ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

ஷ­ரீஅத்  என்ன கூறுகிறது


மனிதன் தன் உடல் இச்சைகளையும் இயற்கை உந்துதல்களையும், அழித்தொழித்துவிட வேண்டுமென்று சில அறிவிலிகள் கூறுகின்றார்கள். அதற்கு மாறாக, அவற்றை அடக்கி வாழ வேண்டுமென்றே ­ரீஅத் கூறுகிறது என்பதை அவர்கள் உணர வேண்டும்.நான் ஒரு மனிதன் தான்.  சில பொழுது நான் சினமுறுகிறேன் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறிப் போந்தார்கள். அண்ணலார் அவர்களுக்குச் சினம் ஏற்படின், அது அவர்களின் முகத்தில் தெளிவாகப் பிரதிபலித்தது.இறைவனும் தன் திருமறையில், சினத்தை அடக்குகிறவர்களை நேசிப்பதாகக் கூறுவானேயயாழிய, சினமே இல்லாதவர்களை நேசிப்பதாகக் கூறவில்லை. பால் உணர்வையே ஒழித்துவிட வேண்டுமென்று ­ரீஅத் கூறவில்லை.ரீஅத்தின் மூலமான அண்ணலார் அவர்களே ஒன்பது பெண்களை மணந்து வாழ்ந்துள்ளார்களே? ஒருவனுக்குப் பால் உணர்வே இல்லாதிருப்பின், பால் உணர்வைப் பெறுவதற்காக மருந்து உட்கொள்ள வேண்டியது இன்றியமையாததாகும்.ஏனெனில் ­ரீஅத் கூறுவதெல்லாம், பால் உணர்வைச் சட்ட வரம்பிற்கு உட்பட்டு, கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டும் என்பதேயாகும். வேட்டைக்குச் செல்பவனுக்கு இவர்ந்து செல்லப் பழக்கப்பட்ட ஒரு புரவியும், வேட்டை மிருகத்தை விரட்டிச் சென்று பிடித்துவரப் பழக்கப்பட்ட ஒரு நாயும் தேவை.புரவி பழக்கப்பட்டிராவிட்டால், அது அவனைக் கீழே தள்ளிவிடும். நாய் பழக்கப்படாவிட்டால் அது அவன் மீது சீறிப் பாய்ந்து குதறித் தள்ளிவிடும். அது போன்றே, பால் உணர்வும், சினமும், மறுமைப் பயன்களைப் பெறுவதற்குத் தேவையாக உள்ளன.அவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துப் பழக்கப்படாவிடின், அவை ஒருவனை மிகைத்து, அவனை அழிவுப் படுகுழியில் தள்ளிவிடும். அவற்றைக் கட்டுப்படுத்தச் சிறந்த சாதனம், தொழுகையும், நோன்புமாகும் என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

(யஹ்யா மனேரி (ரஹ்)