ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

சங்கைமிகு இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள்    


அறபுத் தமிழில்:  மராகிபுல் மவாஹிபு ஃபீ மனாகிபி உலில் மதாஹிப்

அழகு தமிழில்:  கிப்லா ஹள்ரத், திருச்சி.
ஸுன்னத் ஜமாஅத்தின் நான்கு இமாம்களில் ஹள்ரத் இமாம் ஷாபிஈ அவர்களும் ஒருவர்இவர்களுக்கு ­ஷரீஅத்தின் ஸுல்தான் என்று பெயர்தமது 14 ஆம் வயதிலே இஸ்லாமிய மஸ்அலா பிரச்சினைகளை என்னிடம் கேளுங்கள்; பத்வா தீர்ப்புகளை என்னிடம் கேளுங்கள்! என்று  மக்களிடம் கூறுவார்கள்இவர்களின் சீடர்களில் இமாம் அஹ்மத் பின் ஹம்பல் ஒருவர்.ஒரு நாள் கலீபா ஹாரூன் Uதுக்கும் அவரது மனைவி ஜுபைதாவுக்கும் ஏதோ ஒரு விஷ­யத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுவிட்டதுஅப்பொழுது ஜுபைதா தன் கணவரைப் பார்த்து, நீங்கள் நரகவாசி எனக் கூறிவிட்டார். உடனே, ஹாருன் Uத், நான் நரகவாசி என்றால் உன்னை விவாக விலக்கு(தலாக்) செய்துவிட்டேன் எனக்கூறி மனைவியிடமிருந்து விலகி வசித்தார்.ஹாருன் Uத், தமது மனைவியை அளவு கடந்து நேசித்தார்ஆகையால், அவளை விட்டுப் பிரிந்து வாழ்தல் அவருக்குத் தாங்க முடியாத வேதனையாக இருந்ததுஎனவே, இந்தச் சங்கட நிலையிலிருந்து விடுதலை பெற அவர் முயன்றார். இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான ஆலிம்களைத் தமது அரண்மனைக்கு வரவழைத்தார்அவர்களைப் பார்த்து சொர்க்கவாசி யார்நான் சொர்க்கவாசியா? நரகவாசியா? என்று நீங்கள் தீர்ப்பளியுங்கள் எனக் கேட்டுக் கொண்டார்.ஆலிம்கள் கலந்தாலோசித்தார்கள்ஆனால், ஒரு முடிவுக்கும் வரவில்லைஒன்றும் சொல்ல முடியாமல் திகைத்தார்கள்அந்த நிலையில், ஆலிம்களின் குழுவிலிருந்து சிறு வயதுள்ள ஒருவர் எழுந்தார், நின்றார், பேசினார்கலீபாவைப் பார்த்து நீங்கள் எனக்கு அனுமதி அளித்தால் நான் உங்கள் வினாவிற்கு விடை தருவேன் என்றார்அவரே இமாம் ஷாபிஈ.அப்பாஸிய ஆட்சியிலே, ஹாரூன் Uதுடைய தர்பார் ஒவ்வொரு அரசாங்கத் துறையிலும் முன்னேற்றமடைந்து, அக்காலத்தில் இருளிலிருந்து ஐரோப்பாவுக்கு ஒளி அளித்ததுஹாருன் Uத் ஒரு சிறந்த மன்னர்அவருடைய தர்பாரில் அவரது ராஜ்யத்திலிருந்து தனிச் சிறப்புள்ள மார்க்க மேதைகள் கூடியிருந்தார்கள்.அவர்களில் ஒவ்வொருவரும் வாய் திறக்க அஞ்சிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு சிறுவர் எழுந்து கூசாமல், கோணாமல், வாய் திறந்தால் ஆலிம்கள் பொறுப்பார்களா?ஆனால் ஹாருன் Uத் அந்தச் சிறுவரை வரவேற்றார்மகிழ்ச்சியுடன் பேசினார்உங்கள் விடையை நான் மகிழ்ச்சியுடன் கேட்பேன் என்றார்.இமாம் ஷாபிஈ    :    இப்பொழுது நீங்கள் என் கேள்விக்கு விடை கொடுங்கள்அதாவது உங்களுக்கு நான் தேவையா? எனக்கு நீங்கள் தேவையா?


ஹாருன் Uத்    :    இப்பொழுது நீங்கள் தாம் எனக்கே தேவை.


இமாம் ஷாபிஈ    :    அப்படியானால் நானே அதிகாரிநீங்கள் என் அதிகாரத்தில் இருக்கின்றீர்கள்ஆகையால் நீங்கள் என்னை உங்களுடைய சிம்மாசனத்தில் உட்கார வைத்துவிட்டு, அதற்குப் பிறகு நீங்கள் என் முன்னால் வந்து நிற்க வேண்டும். (சபையில் கலக்கம் சலசலப்பு முணுமுணுப்பு)


ஹாருன் Uத்    :    சரி, அப்படியே செய்கின்றேன்உடனே இமாம் அவர்களைத் தமது சிம்மாசனத்தில் உட்கார  வைத்துவிட்டுத் தாம் சிம்மாசனத்தின் முன்னால் நின்று கொண்டார்இஸ்லாமிய நாகரீகத்தின் பொற்கால மன்னர் ஹாருன் Uத் இவ்வாறு நின்ற காட்சியும் ஓர் அரிய காட்சியாகத்தான் இருந்திருக்கும்!


இமாம் ஷாபிஈ கம்பீரமாக சிம்மாசனத்தில் அமர்ந்தார்கள்பிறகு பேச ஆரம்பித்தார்கள்.


இமாம் ஷாபிஈ    :    கலீபாவேஎப்பொழுதாவது ஒரு தடவையாயினும் நீங்கள் ஒரு பாவம் செய்யக்கூடிய சக்தியுள்ளவராக இருந்தும், அந்தப் பாவத்திலிருந்து விலகி இருந்ததுண்டா? அந்தப் பாவத்தைச் செய்யாமல் விட்டு விட்டதுண்டா? அந்தச் சமயம் ஆண்டவனுடைய அச்சத்தால் அதன் அருகில் போகாமல் இருந்ததுண்டா?


ஹாருன் Uத்    :    ஆம்சத்தியமாகச் சொல்லுகிறேன்ஆண்டவனுடைய அச்சத்தால் நான் சில பாவங்களைச் செய்யாமல் விட்டு விட்டேன்.


இமாம் ஷாபிஈ    :    அப்படியானால், நிச்சயமாக நீங்கள் சொர்க்கவாசியே!


இத்தீர்ப்பைக் கேட்டு அங்கிருந்த ஆலிம்கள் அதை எதிர்க்க ஆரம்பித்தார்கள்இமாம் ஷாபிஈ மீது குறை கூறினார்கள்கலீபாவை முழுமையும் சொர்க்கவாசி என்று சொல்ல  உங்களிடம் என்ன ஆதாரம் இருக்கின்றது? என்று அவர்கள் கேட்டார்கள்.


உடனே இமாம் ஷாபிஈ, அம்மா மன் காஃப மகாம ரப்பிஹி நஹன்னஃப்ஸ அனில் ஹவா ஃப இன்னல் ஜன்னத்த ஹியல் மஃவா - எவர் பாவஞ் செய்ய  எண்ணி அவர் ஆண்டவனுடைய அச்சத்தால் அந்தப் பாவம் செய்வதினின்றும் விலகி இருப்பாரானால் அவருடைய இடம் சொர்க்கமாகும்.    (நாஸியாத் 79 : 40 - 41) என்ற குர்ஆன் வசனத்தைத் தமக்கு ஆதாரமாக ஓதினார்.


ஹாருன் Uத் அளவிலா மகிழ்ச்சியடைந்தார். மற்ற ஆலிம்களும் இமாம் ஷாபியினுடைய அறிவுத் திறமையைப் போற்றினார்கள்இச்சிறு வயதிலே இவர் இவ்வளவு உயர்வு பெற்றுவிட்டார்வயது அதிகமான பிறகு எவ்வளவு புகழ் பெறுவாரோ ஆண்டவனுக்குத்தான் தெரியும்! என்று வியப்புடன் கூறினார்கள்.


(வளரும்)