ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

Pezhai     »     2014     »     Jan 2014     »   ஹாபாக்களின் ஃபத்வா - தீர்ப்பு ​ 

தலையங்கம்

ஹாபாக்களின் ஃபத்வா - தீர்ப்பு  


அல்லாஹ்வின் அன்பையும், அடியார்களின் அன்பையும், அகில உலகமக்களின் அன்பையும் சுமந்த ஆருயிர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த மாதமான ரபீவுல் அவ்வல் திங்களில் மீலாது விழாக்கள் உலகெங்கும் கொண்டாடப்படுகின்றன. அவ்விழாக்களில் பெருமானாரைப்பற்றி முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத அறிஞர்களும் புகழ்ந்து பாராட்டி பூரித்து மகிழ்கின்றார்கள்.

இந்த விழாக்கள் இஸ்லாத்துக்குப் புறம்பானவை, முன்னோர்களான ஸஹாபாக்கள் இமாம்களெல்லாம் கொண்டாடாதவை என “அறியாமை அறிஞர்கள்” குறை கூறிக் குதிக்கின்றனர். மீலாது விழாக்கள் நடைபெறும் அரங்குகளைப் புறக்கணிக்கின்றனர். மவ்லிது எனும் நபி புகழ்ப்பாடும் மஜ்லிஸ்களை வெறுப்போடு விமர்சிக்கின்றனர்.

உண்மை நிலையை சிந்தித்துப் பார்த்தால், இந்த மீலாதும் மவ்லிதும் ஸஹாபாக்கள் காலத்தில், நாம் அமைக்கும் வடிவத்தில் இல்லாமல் வேறு வடிவத்தில் அவர்கள் வாழ்வில் கலந்து கிடந்தது என்பது புரியும். ஸஹாபாக்கள் பெருமானாரைப் பற்றி அறிவித்த ஹதீஸ் எனும் பொன்மொழிகளெல்லாம் மெளலிது எனும் புகழ்ப்பாக்களாகவே-மீலாதுப் பேச்சுக்களாகவே இருந்தன என்பது புரியும்!

இன்னும் சொல்லப்போனால்....மவ்லிதில் புகழப்படும் புகழ்ப்பாக்களெல்லாம் ஸஹாபாக்கள் உள்ளத்தில் ஊறிக்கிடந்த உண்மைகள்தாம். அவர்களை எழுதச் சொன்னால் இவ்வாறுதான் எழுதியிருப்பார்கள். அவர்கள் எழுத நினைத்ததை - நம் முன்னோர்களான நல்லோர்கள் எழுதி முடித்திருக்கிறார்கள். ஸஹாபாக்கள் காலத்தில் இதுபோன்ற மஜ்லிஸ்கள் அமைத்திருந்தால் அந்த மஜ்லிஸ்களில் வந்து அமர்ந்து உளம் உருக கண்ணீர் கசிய பெருமானாரின் புகழைப் பாடி இருப்பார்கள்.  மீலாது மேடைகள் அமைத்திருந்தால் அவர்களே பேச்சாளர்களாக வந்து விடிய விடிய பெருமானார் புகழைப் பேசி மகிழ்ந்திருப்பார்கள்.

இன்னும் சொல்லப்போனால்.... இது போன்ற மஜ்லிஸ்களைப் புறக்கணிப்பவர்களை முஃமின்- முஸ்லிம் என்ற பட்டியலிலிருந்தே புறந்தள்ளி இருப்பார்கள். ஸஹாபாக்களிடம் இவர்களுக்குரிய பத்வா - தீர்ப்பைக் கேட்டால் எம்பெருமானாரை வெறுக்கும் இந்தக் கூட்டம் எம்மைச் சேர்ந்ததல்ல என தீர்ப்பளித்திருப்பார்கள்!மருள் நீக்கிய மாநபி


அறபு நாடு இஸ்லாமிய நாடு தானா? அவர்களின் நடை உடை, பாவனைகளெல்லாம் எத்தன்மையன? என்பதைப் போய் வந்தவர்கள் சிந்தித்தால் அந்நாட்டின் உண்மை நிலையை நன்கு அறிந்து கொள்ள வியலும். அங்கே மவ்லிது கூடாது என்கிறார்களாம். சிர்க்கு என்கிறார்களாம். ஹராம் என்கிறார்களாம். ஆனால் அப்படியான ஹராத்தைச் செய்யாமல் அதைவிடப் பெரும் ஹராத்தை அங்குச் செய்கிறார்களாம். புகைத்துக் கொண்டும் கும்மாளம் போட்டுக் கொண்டும் தலையணைகளில், குபேரர்களாய்ச் சாய்ந்து கொண்டு இழிவான வெட்கக்கேடான வீடியோப்படங்களை போட்டுக் கொண்டு பணிப்பெண்கள் ஊழியம் செய்யப் பார்த்து மகிழ்வது தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழியா? இதைச் செய்வது தான் பர்ளா? இவ்வாறு செய்வது ஆகுமாக்கப்பட்டுள்ளதா? இது ஹராமில்லையா?


மருள் நீக்கிய மாநபி நூலில் சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள் -