ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai »   2014  »  Jan2014   »   உமர் (ரலி) புராணம்

காவியம்

உமர் (ரலி) புராணம்
ஆசிரியர் ஜமாலிய்யா ஸய்யிது கலீல் அவ்ன் மெளலானா அல்ஹாஷிமிய் நாயகம் அவர்கள்


முதலாவது உதய காண்டம்

 

மேனி மறந்து வானிலை யோர்ந்து

நானிலை யாகி   நாயனைக் கலந்து

மேனிலை யடைதன் மேன்மை யாமே

தூநிலை பெறவே துணையருள் வாயே .


கொண்டுகூட்டு :

மேனி மறந்து வான் நிலை ஓர்ந்து நான் ( ல் ) லை ஆகி நாயனைக் கலந்து மேல் நிலை அடைதல்   மேன்மை ஆம் + .   தூ நிலை   பெறவே துணை அருள்வாய் + .


பொருள் :

யான் உடலையுடையவன் எனும் உடலின் கனநிலையை மறந்து என் உடல் வெளியுரு அடைந்துள்ளது என்பதனை நினைத்து யான் இல்லை எனும் நிலைக்கு வந்து கடவுளுடன் இரண்டறக் கலந்து மிகவுயர்ந்த மேனிலையை அடைதல் மேன்மையாகும் .   இத்தகைத்த தூய்மையான நிலையை நாம் பெற்றுக் கொள்ள ( அடைய ) துணை யருள்வாயாக .


குறிப்பு :

மேனி : உடல் .   வான் + நிலை : வெட்ட வெளி .    ஓர்ந்து : ஆரய்ந்து , நினைத்து .   நான் + இல்லையாகி = நானிலை .   நாயன் : கடவுள் . மேனிலை : மேல் + நிலை .   தூ : தூய :(  தூய்மை தூ நிலை : இறையோடு இரண்டறக் கலந்த நிலை .)