ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

திருமறையின்  பகிரங்க  எச்சரிக்கை!ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளவின்படி அதில் (பூமியில்) நாம் முளைப்பித்தோம் - (அல்ஹிஜ்ர் 15: 19)


இயற்கைச் சமநிலையைப் பாதுகாக்க வேண்டுமானால் பயன்படுத்தப்படும் இயற்கை வளங்களின் அழிவைக் குறைக்க வேண்டும்ஒரு மரத்தை வெட்டினால் 10 மரக்கன்றுகள் நட வேண்டும் என்று நீதிமன்றங்களும் தீர்ப்புகள் வழங்குகின்றன.காற்று மாசுபடுதல்:


தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் புகையிலும், வாகனக் கழிவுகளிலும் காரியமில வாயு அதிகமாக உள்ளதுஇந்த வாயு சூரிய ஒளியில் உள்ள வெப்பத்தைத் தரவல்ல கீழ் சிகப்புக் கதிர்களை உட்கவர்ந்து சுற்றுப்புறத்தை அதிக வெப்பமடையச் செய்கிறதுஇதற்கு உலக வெம்மை என்று பெயர்.கரிய அமில வாயுவைப் போல மீத்தேன் வாயுவும் நைட்ரஸ் ஆக்ஸைடும் உலக வெப்ப உயர்வுக்குக் காரணம்இந்த வாயுக்களுக்குப் பசுங்குடில் வாயுக்கள் என்று பெயர். காடுகளை அழிப்பதாலும் கரிய அமில வாயுக்களைக் கிரகிக்கப் போதிய மரங்களின்றி இன்னும் உலக வெப்பம் உயர்கிறது.நே­னல் சயின்ஸ் அகாடெமியின் கூற்றுப்படி பூமியின் சராசரி வெப்பம் கடந்த 100 ஆண்டுகளில்  அதிகரித்திருக்கிறதுஇவ்வாறு உலக வெம்மையின் காரணத்தினால் உலகின் துருவப் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருக ஆரம்பித்துள்ளனஇதன் காரணமாகக் கடலின் நீர்மட்டம் உயர்ந்து தரைப்பகுதியை விழுங்க ஆரம்பித்துள்ளது.சமீபத்தில் 2007ஆம் ஆண்டு பிப்ரவரியில் .நா சபையில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழு ஓர்ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்ததுஅதன்படி இந்தோனேசியாவின் 2000க்கும் மேற்பட்ட தீவுகள் 2030ஆம் ஆண்டிற்குள் மறையும் என்றும் இந்தியா, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பியாவின் தென்பகுதிகள் தாழ்வான பகுதியாக இருப்பதாலும் நீண்ட கடற்கரை அமைந்திருப்பதாலும் பெருமளவு கடற்கரையோரம் பாதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.ஒரு பக்கம் உலக வெம்மையால் பூமி கடல் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளதுமறு பக்கம் சுனாமி, நில அதிர்வு இவற்றாலும் தரைப்பகுதி பாதிப்பிற்குள்ளாகிறதுஇவற்றை இறைவன் கீழ்க்காணும் வசனம் மூலம் எச்சரிக்கிறான்.பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்)குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா?    (13:41)பிரிட்டனின் உலக முன்னேற்றத் துறையால் தயாரித்து வெளியிடப்பட்ட அறிக்கையின்படி இந்தியாவின் வற்றாத  ஜீவ நதிகளான கங்கை, சிந்து, யமுனை, பிரம்மபுத்திரா ஆகியவை இன்னும் 40 ஆண்டுகளில் வற்றிவிடும்உலக வெம்மையின் காரணமாக இமயமலையின் பனிக்கட்டிகள் அதிக அளவில் உருக ஆரம்பித்துவிட்டன.1962ஆம் ஆண்டு 2077 சதுரகிலோ மீட்டர் அளவிலிருந்து உறைந்த பனிக்கட்டிகள் சுமார் 21% உருகி தற்பொழுது 1628 சதுர கிலோமீட்டர் அளவு எனக் குறைந்துவிட்டதுஇவ்வாறு அதிகமாக உருகுவதால் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறதுஇவ்வாறு பனிக்கட்டிகள் அதிக அளவு உருகி அவற்றின் அளவு குறைந்து கொண்டே வருவதால் எதிர்காலத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படும் என்ற கவலை தரக்கூடிய செய்தியும் வெளியாகியுள்ளது.இந்நிலையில் நாம் கங்கை - காவிரி இணைப்பை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்சீனாவும் பாகிஸ்தானும் இமயமலையில் உற்பத்தியாகும் ஜீவ நதிகளையே பெரிதும் நம்பியுள்ளனஇந்நிலையில் இவ்விரண்டு நாடுகளிலும் தண்ணீர்ப் பிரச்சினைகள் ஏற்படக் கூடும். இனி எதிர்காலத்தில் நதிப் பிரச்சினையை மையமாக வைத்து நாடுகளிடையே மற்றும் மாநிலங்களுக்கிடையே சண்டை   மூளும் அபாயம் உள்ளது.இன்னொரு பக்கம் உலகளாவிய வெப்பநிலை உயர்வின் காரணமாக இந்தியத் துணைக் கண்டத்தில் சராசரி மழையளவு பல மடங்கு அதிகமாகும் என்றும் சொல்லப்படுகிறதுஇச்செய்தி ஆறுதலாக உள்ளது. அதை வீணாக்காமல் சேகரித்து வைக்கப் பெரிய ஏரிகளையும், குளங்களையும் அணைகளையும் உருவாக்கிட வேண்டிய கட்டாயத்தில் மத்திய மாநில அரசுகள் உள்ளன.இது குறித்து அல்ஹிஜ்ர் அத்தியாயத்தில் ஒரு வசனத்தையே இறைவன் இறக்கியுள்ளான்இன்னும் காற்றுகளைச் சூல்கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்; பின்னர் வானத்திலிருந்து நாம் மழைபொழிவித்து அதனை உங்களுக்கு நாம் புகட்டுகிறோம்நீங்கள் அதனைச் சேகரித்து வைப்பவர்களும் இல்லை.    (15:22)உலக வெம்மைக்கு யார் காரணம்?


உலகில் வளர்ந்த நாடுகளே முக்கியக் காரணம். இதில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது.நா சபையின் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுமம் உலக வெம்மை எதிர்காலத்தில் ஏற்படுத்தப்போகும் துயரங்களை நினைத்து அச்சங் கொண்டு உலக நாடுகளின் ஒருமித்ததொரு உடன்பாட்டிற்கு வழிகோலியது.அதன்படி 1997ஆம் ஆண்டில் ஜப்பான் நாட்டு கியூட்டா நகரில் ஓர் அரசியல் உடன்பாட்டைப் பல நாடுகள் தயார் செய்தனஇதில் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் கையயழுத்திடவில்லைநம்மால் சுற்றுச்சூழல் கார்பன் அளவைக் குறைக்க முடியாது என்று அவை நினைத்திருக்கலாம்.ஏனெனில் 1997ஆம் ஆண்டு அமெரிக்கா மட்டும் உலக வாயு மண்டலத்தில் வெளியிடப்பட்ட பசுமைக் குடில் வாயுக்களில் 5ல் ஒரு பகுதியை வெளியிட்டிருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றனகியூட்டா ஒப்பந்தப்படி உலகக் கார்பன் அளவைக் குறைத்து உலக வெம்மையும் குறைப்பது என முடிவெடுக்கப்பட்டது.140 நாடுகள் கையயழுத்திட்ட இந்த ஒப்பந்தம் 2005 ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி அமுலுக்கு வந்ததுஆனால் கார்பன் குறைப்பு கையயழுத்தோடு சரிஅதன்படி உலக நாடுகள் நடக்கின்றனவா என்பது கேள்விக்குறியே. இந்த ஒப்பந்தம் நடைபெற்ற ஜப்பான் நாட்டு கியோட்டா நகரத்திலேயே கார்பன் அளவு அதிகமாகிவிட்டது.கியோட்டா ஒப்பந்தம் போல ஏற்கனவே 1992ஆம் ஆண்டில் பிரேஸிலில் உள்ள ரியோடி ஜெனிரோவில் உலகைத் தூய்மைப்படுத்த உலக நாடுகள் அடங்கிய ஒரு கூட்டம் நடந்ததுஅப்பொழுதும் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் இதில் கலந்து கொண்டாலும் முழு ஆதரவு தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.புவி வெப்பத்தைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட கியோட்டா ஒப்பந்தம் 2012ல் காலாவதியானதால் இந்தோனேசியாவின் பாலித்தீவில் 2007ஆம் ஆண்டு டிசம்பரில் 190 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒரு மாநாடு நடந்ததுஇந்த பாலி மாநாட்டில் 2009 ஆம் ஆண்டிற்குள் புவி வெப்பமாதலைக் குறிப்பிட்ட  அளவு கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.வழக்கம் போல் விலகியிருந்த அமெரிக்கா கடைசி நேரத்தில் .நாவின் தலையீட்டால் புவி வெப்பத்தைக் கட்டுப்படுத்த இணைந்து செயல்பட முடிவு செய்ததுபசுமையில்ல வாயுக்களை வெளியிடுவதைத் தடுத்தால் பொருளாதாரத்தில் பலத்த பின்னடைவைச் சந்திக்க நேரும் என அமெரிக்கா பயந்ததால் மனித குலம் பெரும் அழிவைச் சந்திக்க நேரும் என்பதைப் பற்றியும் பயப்பட வேண்டும்பாலி உடன்படிக்கையின்படி வெம்மையில்லாப்  புதிய பூமியை எதிர்காலத்தில் காண்போம் என நம்புவோம்.அடுத்து, காற்று மண்டலத்தில் சுமார் 20கி.மீ உயரம் முதல் 70 கி.மீ உயரம் வரை ஓசோன் என்னும் ஒரு பாதுகாப்பு விதானம் உள்ளதுஇஃது உயிரினங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் குறைந்த அலைநீளமுள்ள புறஊதக் கதிர்களைத் தடுத்துவிடும்ஆனால் மனிதனின் கரங்கள் இதனையும் விட்டுவைக்கவில்லை.1978ஆம் ஆண்டிலிருந்தே இந்த ஓசோன் படலத்தில் ஓட்டைகள் விழுந்து அதன்வழியே  புறஊதாக் கதிர்கள் பூமியை வந்தடைய ஆரம்பித்திருக்கின்றன. இக்கதிர்கள் தோல் புற்றுநோய், கண்புரை நோய் இவற்றைத் தோற்றுவிக்கும் தன்மையுடையதுஓசோன் படலம் பாதிப்பிற்குக் காரணம் குளிர் சாதனங்களில் பயன்படுத்தப்படும் குளோரோ ஃபுளோரோ கார்பன் வேதிப் பொருள்களும், ஜெட்விமான ஏரோசால் கழிவுகளும் ஆகும்.காற்று மண்டலம் இன்னும் பல வழிகளில் பாழ்படுத்தப்படுகின்றது. 1984 ஆம் ஆண்டில் போபால் நகரில் ஒரு பூச்சிக்கொல்லி தொழிற்சாலையிலிருந்து வெளிவந்த மிதைல் ஐசோ சயனேட் வாயுவின் கசிவினால் ஏற்பட்ட உயிர்ச் சேதத்தை நாம் அறிவோம். சுமார் 5000க்கும் மேற்பட்ட போபால் நகர மக்கள் இறந்தனர்.பாதிக்கப்பட்டோர் மொத்தம் 5,72,029 பேர்உச்சநீதிமன்றத் தலையீட்டின் பேரில் இவர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ.1542 கோடியாகும். இதைவிட நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சி என்னவென்றால் சோவியத் ரஷ்யாவின் செர்னோபில் நகரத்தில் அணுமின் நிலையம் வெடித்துச் சிதறியபொழுது ஏற்பட்ட கதிர்வீச்சின் பாதிப்பாகும்.இந்த அணுமின் நிலைய கதிரியக்கத் தனிமங்களின் கதிர்வீச்சால் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்பலர் முற்றிலும் செயலிழந்துவிட்டனர்ஆனால் இந்தப் பேரழிவின் உண்மையான சேதத்தை ரஷ்ய அரசு இருட்டடிப்புச் செய்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.ஆக, ஒவ்வோர் அணுமின் உலையும்  ஒரு சிறிய அணுகுண்டுக்குச் சமம் என்பதை  செர்னோபில் அணுஉலை வெடி விபத்து நமக்கு உணர்த்துகிறதுஅணுமின் உலைகளால் பாதிப்பு  நேராத வகையில் நமக்குப் பிரச்சினையில்லை.இப்பொழுது ரஷ்ய உதவியுடன் தென் தமிழ்நாட்டின் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளதுஅங்குள்ள மண்ணின் மைந்தர்களின் எதிர்ப்பையும், பல மனிதநேய எதிர்ப்புக் குரல்களையும் தாண்டி அணுமின் நிலையம் செயல்படப் போகிறதுசெர்னோபில் சோக நிகழ்ச்சி எதுவும் நடக்காமல் இறைவன் காப்பாற்ற வேண்டும்.1945ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தபோது ஜப்பானில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களில் போடப்பட்ட அணுகுண்டுகளால்  அந்நகரங்கள் நாசமாகி உலக மக்களையே உலுக்கியதுகணக்கில்லாமல் இறந்தவர்கள் போகத் தப்பியவர்களும் அவர்களது சந்ததியினரும் மரபுவழி பிறவிக் குறைபாடுகள், இரத்தப் புற்றுநோய் மூளை வளர்ச்சியின்மை போன்ற பாதிப்புகளுக்கு உள்ளாயினர்.இப்பாதிப்புகளுக்கு உடலில் குரோமோசோம்களில் ஏற்பட்ட திடீர் மாற்றமே காரணமாகும்இந்நிகழ்ச்சிக்குப் பிறகு இன்று வரை யாரும் அணுகுண்டைக் கையிலெடுக்க வில்லைஆனால் அணுகுண்டையும் இரசாயன ஆயுதங்களையும் தயாராக வைத்துள்ளார்கள்மூன்றாவது உலகப் போர் மூண்டால் அணு ஆயுதங்கள்தான் பயன்படுத்தப்படும்விளைவு? அணு ஆயுதங்கள் எதிரிகளை மட்டுமல்லஏவியவர்களையே அழித்துவிடும்.யாருக்காகவும் அழ யாரும் இருக்க மாட்டார்கள்அவர்கள் (உலகைப் பாழ்படுத்துவதிலிருந்து) திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே அவற்றில் சிலவற்றை     அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்    (3041)என்று ஆரம்பத்தில் சொல்லப்பட்ட இறை வசனத்தின்படி மனித இனம், தான் செய்த தவறுகளின் பாதிப்புகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறதேயயாழிய செய்த தவறுகளிலிருந்து திரும்புவதாகத்  தெரியவில்லை.ஒரு பக்கம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அதிகார வேட்கையாலும் வளர்ந்த நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இயற்கை வளங்களைப் பாழ்படுத்தி உலகை கழிவுகளின் இருப்பிடமாக மாற்றிக் கொண்டிருக்கின்றனமற்றொரு பக்கம் மக்கள் தொகைப் பெருக்கத்தால் இயற்கை வளங்கள் கழிவுகளாக மாறுகின்றன.உலக மக்கட்தொகையோ  இப்பொழுது 670 கோடியாகும். 2050 ஆம் ஆண்டில் இது 900 கோடியைக் கடந்துவிடும் என .நா அறிக்கை தெரிவித்துள்ளதுஅதிக விலை கொடுத்து மனித சமுதாயத்தைப் பாதிப்பிலிருந்து காப்பாற்ற வேண்டிய காலக் கட்டத்தில் உள்ளோம்.ரியோடி ஜெனிரா மாநாடு மற்றும் கியோட்டா ஒப்பந்தம் எந்தப் பலனும் அளித்ததாகத் தெரியவில்லைமனிதன் திருந்தித் திரும்புவதாகவும் தெரியவில்லைமார்ச் மாதம் 22ம் நாள் உலக நீர்வள நாள் என்றும் ஏப்ரல் மாதம் 22ம் நாள் உலக பூமி நாள் என்றும் கூறிக் கொள்வதோடு சரி.திருக்குர்ஆன் வசனங்கள் திரும்பத் திரும்ப மனிதனுக்கு உபதேசம் செய்கிறதுநிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு எவ்வித அநியாயமும் செய்வதில்லைஎனினும் மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்.    (17:7)

தொகுப்பு : ஆஷிகுல் கலீல், திருச்சி.