ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

அமுதமொழிகள்


துபையில் கலீபா ஏ.பி.ஸஹாபுத்தீன் பி.இ., எம்.பி.ஏ. ஹக்கிய்யுல் காதிரிய் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற மஜ்லிஸில் ஆற்றிய அருளுரை தொடர்ச்சி...
முரீதீன்களில் ஒருவர் எழுந்து....


வாப்பா! தொழத்தொடங்கும் போது அல்லாஹ்வுக்காகத் தொழுகின்றேன் என தக்பீர் கட்டுகிறோம்அப்போது அல்லாஹ் எங்கோ இருப்பதுபோலவும் நாம் இங்கிருந்து அவனுக்காக தொழுவதுபோலவும் தோன்றுகிறதே! அப்படி சொல்லி தக்பீர் கட்டலாமா? எனக்கேட்டார்அதற்கு சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்... முழுமையை நினைப்பீர் அல்லாஹ் எங்களுடனேயே இருக்கிறான்எங்களுடனேயே இருப்பவனுக்கு அவ்வாறு சொல்ல முடியாதா? நம்முடனே இருக்கும் அல்லாஹ்வுக்காக அப்படிச்சொல்ல முடியாதா(அப்போது அந்த முரீது)....


எல்லாம் ஒன்றாக இருக்கும்போது அவ்வாறு பிரித்துச் சொல்ல முடியுமா? எனக்கேட்டார்அதற்கு ஷைகு நாயகம் அவர்கள்.. எல்லாம் ஒன்றுதான்...  இங்கு நாம் அனைவரும் ஒன்றாகத்தானே அமர்ந்திருக்கிறோம்இங்கு அவருக்காக ஒன்றைச் சொல்கிறேன்... இவருக்காக ஒன்றைச் சொல்கிறன் எனச் சொல்ல முடியாதா? அதில் தவறு இல்லையே...! அப்படித்தான் சொல்லவேண்டும், வேறு எப்படிச் சொன்னாலும் தவறுதான்.நாம் தக்பீர் கட்டும்போது அல்லாஹ்வுக்காகத் தொழுகிறேன் எனும்போது முழுமையை நினைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் தொழுகின்றீர்கள் என்றால் முழுவதும் தொழுகின்றது என்பதுதான் கருத்துநாம் எல்லாமே அதுதானே...! அப்போது ஒருவர் தொழுகின்றார் என்றால் எல்லாமே தொழுகின்றது என்பதுதான் கருத்து. எனவே அல்லாஹ்வுக்காகத் தொழுகின்றேன் என்றுதான் தக்பீர் கட்ட வேண்டும்அப்படிக்கட்டவில்லை யென்றல் எங்கோ இருக்கும் ஹுபல் (மக்காவாசிகளின் பெரிய கடவுள்)லுக்குத் தொழுததாகத்தான் அர்த்தமாகிவிடும்.அந்த முரீது தொடர்ந்து...


ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் எந்த நிய்யத்தில் தொழுதார்களோ அதே நிய்யத்தில் நான் தொழுகிறேன் என நிய்யத் செய்யவேண்டும்  பழைய மறை ஞானப்பேழையில் படித்த நினைவிருக்கிறதுஅப்படி நிய்யத் செய்யலாமா? எனக்கேட்டார்அதற்கு செய்கு நாயகம் அவர்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுததுபோல் நீங்கள் தொழ முடியுமா? யாருக்கும் முடியாது! அப்படி சொல்வது தவறு! பெரியதவறு! நாங்கள் அவர்களுக்கு நிகராக ஆவதுபோல் வருகிறது!நீள்தாடி!


இன்று ஒருசிலர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் வைத்திருந்த தாடியை விட நெஞ்சுவரை மிகநீளமாகவைத்துக் கொள்கிறார்கள். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட மேலானவர்கள் என இவர்களின் நினைப்பு.அந்த மாதிரி எண்ணக் கூடாது! எனவே அல்லாஹ்வுக்காக தொழுகிறேன் என்றுதான் நிய்யத் வைக்கவேண்டும். அந்தக்காலத்திலிருந்து இந்தக்காலம் வரை மிகப்பெரும் இமாம்கள் உலமாக்கள் காட்டிய வழிஇது. அவர்கள் சொன்னதை இதுவரை யாரும் திருத்தவில்லையே! நாம் எப்படி அதைத் திருத்துவது?அவர்களெல்லாம் மிகப்பெரும் அறிஞர்கள்சதக்கத்துல்லாஹில் காஹிரி அவர்கள், மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களெல்லாம் இலேசானவர்களா? அவர்களெல்லாம் இப்படித்தான் தக்பீர் கட்டினார்கள்நீங்கள் சொன்ன மாதிரி கட்டவில்லைபுதிதாக முளைத்து வருவோர் இப்படித்தான் கட்டுவார்கள் போல் தெரிகிறது (சிரிப்பு).அஸ்ஹாபுஸ்ஸூஃப்பா எனும் திண்ணைத் தோழர்கள் நாயகத்தைப் போல தொடர் நோன்பு வைக்கத் தொடங்கினார்கள்இதனைப் பெருமானார் அவர்கள்  கேள்விப்பட்டதும் அந்தத் தோழர்களைப் பார்த்து நீங்கள் என்னைப் போன்றவர்களா? அல்லாஹ் எனக்கு உண்ணவும்குடிக்கவும் தருகிறான்! நீங்கள் அப்படியா? எனக் கேட்டு அவர்கள் தொடர் நோன்பு வைப்பதை விலக்கினார்கள்.இன்று ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை மூத்த சகோதரரைப் போன்றவர்கள் என்றும், அவர்கள் நம்மைப் போன்றவர்கள்தாம் என்று சொல்கிறார்களே! அப்படிச் சொல்லுதல் சரியா? அவர்கள் நம்மைப் போன்றவர்கள் என நினைப்பவன் காஃபிராகிப் போவான். சிகரெட்டைக் குடித்துக் கொண்டு, மது அருந்திக் கொண்டு ரஸூலுல்லாஹ் எம்மைப் போன்றவர்கள் என்றால் சரி வருமா?அஸ்ஹாபுஸ்ஸூஃப்பாக்கள் எதையும் செய்ய ஆயத்தமாயிருப்பவர்கள்ஆனாலும் அவர்கள் ரஸூல்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களைப் போல செய்ய முடியாதுரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுடைய நடை, உடை, வாழ்க்கை, போக்கு எல்லாம் விஷேசமானவைதனித்தன்மை வாய்ந்தவைஒருபுறம் எல்லோரிடம் பேசிக் கொண்டே இருப்பார்கள்மறுபுறம் அவர்களுக்கு வஹீ இறங்கிக் கொண்டே இருக்கும்! எங்களுக்கு வஹீ வருகிறதா? வருமா? எனவே ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களை இலேசாகக் கருதிவிடக் கூடாது!
தள்ளி நிற்க...


வஹாபிகள் என்றால் அவர்களை விட்டுத் தள்ளியே இருக்க வேண்டும்கொம்பு உள்ள மிருகத்திற்கு 5 முழம் தள்ளி நிற்க வேண்டும் என முன்னோர் சொல்லி வைத்தார்கள்குதிரைக்குப் பத்து முழமாம், கொடிய யானைக்கு ஆயிரம் முழம் தள்ளி நிற்க வேண்டுமாம்அது போல வஹ்ஹாபிகளைக் கண்டால் ஆயிரம் முழம்- அடி தள்ளி இருக்க வேண்டும்.பிரச்சினைக்குரிய நேரங்களில் நீங்கள் தள்ளி நிற்கக் கூடாதுஅவனுக்கு சப்போர்ட் ஆதரவு கூடிவிடும்கொஞ்சம் தள்ளி நின்று அவதானிக்க வேண்டும்நாங்கள் சிறு பிராயத்திலிருக்கும் போது இந்த வஹ்ஹாபிய்யத் என்பது அறவே இல்லைஎங்குமே காணவில்லைஅப்போதெல்லாம் ஆலிம்கள் தாம் மார்க்கம் சொல்வார்கள்அலிஃப்... பே தெரியாதவனெல்லாம் மார்க்கம் சொல்லுவதில்லை.பெரிய ஜுப்பாவும், பெரிய தாடியும் வைத்துக் கொண்டு உள்ளே பார்த்தால் ஒன்றுமில்லைவெளியேதான் எல்லாம்யானை விழுங்கிய விளாம்பழம் போலயானை விழுங்கிய விளாம்பழத்தில் உள்ளே ஒன்றுமிருக்காது. அப்படியே உள்ளிருப்பதை யானை ஜீரணித்துவிடும்இதையெல்லாம் நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். தற்பாது சிறுபிள்ளைகள் மாணவர்களையெல்லாம் அழைத்துப்போய் ஈமானைக் கெடுத்துவிட்டார்கள்.இப்போது ஒருவர் எழுந்து... வாப்பா! நம் அருகே வஹ்ஹாபிகள் தொழநேர்ந்தால் அவர்கள் அத்தஹிய்யாத்தில் விரலை ஆட்டுகிறார்கள். அதுவும் வேகமாக ஆட்டுகின்றனர். அது நம் கவனத்தைத் திருப்புகிறது. நம் கண்களை மூடிக்கொள்ளலாமா? எனக் கேட்டார். அதற்கு சங்கைமிகு செய்கு நாயகம் அவர்கள்....அதை நாம் கவனிக்காமல் தொழுகையை முடித்துக்கொள்ள வேண்டும். (தமாஷாக) முடித்தபின் அவன் விரலை ஒடித்துவிடவேண்டும். அப்படி ஒருசிலர் செய்திருக்கிறார்கள்எங்கள் ஊரில் பிஷ்ரு மெளலானா என்ற நம் முரீதுப்பிள்ளை, தம் பக்கத்தில் தொழுத ஒருவர் விரலை ஆட்டிக்கொண்டிருந்த போது, இவர் தொழுகையை முடித்துவிட்டு ஆட்டியவரின் விரலை அப்படியே இறுக்கிப் பிடித்துக்கொண்டாராம்.(சிரிப்பு)இப்போது எல்லாம் கூத்தும் விளையாட்டுமாகத்தானே இருக்கிறது. வஹ்ஹாபிகள் தொழுகையில் காலை அகட்டிக்கொண்டு  நிற்கின்றனர். மார்க்ச்சட்டம் கால்களின் இடைவெளி ஒரு பூனை போய்வருமளவு இருக்கவேண்டும் எனக் கூறுகிறது. ஆனால் இவர்கள் கால்களை அகட்டி ஓர் யானை போகுமளவு நிற்கின்றார்கள்.வஹ்ஹாபிகளின் வி­ஷயம் இவ்வாறுதான் வரம்புமீறி இருக்கிறது. எனவே நீங்கள் கவனமாக இருந்து வாருங்கள். ஏனென்றால் நாளை இறப்புக்குப்பின் அங்கு போகும்போது கவனமாப் போய்ச்சேர வேண்யிருக்கிறது. அங்கு முன்சென்ற ஆன்மாக்களெல்லாம் வரவேற்கக்கூடிய நிலையில் நாம் போகவேண்டும்இருட்டுகுகையில் போவதுபோன்ற நிலைக்கு ஆளாகிவிடக்கூடாது.    (அமுதம் மேலும் பொழியும் - இன்ஷாஅல்லாஹ்)