ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

ஞான துளிகள்


தொகுத்தவர் :- திருமதி  G.R.J. திவ்யாபிரபு I.F.S.,சென்னை


 

மதக் கொள்கையில் ஒரு சார்புடையவன் பக்குவமடையாதவன்ஞான நெறியில் பக்குவமடைந்தவன் சமயங்கள் அனைத்தையும் குறுக்கு வழி காட்டுகின்றன என்பதை அறிகிறான்மாடியைச் சென்றடைவது நமது குறிகல்லாலமைந்த படியில் ஆங்கு ஏறிச் செல்லலாம்மரப்படியிலும் அதை எட்டலாம்ஏணியில் ஏறிச் செல்லலாம்மூங்கில் வைத்து அதன் கிளைகளில் ஏறி மேலே போய்ச் சேரலாம்.ஹிந்து மதம், இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம் ஆகியவைகளை யெல்லாம் நான் அனுஷ்டித்துப் பார்த்திருக்கிறேன்ஹிந்து மதத்தில் சாக்த சமயம், வைஷ்ணவ சமயம், வேதாந்த மார்க்கம் ஆகியவைகளை நான் அனுஷ்டித்துப் பார்த்திருக்கிறேன்அவை யாவும் ஒரே பரம் பொருளிடத்து சாதகனை எடுத்துச் செல்லுகின்றன என்பது எனது அனுபவம்.ஆனால் ஒவ்வொரு மார்க்கத்துக்கும் அதனதன் தனி இயல்பு உண்டுதாகசாந்தி பண்ணக்கூடியது ஒரு பொருள்ஒரு படித்துறையில் அதன்கண் சென்று ஒருவன் அதை ஜலம் என்கிறான்இன்னொரு படித்துறையில் மற்றொருவன் சென்று அதே பொருளைப் பானி என்கிறான்வேறொரு மனிதன் மூன்றாவது படித்துறையில் அடைந்து அதை வாட்டர் என்கிறான்.ஆனால் மூவர் பெற்ற பொருளும் ஒன்றேபரம்பொருளும் அத்தகையவர்அவரைச் சென்றடையும் ஹிந்துக்கள் பிரம்மம் என்று அவரை அழைக்கின்றனர்முஸ்லிம்கள் அவரை அல்லா என்கின்றனர்கிறிஸ்தவர்கள் அவரைப் பரலோகத்திலிருக்கும் பிதா என்கின்றனர்.சாது ஒருவனிடம் புஸ்தகம் ஒன்று இருந்ததுஅந்நூல் எதைப் பற்றியதென்று ஒருவர் கேட்டார்சாது புஸ்தகத்தைத் திறந்து காட்டினார்ஒவ்வொரு பக்கத்திலும் இறைவன் என்று மட்டும் எழுதப்பட்டிருந்ததுஇறைவனுக்கு அந்நியமாக சாஸ்திரங்களில் ஒன்றுமில்லை என்பது அதன் கருத்து.இறை தரிசனத்தின் அறிகுறிகள் பல இருக்கின்றனஜோதி தரிசனம் இடையிடையே வருகிறதுஉள்ளத்தில் ஆனந்தம்  ஊற்றெடுக்கிறது; நெஞ்சத்தினுள் பேருணர்வு உதிக்கிறதுவானம் வெளுப்பதோடு இதை ஒப்பிடலாம்எங்கு இறைவனைப் பற்றிய பேச்சு நிகழ்கிறதோ அங்கு இறைவனுடைய சாந்நித்தியமும் சிறப்பாகத் திகழ்கிறது.வழிபாடு செய்கிற இடங்களெல்லாம் இறை ஞாபகத்தை ஊட்டக்கூடியவைகளாக இருக்கின்றனஆகையால் இத்தகைய இடங்களுக்கு மதிப்புத் தருவது அவசியம்இசை போன்ற சிறப்பு ஏதாவது மனிதன் ஒருவனிடத்து மேலோங்கியிருக்குமாயின் அதை இறைவனது வரப்பிரசாதம் என்றே பகர வேண்டும்.பக்தியில் செல்லுகிறவர்கள் நாடுவது எது?


திரிகரணங்களால் இறைவனுக்குத் தொண்டு புரியத் தொண்டன் விரும்புகிறான்தனது ஊனக் கண்கொண்டு இறைவனுடைய பக்தர்களைக் காண அவன் விரும்புகிறான்தியானத்தில் தன் மனதைத் திருப்ப அவன் விரும்புகிறான்இறைவனுடைய நாம உச்சாரணையில் தன் நாவைப் பயன்படுத்த அவன் விரும்புகிறான்.இறைவனிடம் நாம் எதைப் படைக்கிறோமோ அது பன்மடங்காகப் பெருகி நமக்குத் திரும்பி வந்து சேர்கிறதுஒருவர் பாபங்களையெல்லாம் இறைவனுக்கு அர்ப்பணம் பண்ண எண்ணினார்அப்பொழுது குரு எச்சரிக்கை செய்தார்இறைவனுக்கு உங்கள் பாபச் செயல்களை அர்ப்பணம் பண்ணினால் அவை பன்மடங்காகப் பெருகி உங்களிடமே திரும்பி வந்து சேரும்ஆதலால் பாபத்தை இறைவனுக்குப் படைக்க வேண்டாம் என்றார்.வீட்டில் மின்விளக்கு எரிக்க மின்சக்தி வேண்டுகிறவர்கள் காரியாலயத்துக்கு விண்ணப்பம் போட வேண்டும்அப்படிச் செய்தால் மின்சக்தி பெறலாம்ஜீவாத்மன் பரமாத்மாவிடம் முறையாக விண்ணப்பித்தால் அப்பரமாத்மாவோடு யோகம் பண்ணுவதற்கு ஜீவாத்மனுக்கு இயலும்.பெண்பாலர் அனைவரும் இறையின் பக்த சொரூபம்அவர்களில் யாரேனும் துயருற்றிருப்பதைப் பார்க்க என்னால் சகிக்க முடியாது என்கிறார் சற்குருபிஞ்சு தோன்ற ஆரம்பிக்கின்ற பொழுது பூ தானாக விழுந்து விடுகிறதுஇறையருள் வரும்போது சாதகன் ஒருவனுக்கு அமைந்துள்ள கடமைகளெல்லாம் நின்று ஒழிகின்றன.