ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai  »     2014     »     Jan2014      »    அல்குர்ஆனின்   அறிவியல்   அத்தாட்சிகள்  


அல்குர்ஆனின் அறிவியல் அத்தாட்சிகள்

எதிர்காலபோர் ஆயுதங்கள்


ரஹ்மத்
ராஜ குமாரன்


தண்ணீருக்குள் மீன் கண்ணுக்குப் புலப்படாமல் நீந்திக் கொண்டு இருப்பது போல,ஒவ்வொரு மனிதனின் மன ஆழத்திலும் வன்முறை சிறியதும் பெரியதுமாக நீந்திக் கொண்டிருக்கிறது .உண்மையில் உலகிலுள்ள எல்லாப் பொருட்களுமே ஆயுதங்கள் தான்.பிரயோகிக்கும் சந்தர்ப்பமும் முறையும் தான் மாறுபடுகின்றன .


சில நாட்களுக்கு முன்பாக குழந்தைகளுக்கான அனிமேஷன் திரைப்படம் ஒன்று காட்டப்பட்டது .அதில் ஒரு சிறுவன் ஓர் ஆப்பிளை வரைகிறான் .எங்கிருந்தோ ஒரு கத்தி உருவாகி ,அந்த ஆப்பிளை இரண்டு துண்டாக்கி விடுகிறது .அவன் ஒரு தண்ணீர்க் குவளையை வரைகிறான் .நிமி  த்தில் ஒரு குண்டாந்தடி தோன்றி குவளையை உடைத்து விடுகிறது .அச்சிறுவன் விதவிதமான பூக்களை வரைகிறான் .மிலிட்டரி ஷீ ஒன்று அதை நசுக்கி அழிக்கிறது .முடிவாக அந்தச் சிறுவன் ஒரு பூமி உருண்டையை வரைகிறான் .சித்திரத்தை வரைந்து முடித்தவுடன் எங்கிருந்தோ ஓர் ஏவுகணை பறந்து வந்து ,சித்திரத்தை மட்டுமல்ல வரைந்து கொண்டிருந்த சிறுவன் ;அந்த அறை உட்பட யாவற்றையும் அழித்து விடுகிறது !


மூன்று நிமிடப் படம்தான் .ஆனால் அது எழுப்பும் அதிர்வுகள் ,வன்முறையை வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ள மனிதனை வெட்கித் தலைகுனியச் செய்கிறது .குகையில் வாழ்ந்த நாட்களில் மனிதன் கற்றுக் கொண்ட வேட்டையும் ,உதிரப் பெருக்கும் கால மாற்றத்தில் மறந்து போனது போலக் காணப்பட்டாலும் இன்றும் அனைவரின் உள்ளத்திலும் அது ஒளிந்து கொண்டுதான் தானிக்கிறது !


கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திக்கும் போது அக்கால மக்கள் கற்களை ஆயுதங்களாகப் பயன்படுத்தியதால் ,அவர்கள் வாழ்ந்த காலத்தை கற்காலம் என்கிறோம்ஆமாம் ,மனிதன் பிரயோகித்த முதல் ஆயுதம் கல் !அப்புறமாக அக்கால மக்கள் ;வில் அம்பு , வாள் ,ஈட்டி ,வேல் என்று பலவித கூர் ஆயுதங்களை உருவாக்கத் தொடங்கினர்இத்தகைய கொடிய ஆயுதங்களிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள அதே மக்கள் கவச உடைகளையும் உருவாக்க ஆரம்பித்தனர் .கவச உடைகளைத் தயாரிப்பதற்கு இரும்பை மெழுகு போல் ஆக்கும் தன்மையை இறைவன் நபி தாவூத் ( அலை )அவர்களுக்குக் கற்றுக் கொடுத்ததாக குர்ஆனில் ....தாவூதிற்கு இரும்பை மெழுகுபோல் மெதுவாக்கித் தந்தோம் .மேலும் நிறைவான போர்க் கவசங்களைச் செய்வீராக !அந்த இரும்புக் கவசங்களிலுள்ள வளையங்களின் அளவை ஒழுங்குப் படுத்துவீராக !என்று கட்டளை யிட்டதுடன் அவரது குடும்பத்தினரே !அவரோடு சேர்ந்து நலவானதை நீங்கள் செய்வீர்களாக !நிச்சயமாக நான் நீங்கள் செய்பவைகளை உற்று நோக்கியவனாக இருக்கிறேன்

-குர்ஆன் (34:10,11)


நபி தாவூது ( அலை )அவர்கள் அரசாங்கக் கருவூலத்திற்கு அதிபதியாக இருந்த போதிலும் அதிலிருந்து சிறிதளவு கூட தங்கள் சொந்தச் செலவினங்களுக்கு எடுக்கவில்லை .எனவே நபி தாவூத் ( அலை )அவர்கள் அல்லாஹ்விடம் தமக்கு ஏதாவது ஒரு தொழிலைக் கற்றுத் தருமாறு பிரார்த்தித்தார்கள் .போர்க் கவசங்கள் செய்யும் தொழிலை அவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுத்தான்அவர்கள் விரும்பும் பொருளைச் செய்வதற்கு ஏற்றாற்போல் இரும்பு அவர்கள் கைபட்டால் ,மெழுகு போல் உருகிவிடும் .போர்க் கவசங்கள் செய்து ,அவற்றைப் பொருத்துவதற்கு வளையங்களை அதே இரும்பில் செய்து ,ஒவ்வொன்றையும் மிகச் சரியாக இணைத்தார்கள் .இணைத்து முடிந்ததும் கெட்டியாகி உறுதியாகிவிடும் .இதிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு ,தங்கள் வாழ்க்கைச் செலவைப் பூர்த்தியாக்கிக் கொண்டார்கள் .மூன்றிலொரு பகுதியை தர்மமாகவும் செலவு செய்தார்கள் .


அல்லாஹ் நபிதாவூத் ( அலை )அவர்களுக்கு இரும்பை மெழுகு போல் ஆக்கும் தன்மையைக் கொடுத்தாலும் அவர்கள் போர் ஆயுதங்களான வாள் ஈட்டி ,வில் ,அம்பு ...என்று தயாரிக்காமல் போரில் தற்காப்புக் கருவிகளான கவசச் சட்டைகள் தான் தயாரித்தார்கள் .  இதைப் போல் குர்ஆனில் யானை என்கிற அத்தியாயத்தில் வரும் யானைப் படையிடமிருந்து புனித கஃபாவைப் பாதுகாக்கவே சிறு பறவைகளைக் கொண்டு யுத்தம் செய்யப்பட்டதே தவிர இது யுத்தம் அல்ல ;தற்காப்புக்காக செய்யப்பட்ட யுத்தம் .


குர்ஆன் மேற்கண்ட இரு சம்பவங்கள் தவிர்த்து மற்ற எல்லா யுத்தங்களும் தற்காப்பு யுத்தமாகவே நமக்கு சித்தரித்துக் காட்டுவது நம் சிந்தனைக்குரிய வி  யம் .அடுத்து ,நாசா விண்வெளி நிறுவனத்தின் கீழ் வெர்ஜீனியாவின் ஹாம்டன் நகரிலுள்ள ( அமெரிக்கா )லங்லி ஆராய்ச்சி மையத்திற்கு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பயிற்சிக்குப் போய் இருந்தார் .அங்கு ராக்கெட்டுகள் விடுவது குறித்து நுணுக்கங்களைக் கற்றார் .அவர் கண்ணில் பளிச்சென ஒரு போர்க்கள ஓவியம் தென்பட்டது .  அதில் சித்தரிக்கப் பெற்றிருந்த ஏவுகணை வீரர்களைப் பார்த்தால் வெள்ளைக் காரர்களாகத் தோன்றவில்லை .தெற்காசிய மக்களுக்கே உரித்தான கருநிறம் .அவர்கள் அனைவரும் திப்பு சுல்தான் படை வீரர்கள் .


பிரிட்டிஷ்காரர்களுக்கு எதிராக மைசூர் மன்னர் திப்பு சுல்தான் ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் நடத்திய போர்க் காவியம் அங்கு வண்ணமாக ஓவியம் தீட்டப்பட்டிருந்தது .இந்திய வீரன் அமெரிக்க ராக்கெட் ஆராய்ச்சிக் கூடத்தில் கெளரவிக்கப்பட்டிருந்தான் இன்னும் கொஞ்சம் விபரமாக 16 ஆம் நூற்றாண்டில் இத்தாலியர்களும் பிரெஞ்ச் காரர்களும் 5000 அடி பறக்கக்கூடிய ராக்கெட்டைக் கண்டுபிடித்தனர் .இவர்களை திகைக்க வைக்கும் வகையில் திப்பு சுல்தான் ,1782 ல் ஸ்ரீரங்கப் பட்டிணத்தில் நடந்த போரில் காரன் வாலீஸ் பிரபுவுக்கு எதிராக திப்பு சுல்தான் விட்ட ராக்கெட் 10,000அடி பறக்கக் கூடியதாக இருந்தது .திப்புப் படையில் ராக்கெட் படை ஒன்று இருந்தது .


1799ஆம் ஆண்டு துருக்கண் ஹள்ளிப் போரில் வில்லியம் காங்கிரீவ்ஸ் என்ற ஆங்கிலத் தளபதி திப்பு சுல்தானைக் கொன்று அவரது படையிலிருந்த 700ராக்கெட்டுகளைக் கைப்பற்றிட ,‘ ஜிர்க்குகள் என்று அழைக்கப்பட்ட ராக்கெட் வீரர்களும் கஷீன்கள் எனப்பட்ட படை அதிகாரிகளும் அடிமையாக்கப்பட அவர்களிடமிருந்து ஏவுகணைத் தொழில் நுட்பங்களை ஆங்கிலேயர் துன்புறுத்தி ,கொடுமைப்படுத்தி பின் கற்றறிந்து தயாரித்தது ,பின் ஆங்கிலேயர்களிடமிருந்து ஜெர்மானியர்கள் வி -2என்ற ஆற்றல் மிக்க போர்க்கணை வடிவமைத்தனர் அந்தத் தொழில்நுட்பமே பிற்காலத்தில் அமெரிக்காவுக்கும் ,ரஷ்யாவுக்கும் கை மாறியதும் எல்லாம் சரித்திர ஏடுகளிலிருந்து அழிக்க முடியாத அறிவியல் சான்று ஆதாரங்களாகும் .


திப்புவின் காலத்தில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டின் ஒரு பகுதி இன்னமும் லண்டனுக்கு அருகே உள்ள உருகுண்டா என்ற கண்காட்சியில் உள்ளது .அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவும் ராணுவத்தை முன் நிறுத்தியே கண்டுபிடிக்கப்படுகின்றன .இன்று உலகை தன் ஆளுகையில் வைத்திருக்கும் இண்டர்நெட்டும் ,மொபைலும் முதலில் ராணுவத்துக்காக கண்டுபிடிக்கப் பட்டவைதான் .அப்படி இருக்கும் போது எதிர்காலப் போரும் ,அதன் ஆயுதங்களும் எப்படி இருக்கும் என்று விஞ்ஞானிகள் சில ஆயுதப் பட்டியல்களை வெளியீடு செய்திருக்கிறார்கள் .அதில் முதன்மையானது அட்டனாமஸ் வெப்பன்ஸ் என்பது .இது ஒரு ரோபோ .இதன் காலில் பல் சக்கரம் பொருத்தப்பட்டிருக்கும் .கையில் மெ ´ ன்கன்கள் இருக்கும் .சென்சார்கள் மூலம் எதிரிகளைச் சுட்டுக் கொல்லும் .ரோபோவுக்கு எப்படி எதிரியைத் தெரியும் என்கிறீர்களா ...?யாரிடம் ரோபோவின் சிக்னல்களுக்கு பதில் சொல்லும் டிரான்ஸ்பாண்டர் இல்லையோ அவர்கள் எல்லோருமே எதிரிகள் தான் .அது சாதாரண பசு மாடாக இருந்தாலும் சுட்டுத் தள்ளும் .சமாதானத்துக்காக வெள்ளைக் கொடியை அசைத்தாலும் அதற்கு ஒன்றும் தெரியாது .தனது சிக்னலுக்கு பதில் இல்லை என்றால் கொன்று போட்டு விடும் .


இதற்கு அடுத்து ஹை எனர்ஜி லேசர்ஸ் என்ற லேசர் ஆயுதம் .பெரிய சிகப்பு விளக்குதான் இதன் ஆயுதம் .இதில் இருந்து கிளம்பும் அடர்த்தியான லேசர் கதிர்கள் பல நூறு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் இலக்கை பஸ்பமாக்கும் .விமானம் , ஏவுகணைகளை வானிலேயே எரிக்கவும் ,விமானத்தில் இருந்து தரைப் பகுதிகளைத் தாக்கி அழிக்கவும் இதனால் முடியும் .இப்போது லேசர் விமானத்தை அமெரிக்கா தயாரித்துக் கொண்டு இருக்கிறது .நேர் கோட்டில் செல்வது மட்டும் தான் லேசரின் பலவீனம் .இரண்டு பல்டி அடித்தபடியே இதில் இருந்து தப்பித்து விடலாம் .


மூன்றாவது ஸ்கை ஸ்டே  ன் ”.ஒரு நாட்டின் எல்லையில் படைகளைக் குவித்தால் தானே பிரச்சனை வரும் .வானத்தில் குவித்து விட்டால் ...?விண்வெளியில் மிதக்கும் ஆயுதக் கிடங்குகளை அழிப்பதுதான் வல்லரசுகளின் அடுத்த புராஜக்ட் .எதிரி நாட்டின் மேலே பறந்தபடி பயமுறுத்தலாம் .எதிரி நாட்டின் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல்களை எளிதாக அழித்து விடலாம் .


நான்காவது ,“ ஹைபர் சானிக் கிராப்ட் இது ஒரு ஏவுகணை வகையறா .ஒலியின் வேகத்தில் பயணித்தால் அது சூப்பர் சானிக் இப்போது உள்ள ஏவுகணைகள் எல்லாமே ஒலியின் வேகத்தில் செல்பவை தான் .ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணித்தால் ,அது ஹைபர் சானிக் எனப்படும் .உலகின் எந்த இடத்தையும் இரண்டே மணிநேரத்தில் இந்த ஏவுகணை மூலம் தகர்க்கலாம் .இந்த அதிவேக ஏவுகணைகளை தொடர்ந்து இப்படி குத்தும் ஒளிக்கற்றை முரட்டு இரும்பையே உருக்கிப் போட்டுவிடும் .சாதாரண மனிதன் எம்மாத்திரம் ?இதில் இருந்து தப்ப வேண்டுமா ...?“ பீம் டார்கெட் செய்ய 5வினாடிகள் எடுத்துக் கொள்ளும் .அதனால் ஐந்து வினாடிகளுக்கு மேல் ஒரிடத்தில் நிற்காமல் ஓடிக் கொண்டு இருக்க வேண்டும் .


மனித இனத்துக்கு எதிரி வெளியில் இல்லை .அது மனிதனே தான் !  ஆழத்திலும் வன்முறை சிறியதும் பெரியதுமாக நீந்திக் கொண்டிருக்கிறது .உண்மையில் உலகிலுள்ள எல்லாப் பொருட்களுமே ஆயுதங்கள் தான் .பிரயோகிக்கும் சந்தர்ப்பமும் முறையும் தான் மாறுபடுகின்றன .


குகையில் வாழ்ந்த நாட்களில் மனிதன் கற்றக் கொண்ட வேட்டையும் உதிரப் பெருக்கும் கால மாற்றத்தில் மறந்து போனது போலக் காணப்பட்டாலும் இன்றும் அனைவரின் உள்ளத்திலும் அது ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது .