இறைவனை வழங்குகிறான். நான் பங்கு வைக்கிறேன் என்று கூறியிருக்கிறார்கள். மேற்கூறப்பட்ட அனைத்து வசனங்களிலும் நபியவர்கள் மன்னித்தால் நான் மன்னிப்பேன் என்று இறைவன் கூறும்போது (4 : 64)நாம் நபியவர்களிடம் பாவ மன்னிப்புத் தேடுவதில் என்ன குற்றம் இருக்கிறது? பாவங்களை மன்னிப்பவர் என்று நபியவர்களைப் புகழ்ந்தால் என்ன குற்றம் இருக்கிறது? நபியவர்களை நீங்களே! பாவத்தை மன்னிப்பவர்கள் என்று பாடுவது ´ர்க், குப்ர் என்றால் இறைவன் குர்ஆனில் பல இடங்களில் நபியவர்களை மன்னிக்கும்படிக் கூறியிருக்க மாட்டான். இன்னும் ஸஹாபாக்களும் மன்னிப்புக் கேட்டிருக்க மாட்டார்கள்.மன்னிப்பவர்கள் என்று புகழ்ந்திருக்க மாட்டார்கள்.  நபியவர்களிடம் பாவ மன்னிப்புக் கேட்பதும், பாவங்களை மன்னிப்பவர்கள் என்று பாடுவதும் ஆகுமானதே. எனவே நாமும் நபிகளாரிடம் பாவ மன்னிப்பு தேடி பயன் பெறுவோமாக! ஆமீன்.