ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai »      2014     »     Jan2014     »    ஞானத்துளிகள்


ஞானத்துளிகள்

தொகுத்தவர் :-  திருமதி G.R.J .திவ்யா பிரபு ணூ . I.F.S.,சென்னை


இறைவனுக்கு எட்ட இருந்து அவரைக் காண்பவர்களும் காண முயலுபவர்களும் அவருடைய அருட்கொடைகளை பெரிதும் காண்கிறார்கள் .இறைவனுக்கு அருகில் வரவர அருள்களெல்லாம் மறைந்து போகின்றன .இறுதியில் வெறும் ஜோதி சொரூபமாக இறைவன் காணப்படுகிறான் .


இறைவனே உலகில் யாவுமாக விளையாடுகிறார் .செளபாக்கியமும் அவர் சொரூபம் ;தெளர்பாக்கியமும் அவர் சொரூபம் .செளபாக்கியத்தைப் போற்றுவது போன்று பக்தன் ஒருவன் தெளர் பாக்கியத்தையும் போற்ற வேண்டும் .


ஏதேனும் ஒரு கலையில் ஒருவன் நிபுணன் ஆவானாகில் அக்கலையானது அவனிடத்துத் திகழும் தெய்வ சம்பத்தாம் .ஒருவன் கட்டழகே வடிவெடுத்த வனாயிருப்பானாகில் அக்கட்டழகும் தெய்வ சம்பத்தாம் மழைக் காலத்தில் நிலம் முழுதும் நீரில் ஊறிக் கிடப்பது போன்று பிரபஞ்சம் முழுதும் இறைவனுடைய பேரறிவில் ஊறிக் கிடக்கிறது .நலம் ,கேடு ,பாப புண்ணியம் ஆகிய அனைத்தும் இறைவனுடைய மகிமைகள் என சீடன் காண்கின்றான் .கேடும் அவன் மகிமை என்பது மற்றவர்களுக்கு விளங்காது .


உள்ளது ஒரு பொருள் .அது சச்சிதானந்தம் .அதுவே ஏகம் நண்பனைக் காணுந் தோறும் எனக்கு ஆனந்தப் பரவசம் வருகிறது .அவனுடைய உற்றார் உறவினர்களைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது .அதே விதத்தில் பக்தன் ஒருவனுக்கு இறைவனுடைய எண்ணத்தில் ஆனந்தப் பரவசம் வருகிறது .இறைவனுடைய மகிமைகளைப் பற்றியும் அருள்களைப் பற்றியும் பக்தனுக்குக் கவலையில்லை .


பக்தர்கள்இறைவனுடைய மகிமைகளைப்பற்றி பரஸ்பரம் பேசிப் பேசிப் பேரானந்தம் அடைகின்றனர். சூரியன் பூமியைவிட பல மடங்கு பெரியது .ஆனால் வெகுதூரத்திலிருப்பதால் அது சிறியதாகத் தென்படுகிறது .இறைவன் எண்ணிறைந்த மகிமைகளை யுடையவர் .ஆனால் நமக்கு எட்டாதவராக அவர் இருப்பதால் அவருடைய மகிமைகளையயல்லாம் அறிந்து கொள்ள இயலாதவர்களாக நாம் இருக்கிறோம் .


தலைவராக இருப்பவரும் தெய்வம் ;தொண்டனாக இருப்பவரும் தெய்வம் .முழு ஞானம் அடையப் பெற்றவனே இதை அறிந்து கொள்கிறான் .உலகில் நமக்கு வேற்றான் யாருமில்லை. இறைவன் பிரபஞ்சத்தி லுள்ள இத்தனை வடிவங்களை எடுத்து இலங்குகிறார் .

நமக்குக் காட்சிக்கு எட்டுகிற அனைத்தும் ,நமது புத்தியால் உணரப்படும் அனைத்தும் சிருஷ்டி ,ஸ்திதி ,லயம் ஆகிய முத்தொழில்கள் அடங்கியுள்ள அனைத்தும் ஆதி சக்தியின் மகிமைகளாம் .இறைவன் பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் ஆகியிருக்கிறார் என்பது பக்தர்களுடைய கொள்கை .இறைவன் தான் இத்தனையும் ஆகியிருக்கிறார் என்றாலும் வடிவங்கள் அனைத்திலும் அவருடைய சக்தி ஒரே விதமாக ஒளிர்வதில்லை .சில வடிவங்களில் அவருடைய சக்தி அதிகமாகவும் வேறு சிலவற்றுள் அவருடைய சக்தி குறைந்தும் தென்படுகிறது .


துணிக்குச் சாயம் தோய்ப்பவன் ஒரே ஒரு தொட்டி வைத்திருந்தான்அதில் அவன் வெவ்வேறு மனிதர்களுடைய துணிகளைத் தோய்த்து அவரவர் விரும்பிய பச்சைசிவப்பு,மஞ்சள் ,ஊதா முதலிய சாயங்கள் ஏற்றிய துணிகளை எடுத்துக் கொடுத்து வந்தான்.இதையயல்லாம் கவனித்துப் பார்த்து வந்த ஒருவன் ஒரு தொட்டியில் இத்தனை நிறங்கள் வருவதைக் குறித்து வியப்படைந்தான் .தனது துணியை அவன் சாயக் காரனிடம் கொடுத்து உனக்கு இஷ்டமான சாயத்தை இதில் ஏற்று என்றான் .அவன் அதைத் தொட்டியில் போட்டுப் பழையபடி வெள்ளை வேஷ்டியாகவே திருப்பிக் கொடுத்தான் .சாயக்காரனும் அவன் நிற்கும் தொட்டியும் நிர்க்குணப் பிரம்மம் .பல நிறங்களையுடைய சகுணப் பிரம்மம் அதிலிருந்து தோன்றுகிறது .


இயற்கையின் நியதியை மீறி ஒன்றும் செய்ய முடியாது என்றார் ஒரு பக்தர்.இறைவனுடைய திருவுளமே இயற்கையின் நியதி எனப் பெயர் பெறுகிறது.வேண்டுமானால் இயற்கையின் நியதியையே மாற்றக் கூடியவர் இறைவன் .உதாரணமாக செம்பரத்தைச் செடியில் சிவப்புப் பூ உண்டாகிறது .இறைவன் விரும்பினால் சிவப்புப் பூ ,வெள்ளைப் பூ ஆகிய இரண்டும் பக்கம் பக்கம் ஒரே கிளையிலிருந்து வரக் கூடும் .அப்படி அவை இரண்டும் சேர்ந்து வந்திருந்ததை சில நாளைக்குப் பிறகு ஒரு செடியினின்று ஒரு கிளையை ஒடித்துக்காணலாம் .


இறைவனுடைய ஞானப் பிரபையினால் அகிலாண்டத்துக்கும் பிரபை அல்லது அறிவு வாய்த்திருக்கிறது .

ஜீவன் ஒருவனுக்குத் துக்கம் எப்பொழுது முடிவுறுகிறது ?  செயலனைத்துக்கும் இறைவனே கர்த்தா ;ஜீவன் கர்த்தா அல்ல ;இதை என்றைக்கு ஜீவன் அறிந்து கொள்கிறானோ அன்றைக்கு அவனுடைய துக்கம் முடிவுறுகிறது .


மனதினிடத்து பாகிய விருத்தி இருக்கிற பொழுது ஆதிக்கத்தை அங்கீகரித்துக் கொள்வது உசிதம் .  இறைவனுடைய பேரானந்தத்தில் மனதே ,நீ ஆழ்ந்து மூழ்கியிரு .அவனுடைய படைப்பின் பெருமையை நீ பொருள்படுத்தாதே .


இறைவனே கற்பக விருட்சம் .அவ்விருட்சத்துக்கு அடியில் சென்றால் தர்மம் ,அர்த்தம் ,காமம் ,மோட்சம் என்னும் நான்கு புருஷார்த்தங் களையும் பெறலாம் .இறையருளை அடையப் பெற்ற ஒருவன் இறைவனே கர்மங்கள் அனைத்துக்கும் கர்த்தா என்பதையும் ,தன் அவர் கையிலுள்ள வெறும் கருவி என்பதையும் தெளிவுற உணர்கிறான் .