ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

ஜமாலிய்யா தோட்டத்தில்துறவு என்பது உலகத்தோடு ஒட்ட வாழ்ந்து இறையின்பால் அயரா இன்பமும் ஆசையும் விருப்பும் கொண்டு இறையோடு இரண்டறக் கலத்தலெனும் மோட்சமாகும். உலகத்தோடொட்ட வாழ்ந்தபோதும் உலகாசை நீக்கி இறையில் லயித்தல் துறவிற் சிறந்த துறவாகும். சேற்று மீன் சேற்றினுள்ளிருந்தாலும் அதன்மேற் சேறு படியாதுநீரின் மேலிருக்கும் தாமரையிலைமேல் நீர் படியாதுஓடும் புளியம்பழமும் ஒன்றாயிருப்பினும் நெருங்கிய தொடர்பிராதுஇத்தகைய உதாரணங்கள் உண்மைத்துறவு என்பது யாது என விளக்கும்.


மெளன விரதம் சாதித்தல் எனக்கூறி வாய்மூடிப் பேசாதிருத்தலும், பித்துப்பிடித்தவர் போல் பாதைவழியே சுற்றித்திரிதலும், இகத்தை மறந்து மயக்கநிலை பூண்டவர்போல் மக்களை மருட்டலும், காசாயம் அணிந்து மனைவி மக்களைப் புறம்பே தள்ளி வனவாசம் புகுதலும், பிச்சைப்பாத்திரமேந்திப் பாதை வழியே திரிதலும், நெட்டை மேலங்கி தரித்துத் தலைக்குப் பருத்த தலைப்பாகையணிந்து உருத்திராக்க மாலை கையிலேந்தி ஜபம் செய்வதுபோல் தந்திரம் செய்தலும்தன்னுருவத்தை மாற்றிப் பாசாங்கு செய்தலும் உண்மைத்துறவாகா வென்பதையறிக.ஏகனையறிந்து; தன்னிலை தேர்ந்து; முன்னிலை உணர்ந்து; உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஏகனுக்குத் தியாகம் செய்து தனி நிலை நிற்பதே உத்தமத் துறவாகும்.லி  ஈமான் என்பது என்ன? என்பதன் தாற்பரியத்தை முஉமுன் (விசுவாசி) ஒருவன் நன்குணர்தல் வேண்டும். இவன் ஈமான் உள்ளவன், இவன் ஈமான் இல்லாதவன்; எனவெல்லாம் பொதுவாக மக்கள் தம் மத்தியில் பரிமாறிக்கொள்வதைக் கேட்கும்போது பரிகாசமாயும் விசித்திரமாயுமிருக்கிறது. இவ்வாறு கூறிக்கொள்வோரிடத்தேயும் ஈமானில்லாதிருப்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.அல்லாஹ் ஒருவன் என்பதன் தாற்பரியத்தையும் இணையற்ற நிலையின் தன்மையையும் எதிர்வு நிகரற்ற நேர்மையையும் அதனோடு கூடி ஒன்றாய்க்கலந்து முஹம்மதாகிய அஹ்மதின் தாற்பரியத்தையும் நன்கறிந்து சந்தேகமற நிற்றலே ஈமானாகும் என்பதை நாம் யாவரும் உற்றுணர்தல் வேண்டும்.ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமாகவும் நேர்வழியாகவும்  ரஹ்மத்தாகவும்முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் (இந்த) வேதத்தை உங்கள் மீது நாம் இறக்கிவைத்தோம்.    (அல்குர்ஆன் 16-89)நபியவர்கள் நவின்றதாக அலீ (ரலீ) அவர்கள் அறிவித்தார்கள். குர்ஆன் அல்லாஹ்வின் உறுதியான கயிறாகும். அது விவேகமான சொல்லாகும். உள்ளங்களின் விருப்பங்கள் அதைக்கொண்டு வழி தவறிவிடாது. நாவுகள் அதில் குழம்பிவிடாது. (அதனை ஆய்வு செய்யும்) அறிஞர்கள்  அதன் கருத்துகள் போதும் என நிறைவு பெற்று முடித்துக்கொள்ள மாட்டார்கள் (அள்ள அள்ள அதன் அழகிய கருத்துகள் அவர்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.) அதிகமாக ஓதுவதால் அது பழமையாகாது. (என்றும் புதிதாகவே விளங்கும்.) அதன் ஆச்சரியங்கள் முடிவடையாது.    (திர்மிதி)அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:


குர்ஆன் பல கலைகளைக்கொண்டதாகும். வெளிப்பொருள்களையும் உட்பொருளையும் கொண்ட அதன் ஆச்சரியங்கள் முடிவடையாதுஅதன் எல்லையை அடைய முடியாது. (இப்னு  அபீஹாதம்)அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது (ரலி) அவர்கள் கூறினார்கள்:


முன்னோர்கள் அறிவையும் பின்னோர்கள் அறிவையும் பெற யார் நாடுகிறாரோ அவர் குர்ஆனை ஓதட்டும்.    (அறிவிப்பாளர்: ஸயீது பின் மன்ஸூர் - இத்கான்)குர்ஆன் அறிவு ஞானங்களின் கடலாகும். அந்தக்கலை அருமை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் அளித்தான். ஹள்ரத் அலீ (ரலி) அவர்க்ள் ஸூரத்துல் ஃபாத்திஹாவைப்பற்றிக் குறிப்பிடும்போது நான் ஸூரத்துல் ஃபாத்திஹாவிற்கு விளக்கம் அளிப்பேனேயானால் அவற்றை 70 ஒட்டகைகளில் ஏற்றுவேன் எனக் கூறினார்கள். அண்ணலாரின் அருமைத்தோழர்களே குர்ஆனில் இவ்வளவு விரிந்த ஞானம் பெற்றிருந்தால் அண்ணலார் எவ்வளவு ஞானம் பெற்றிருப்பார்கள்?அண்ணலார் அருளினார்கள்:


உங்களில் சிறந்தவர் அவருடைய மனைவியிடம் சிறப்பாக இருப்பவர்தாம். நன் என் மனைவியிடம் சிறந்தவராக உள்ளேன்.    அறிவிப்பாளர்ஆயிஷா (ரலி) நூல்திர்மிதிஇவ்வறிவிப்பில் நபியவர்கள் மேலும் கூறியதாக இப்னு அஸாகிர் (ரஹ்) அறிவிக்கிறார்கள்:

சங்கையான மனிதனே பெண்களைக் கண்ணியப்படுத்துவான். இழிவானவனே அவர்களை இழிவு படுத்துவான்.அண்ணலார் அருளினார்கள்:


நிச்சயமாக விசுவாசிகளில் பரிபூரண ஈமான் கொண்டவர், அவர்களில் குணத்தால் அழகானவராகவும், அவர் தம் குடும்பத்தாருடன் மென்மையானவராகவும் இருப்பார்.(திர்மிதி)நான் ஆயிஷா (ரலிஅவர்களிடம், நபியவர்கள் தங்கள் இல்லத்தில் என்ன செய்வார்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அண்ணலார் தங்கள் மனைவிமார்களின் வேலைகளில் அவர்களுக்கு உதவுவார்கள். தொழுகை நேரம் வந்துவிடுமானால் உடனே தொழுகைக்கு எழுந்து சென்றுவிடுவார்கள்.    அறிவிப்பாளர்அஸ்வத்  (ரலி)பெண்களுக்கு நன்மையை நாடுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிக்கிறேன் என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள்.    அறிவிப்பாளர்அபூ ஹுரைரா (ரலி)அண்ணலார் தங்கள் ஹஜ்ஜத்துல் விதா எனும் இறுதி ஹஜ்ஜின் சொற்பொழிவில் கூறினார்கள். (மக்களே) அறிந்து கொள்ளுங்கள்! பெண்களுக்கு நன்மையை நாடுங்கள் என நான் உங்களுக்கு உபதேசிக்கிறேன்.    புகாரீ  -  இப்னு மாஜா