ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai     »    2014   »   Jan2014   »    வாழ்வதற்கே   வழிமுறை


முஸ்லிம்   முரசு   டிசம்பர்   இதழ்  
தலையங்கம்   .

வரைமுறைக்குள்   வாழ்வதற்கே   வழிமுறை !

 

2013 -   நவம்பர்   - 29  “FRONT LINE"  இதழில்   முஸ்லிம்   இயக்கம்   ஒன்றைக் குறித்து எழுதப்பட்டிருந்த   கட்டுரையில்   இந்திய   முஸ்லிம்கள்   நீண்ட பாரம்பர்யத்திலிருந்து  வந்தவர்கள் .  அப்பாரம்பரியத்திற்குரியது   சூஃபி   இஸ்லாம்”.  என்னும்   வரிகள்   பதியப் பெற்றிருந்தன .பன்மைச்  
சமூக   இணக்கத்தோடு   தன்னை   நிறுவி   பயணித்தது   சூஃபிகள்  வழிப்பரவலான இஸ்லாம்.  இந்து   மதக்குருக்களிடையே   இஸ்லாம்   குறித்த   புரிதலை  ஏற்படுத்த சூஃபிகளால்  முடிந்தது.  தங்களது   அறிவாற்றல்,   அன்பு   ,   நட்பு சகிப்புணர்வு ,அமைதி, கருத்தில் பூரணத்துவம் மூலமாக இஸ்லாத்தை இந்திய மண்ணில்  எடுத்துரைத்தனர். தரீக்கா வழிமுறையில் இயங்கும் சிலரின் அணுகுமுறையில்  ஒவ்வாமை ஏற்பட்டு ஒட்டுமொத்த சூஃயிசத்தையும் விமர்சனப்படுத்துதல்,  விலகியோடுதல் அறியாமையின் வெளிப்பாடாகவே   அமையும்.  தமிழகத்தின்   குக்கிராமங்களில்   பல   நூறு ஆண்டுகளுக்கு முன்   வாழ்ந்து   மரணித்த   பல   சூஃபிகளாலேயே   அப்பகுதி   மக்கள்  இஸ்லாத்தை   ஏற்றுள்ளனர்.  தமிழிலக்கியப்பதிவுகள்   கூறுகின்றன.   சூஃபிகள்   கேரக்டர்,  வாழ்வியல்செயல்முறைகள் இஸ்லாத்தை  தாக்கம் புரியவைத்தனஆயிரம்  ஆண்டுகளுக்கு   முன்னமே   மதீனா       யர்புத்   , இஸ்தான்புல்,   ஆப்கான்   யஹராத்  நகர் உஸ்பெஸ்கிஸ்தான்   நாடுகளிலிருந்து   சூஃபிகள் வந்துள்ளனர் தமிழகத்தில்  வாழ்ந்து மரணித்துள்ளனர்.   அவர்களுடன்   நட்பு   பொருந்திக் கொண்ட   மன்னர்கள்   அளித்துள்ள  மான்யம்   சூஃபியிச   தாக்கத்தின்   மேன்மையை வெளிப்படுத்துகின்றன .  இஸ்லாத்தை  ஏற்றல்   ஒரு   போக்கு.   வெளியில்   நின்று   அதனை அங்கீகரித்தல்   மற்றொரு   போக்காக  இந்திய   அளவில்   இருக்கிறது .    மஹ்ரிஃப்   மாலைக்கும் , இரவுக்கும்   இடையிலான  இறைவணக்க   நேரத்தில்   மஸ்ஜித்களில்   மாற்று   மத   ஆண்களும்   , பெண்களும்       தமது பிள்ளைகளுடன்   இஸ்லாமிய   ஆன்மிகத்தை   மருந்தாகக்   கருதி     காத்திருப்பதையும்,  தொழுகையாளி   ஓதும்   இறைமறையை   காதில்   வாங்கிச்   செல்தலும் அதன்மீது  பூரணநம்பிக்கை   கொள்தலும்   படித்தோரிடமும்   இருக்கிறது.  பரப்புதலும் நடக்கிறது.


சூஃபியிச   அணுகுமுறையிலான   தொடர்ச்சியாகவே   இதைக்   காணமுடிகிறது.   சூஃபிகள் வாரிசுகள்   எங்கே   ?   அவர்கள்   பணிசெய்த   பகுதிகள்   ஏன்   பூரணமாக   மாறவில்லை?  என்ற வினாக்களெல்லாம்   விதண்டாவாதமே   !   அல்லாஹ்   குர்ஆன்   யூனூஸ்   அத்   - 42   ஆம் வசனத்தில்   கூறியிருக்கிறான் .


"அவர்கள்   (   எதையும்   )   விளங்கிக்   கொள்ளாதவர்களாக   இருந்தாலும்   நீர்  செவியேற்கச் செய்ய   முடியுமா   ?”   அடுத்த   வசனத்தில், “அவர்கள்   பார்க்காதவர்களாக   இருந்த  போதிலும் நீர்   நேர்வழியில்   செலுத்த       முடியுமா   ?” (43)       இந்த       அளவுகோலின்படி அல்லாஹ்   தான் நாடியவர்களை   வேலை வாங்குகிறான். அவர்கள்   மூலம்   தான்  விரும்பும்   மாற்றங்களைப் புரிகிறான். அப்பணி   நிறைவு   ஏற்படுத்தும்   மாற்றம்  நிலையற்றது. இறை ஏவுதல் மூலம் மனிதம் புரியும்  மாற்றமே  உவப்பாகவிருந்திருக்கிறது   .      

தமிழில்  
நூறு   என்பது முழுமையைக்குறிக்கும்.  அரபியில்     நூர்     என்பது   இறையைக்  குறிக்கும். தமிழ்   சூஃபி   , முஸ்லிம்   சூஃபி   இரு   சாராரும்   நூர்குறித்தே  பேசியிருக்கின்றனர்.  அகமாற்றச்     சாதித்தலுக்கு   சீரிய   சிந்தனை   அவசியம்.  முகத்தாழ்ச்சி   இழப்பையே   தரும்.  வேரின்   அடி மறப்பவர்   தாயின்   மடி   மறந்தவராக  வேதனை   சுமப்பார். மேன்மைகள்   செய்தவர்   பழுத்தவர்.  உடன்   ஓடிவருபவர்   இளையவர் இயற்கை   செய்த   விதி   !.   ஏற்பவர்   சிறந்த   பதி   .       எந்த வழிமுறையும்   வழிமாறிச்   செல்வதற்கல்ல   .   வரைமுறைக்குள்   வாழ்வதற்கே   !    

                                   
  

(   நன்றி   :   முஸ்லிம்   முரசு   )