ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

சீரகம் ஓர் அருமருந்து


மிஸ்ரிய்யா - ஹைதராபாத்

 


மத்திய தரைக் கடல் நாட்டுப் பகுதிகளில் தான் முதன் முதலாக சீரகம் காணப்பட்டதுபிறகுதான் அது மெக்ஸிகோ, சைனா, இந்தியா போன்ற நாடுகளில் சாகுபடியானது.இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் அதிகம் பயிராகிறதுஆசிய நாடுகளில் மட்டுமின்றி வடக்கு ஆப்பிரிக்கா, இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளிலும் சீரகத்தை சமையலில் பயன்படுத்துகின்றனர்.


அதிக அளவு விடமின் சி, , இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சுண்ணச்சத்து மற்றும் முக்கிய தாதுச் சத்துக்களும் அடங்கியுள்ளனசமையலறை மசாலாப் பொருட்களில் மஞ்சளுக்குப் பிறகு அதிகமாக பயன்படுவது சீரகம்தான்தென்னிந்தியர் சமையலில் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து உணவுக்கு சுவையேற்றுவது போல் பிற மாநிலத்தவர்கள் சீரகம் போட்டு தாளிக்கிறார்கள்.சட்னி, பொரியல், குழம்பு, சோறு வகையறாக்களுக்கு சுவையும் மணமும் தரும் சீரகம், ஜீரணக்கோளாறு, வாந்தி, வயிற்றுவலி, மற்ற வயிற்றுக் கோளாறுகள் போன்றஅனைத்து உபாதைகளுக்கும் சீரகம் ஒரு அருமருந்துஜீரணசக்தி போதுமான அளவு இல்லாதவர்கள் உணவுக்குப்பின், சிறிதளவு வறுத்த சீரகத்தை உட்கொண்டால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.எலுமிச்சை சாறில் சீரகத்தை இருதினங்கள் ஊற வைத்திருந்து இளம் வெயிலில் காயவைத்து  எடுத்துக் கொண்டு வெறும் வயிற்றில் அரை தேக்கரண்டியளவு உட்கொண்டு வர வயிற்றுக் கோளாறு மட்டுமல்ல சகல சிக்கல்களும் தீரும்!சிறுதுண்டு இஞ்சியை இடித்து தண்ணீரில் போட்டு அத்துடன் ஒரு தேக்கரண்டி சீரகத்தையும் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்து வடிகட்டி பருகி வந்தால், தொண்டைப்புண், இருமல், சளி, காய்ச்சல் என அனைத்து அசெளகரியங்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.பட்டை, கிராம்பு, ஏலக்காய் வாசனை பிடிக்காதவர்கள் அதற்குப் பதிலாக சீரகம் தாளித்து தனிச்சுவை பெறலாம்தேங்காய்ச்சோறு, பட்டாணிச்சோறு, சீரகச்சோறு போன்ற விசே­ கால தயாரிப்புகளிலும் சீரகம் தனியிடம் பெறுகிறதுகைப்பக்குவமாக பெண்கள் மருத்துவ பயன்மிகு மசாலாப் பொருட்களை பயன்படுத்தி குடும்பத்தினரின் ஆரோக்கியம் பேணலாம்.