ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

கலீபா பெருந்தகைகள்


தமிழ்மாமணி, மெளலவி என்.எஸ்.என். ஆலிம். பி.காம்.திருச்சி


 

குத்புல் மத்ஹரீ மகானந்தபாபா முஹம்மது அப்துல் காதிர் வலிய்யுல்லாஹ் (ரஹ்) அவர்களின் வல்லமை குறித்து வலிய்யுல் கறீம் அவர்கள் 1989 ஆம் ஆண்டு மறைஞானப் பேழைக்கு எழுதிய கட்டுரை ஒன்றை இங்ஙனம் இத்தொடரில் காண்போம்..கடவுள் இருக்கிறான் என்பது வெறும் பேச்சு, தர்க்க உத்தேசவாத அளவு மட்டுமல்ல, வாஸ்தவமாயும், அனுபவப் பூர்வமாயும் அவன் இருக்கிறான்அவனின் இருக்கைக்கு அத்யாவசியமான திருக்குணங்களின் வெளியீடே ஜகம் என்பதுஜகத்தில் தோன்றி இருக்கிற ஒவ்வொரு பொருளும் அத்திருக் குணங்களின் ஒவ்வோர் அம்சத்தையும் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றனஜகத்தில் ஒவ்வொரு பொருளும் தனக்குள்ள தனி அம்சத்தில் மற்றொன்றை விட்டுப் பிரிந்து கிடப்பதால் ஒன்று மற்றொன்றைத் தெரிந்து கொள்வது சாத்தியமில்லாமலிருக்கிறது.இப்படி பிரிந்து கிடக்கும் ஒவ்வொரு பொருளும் மற்றொன்றை அறிந்து கொள்ளுவான் வேண்டி, இவ்வளவுக்கும் நடுநாயகமாக மனித உருவத்தைப் பீடமாக அமைத்து அதில் அவன் பிரசன்னமாகிறான்அம்மத்திய ஸ்தலத்திலிருந்து சர்வ சிருஷ்டிகளையும் அறிவின் மூலமாக சம்பந்தப்படுத்தி பலதில் அவன் ஒருவன் என்றும், ஒருவன் என்பதில் பல அம்சமாய் தோன்றியுள்ள அவன் பலது என்றும் பெயர் பூண்டு ஒன்றுமாய், பலவுமாய், உள்ளதுமாய்அல்லாதுமாய், தனக்குத் தானாய் கூடாமல் குறையாமல் பரிபூரணமாயிருக்கிறான்இருக்கையினால் ஜகம் இருப்பதால் அவன் இருக்கிறான் என்பது யதார்த்த உண்மைதானே.ஒவ்வொரு திருக்குணமும் எல்லையற்ற சமுத்திர அலைகள் போல் கால தேச வர்த்தமானத்திற்கு ஒத்த முறையில் பல வடிவங்களில் தோன்றிக் கொண்டே இருக்கின்றனஎல்லாத் திருக்குண வடிவங்களாகி லீலா அலைகளும் ஒரே மகா சமுத்திரமாகிய ஏகத்துவமான அவன் ஒருவனையே சேர்தலென்றாலும் பல குண அம்சங்களாகிய இயற்கை ஒன்றுக்கொன்று மாறுபட்டு பலவாய் பல காரியங்களை ஆற்றும் தன்மை வாய்ந்தனவாய் கடல் அலைகளுக்கு எல்லையில்லை என்பது போல் இவ்வியற்கை வடிவங்களுக்கும் ஓர் அளவே இல்லாமல் மோதிக் கொண்டிருக்கின்றன.பல திருக்குணங்களின் அடியாய்ப் பிறந்த பல இயற்கை வடிவங்களும் வெளி வடிவத்தில் ஒன்று மற்றொன்றுக்கு முரண்படுவதும், பேதப்படுவதும், அதன் மூலமாகப் பல சீர்குலைவுகள் ஏற்பட்டு, ஜகத்தில் மாச்சரியமும், குழப்பமும் ஏற்படுவதுமாயிருக்கின்றனஇவ்வாறு தன்னுடைய திருக்குணங்களின் பூரணத்துக்காகப் பிறந்த ஜக அழிவால் தன் தரிசன ஆனந்த நோக்கம் பூர்த்தியடைவதில்லை.எனவே, இயற்கை வடிவங்கள் ஒன்றோடொன்று முரண்பட்டு மோதி சீர்கெட்டு விடாமல் வரம்பிற்குட்பட்டு காப்பாற்றுவான் வேண்டி மனித உருவமாகிய பீடத்தில் அவன் பிரசன்னமாகி ஒவ்வொரு இயற்கையும் அதன் வழியே முரண்படாமல் முன்னேறிச் சென்று, மத்திய ஸ்தலமாகிய அவனைக் கொண்டே சமாதானம், சாந்தம், சுபிட்சம், சந்தோ­ம் முதலியவற்றிற்கு வழிகோல வேண்டியதாயிருக்கிறது.இது அவன் தனக்கு வகுத்துக் கொண்ட வழக்க வழிஇதற்கேற்பவே அவன் ஒவ்வொரு யுகத்திலும் தன் காரியங்களை நடத்தி வந்திருக்கிறான். திருக்குண இயற்கை வடிவங்களாகிய எத்தனை யுகங்கள் மகா சமுத்திர அலைகள் போல் தோன்றி மறைந்தாலும் யுகப் பிராப்திகள் அவனைக் கூட்டுவதுமில்லை, குறைப்பதுமில்லை, பேதப்படுத்துவதுமில்லை.அவன் இருந்தபடியே இருக்கின்றான்அப்படியே இருந்தும் வருவான்அவன் பூரணன்அவனுக்கு உள்ளும் இல்லைபுறமும் இல்லைஅவன் நித்தியன்இப்பேர்ப்பட்ட அவன் எத்தனையோ யுகங்களில், எத்தனையோ பெயர்களில், எத்தனையோ தரங்களில், மனித உருவ கொலு மண்டபத்தில் வீற்றிருந்து, அஞ்ஞான சேத புத்தியால் ஏற்படும் ஜக அழிவை விலக்கி, தனது திருநாமங்கள் பிரகாசித்து ஷேமம் நின்று, நிலவி வர செய்திருக்கின்றான்.  இப்படித் தோன்றும் பூரண வடிவமே வேத புரு­ர்கள் என்றும், அவதார புரு­ர்கள் என்றும், உலகப் போதகர்கள் என்றும் பெயர் பெற்றிருக்கிறதுஅவன் பூரணனானபடியால் அவன் எந்தக் காலத்தில், எந்த உருவத்தில், எந்தக் கலாச்சாரத்தில், எந்த தேச வர்த்தமானத்தில் தோன்றினாலும் அவன் துண்டுபடாது, பங்கு கொள்ளாது, பேதப்படாது, சர்வயுக இரகசியனாய் அவனே தோன்றுகிறான் என்பது அனுபவம் கண்டறிந்த யதார்த்த உண்மை.எனவே ஒரு மகானில் தெய்வப் பிரசன்னம் ஏற்பட்டு, அவர் ஓர் அவதாரப் புரு­ராய்த் திகழும் பொழுது, அத்திரு உருவத்திற்கு அகம், புறம் என்பதும், ஸ்தூலம், சூக்குமம் என்பதும் இல்லைஅவருக்கு மேல்-கீழ் என்பதும் இல்லை என்கிற வகையில் ஏகமாய் அவனின் பெயரால் மகானின் பூத உடல் கொலு மண்டபமாய் ஆன்ம சொரூபி என்னும் வியாபகத்தால் விரிந்து, பரவி இருக்கிறது.அதுசமயம் தீர்க்கதரிசிகள் என்ன, மகான்கள் என்ன, எல்லோருமே அதில் சஞ்சரிக்கிறார்கள்பகவான் ஆகிவிட்ட அவருக்கு சுபசோபனம் கூறுகிறார்கள்அவ்விடத்தில் முன் தோன்றிய பல அவதாரங்கள் ஜாதி, மத, தேச, பாஷை வித்தியாசமின்றி ஒருங்கே கூடுகிறார்கள்புது மகானுக்கு ஆசி கூறுகிறார்கள்இதுதான் சத்தியம்.இந்த வகையில், இதே நடைமுறையில் பாபா மஹானந்தாவுக்கு பணியாரனேந்தல், ஏரிக்கரைப் புளியமரக் கிளையில் நடந்த தெய்வப் பிரசன்ன சம்பவ வரலாறு பின்வருமாறு:பாபா நாயகமவர்கள் திருப்பத்தூர் மீரான் ராவுத்தர் வீட்டில் சம்பவித்த மரணத்துக்க விசாரணைக்காகப் போயிருந்தார்கள்துக்கவிசாரணைக்குப் பின் பாபா அவர்கள் மீரான் ராவுத்தர் வீட்டில் சில காலம் தங்கியிருந்தார்கள்.மீறான் ராவுத்தர் அவர்கள் ஒரு பிரபல வியாபாரியாயும், தனவந்தராயும், உபசாரக் குணம் படைத்தவராயுமிருந்தார்பாபா நாயகமவர்களை  ஏற்கனவே கண் சிகிச்சையின் போது தெரிந்திருக்க மீரான் ராவுத்தர் அவர்களுக்கு பாபா அவர்களின் தெய்வ பக்தியும், தன்னலப்பற்றற்ற தன்மையும், உலகத்துறவும் அவர்கள் பால் அன்பு செலுத்தி  அவர்களுக்கு உபசாரம் செய்ய மீரான் ராவுத்தரைத் தூண்டின.எனவே, நிறைந்த உள்ளன்புடனும், உதார குணத்துடனும், மீரான் ராவுத்தர் செய்து வந்த உபசாரம் சில காலம் பாபா நாயகமவர்களை அவ்விடத்தில் இருக்கச் செய்தனதனியனைத் தேடி தனியே இருக்க விரும்பிய பாபா அவர்களை அவ்வுபசாரம் கவரவில்லை என்றாலும் அந்தச் சமயத்தை தக்க சாதனமாகக் கொண்டு தன் உணர்ச்சி வழியே செல்ல ஓர் உபாயமாகக் கொண்டார்கள்.பாபா நாயகமவர்கள் காலை வெளியே செல்லும்போது வழக்கமாகத் தன் துணையாகக் கொண்டு செல்லும் பையனுடன் பணியாரனேந்தல் போவதும், அங்கு ஏரிக்கரையிலிருக்கும் புளிய மரத்தில் ஏறி குறித்த கிளையின் மீது சாய்ந்து சயனித்து தனது தியான உணர்ச்சியிலிருப்பதும், மாலைக் கதிரவன் தன் அயர்வுக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கும் போது வீடு திரும்புவதும், அப்பால் ஏதோ புசித்துப் பருகி காலம் கழிப்பதும் சகஜமாயிருந்து வந்தது.காலை முதல் மாலை வரை ஒன்றும் புசிக்காது, பருகாது வீடு திரும்பவில்லையே என்னும் பட்சாதாப உணர்ச்சியால் உந்தப்பட்ட மீரான் ராவுத்தர் அவர்கள் ஒரு நாள் சில சகாக்களுடன் பாபாவைத் தேடி, குறித்த புளிய மரத்தருகில் வந்து, தங்களின் சமாதி நிலையில் மெளனமாய் ஒன்றும் பேசாது ஒடுங்கியிருந்து கொண்டிருந்த பாபாவை மரத்தின் கிளை மீது அமர்ந்திருக்கப் பார்த்தார்அளவாக மேகம் மரத்திற்கு மேல் நிழலிட்டுக் கொண்டிருக்கிறது.மனித சஞ்சாரம், பேச்சு சத்தம் கேட்கிறதுஆனால் அங்கு யாரும் தென்படவில்லைகொஞ்ச நேரத்திற்குப் பிறகு மரமே ஒரு பெரும் பேரொளியால் கவரப்பட்டு, மரம் அதில் மறைந்து விட்டதுஇதைக் கண்ணுற்ற மீரான் ராவுத்தரும் மற்றவர்களும் ஒன்றும் புரியாது திகைத்து  திடுக்குற்று பாபாவுடன் இருந்த பையனை நோக்கி, பையனே நீ ஜாக்கிரதையாய் மரத்தடியிலிருந்து கொண்டு, மேல் நடக்கும் சம்பவங்களை எங்களுக்குத் தெரியப்படுத்து என்று சொல்லிவிட்டு வீடு திரும்பிவிட்டார்கள்.திரும்பி வந்த அவர் அச்சம்பவத்தை வீட்டிலுள்ளவர்களுக்கு சொல்லிக் கொண்டிருந்தார்சிவகங்கை ரோடு, பணியாரனேந்தல் கிராம ஏரிக்கரை புளிய மரத்திற்கு வந்த வாய்ப்புத்தான் என்ன! சில மகான்களுக்கு மலையில், சில மகான்களுக்கு ஏதோ ஒரு பொதிகை மரத்தடியில், சிலருக்கு குகையில் தெய்வப் பிரசன்னம் ஏற்பட்டது என்பது சரித்திரம் காணும் உண்மைமகான் பாபாவுக்கு புளிய மரம் இலக்காயிருந்தது போலும்புளிய மரத்திற்குக் கிடைத்த ஒரு நல்ல சந்தர்ப்பம் ஒரு புனித பக்தனுக்குக் கிடைத்துவிட்டால் அவன் ஒரு பெரிய பாக்யசாலி தான்ஆம்! பக்தர்களுக்கு அந்தப் பாக்கியத்தை அளிப்பதற்குத்தான் பாபா அவதரித்தார்கள்அதில் சந்தேகம் இல்லை.மனிதப் பண்பென்னும் குண வடிவமாயும், தெய்வப் பண்பென்னும் ஏகத்துவமாயும் மாறி மாறி இயங்கிக் கொண்டிருந்த பாபா அவர்கள் எதிர்பாராத விதமாய்த் தான் என்னும் சுத்த சைதன்னியத்தால் திடீரென பலமாய்த் தாக்கப்பட்டு, நிலை குலைந்து சிதறிப் போன நிலைமையில் திகில் கொண்டு மூர்ச்சித்தார்கள்அம்மயக்கத்தில் உள்ள நிலையைப் பற்றிச் சொல்லிக் கொள்ள அங்கு யாரும் இல்லை.இந்நிலையில் மரத்தின் கிளையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஆன்ம சொரூபிகளால் கைதாங்கப்பட்டு, தரையில் வந்து சேர்ந்தார்கள் பாபா நாயகம்அது சமயம் பக்கத்தில் கூடிவிட்ட வழிப்போக்கர்களின் தூண்டுதலின் பேரில் பையன் ஓடோடியே ஊர் வந்து, மீரான் ராவுத்தரிடம் இருக்கிற நிலையைச் சொல்ல, மீரான் ராவுத்தரும் மற்றும் சிலரும் அதிவேகமாய் மரத்தருகில் வந்து ஒன்றும் புரியாமல் வீட்டுக்குத் தூக்கிப் போனார்கள்.பாபாவின் சாத்வீகத் தன்மையும், அடக்க புத்தி போக்கையும் ஏற்கனவே தெரிந்திருந்த மக்கள் பாபாவிற்கு ஏற்பட்ட இந்த அசம்பாவித நிகழ்ச்சியைக் கேட்டு, திகில் கொண்டு அவர்களின் சேம விசாரணையில் பெருந்திரளாய்க் கூடிவிட்டார்கள்.பிரக்ஞையற்றிருக்கும் அவர்களைப் பற்றி வந்த ஒவ்வொருவரும் அவரவர்களின் அறிவு, அனுபவ அளவாகப் பலவாறாக அபிப்பிராயம் கூறத் தலைப்பட்டுவிட்டார்கள்பிசாசுக்குணம் என்றார் சிலர், வியாதிக் குணம் என்றார் வேறு சிலர்இப்பரிசுத்த ஆத்மாவுக்கா இவ்வாறு ஏற்பட வேண்டுமென பரிதவித்தனர் வேறு பலர்இவ்வாறு பலதரப்பட்ட பட்சாதாப அபிப்பிராயங்களுக்கு மத்தியில் கண் சிகிச்சையில் அறிமுகமாயிருந்த பழைய டாக்டர் கூக்கல் பர்க்கை சடுதியில் தருவித்துவிட்டார் கனம் மீரான் ராவுத்தர்டாக்டர் உச்சி தொடுத்து உள்ளங்கால் வரை ஒவ்வொரு அகப்புற அவயவத்தையும் தன்னிடத்தில் உள்ள எல்லா சாதனக் கருவிகளையும் கொண்டும், அதிநுட்பமாய் தன்னுடைய முழு மூளையின் சக்தியையும் பிரயோகித்துப் பார்த்தார்.நாடி அடிக்கவில்லைஆனால் பாபா நாயகம் பேசுகிறார்கள். வந்த மக்களின் முன்பின் கிரியைகளையும், மனோ நிலையையும், தெளிவுபட எடுத்துச் சொல்லி அவர்களைத் திகைக்க வைக்கிறார்கள்அச்சமுறுத்துகிறார்கள் பாபா நாயகம்இதையயல்லாம் அறிந்த டாக்டர்இவரையொத்த ஒரு வியாதியஸ்தரை நான் இதுவரை என்றும் கண்டதில்லைநாடியில்லை - பேசுகிறார்உணவு இல்லை - திடமாய் இருக்கிறார்எனவே மனித எத்தனத்திற்குப் புறம்பான ஏதோ ஒரு வி­யமாயிருக்கிறது இது என்றார் டாக்டர்.பாபா நாயகம் டாக்டரைப் பார்த்து வெகு காலமாய் உன் மனைவி வயிற்றுக் கோளாறினால் உபாதைப்பட்டுக் கொண்டிருக்கிறாள்அவளுக்கு சிகிச்சை செய்து கஷ்ட நிவாரணையளிக்க இயலாத நீர்தானா எம்மைச் சோதித்து வைத்தியம் செய்ய முடியும்? என்று பகர்ந்தார்கள்மத பக்தியுள்ள டாக்டர், என் மனைவியை முன்பின் அறியாத இவர் எவ்வாறு இந்த இரகசியத்தை இயம்பலானார் என்று வியந்து பாராட்டி, இவர் முன்னையோரையொத்த ஒரு மகானாய்த்தான் இருக்க வேண்டும் என்று சொல்லி, உடனே ஒரு தொகையை எடுத்து சுவாமிஜி அவர்களுக்கு காணிக்கை அளித்து என் மனைவி பூரண சுகமடைய தாங்கள் ஆசீர்வதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அவ்விடத்தை விட்டகன்றார்.பாபம் டாக்டர் என்ன செய்வார்! ஆதிக்க ஆக்கிரமிப்பு நோக்கம் கொண்ட அவன் வெகு காலமாகவே தன்னுடைய ஒவ்வொரு குண வடிவ அம்பால் பல காலம் எய்து படுகாயத்திற்குள்ளாக்கி, மெய்வருந்தி, மெலிந்து நாதியற்று இருந்த சமயம் பார்த்து ஒரேடியாகக் குதித்துப் பாய்ந்து அவ்வரண்மனையை தனதாக்கிக் கொண்டு, அவ்விடமிருந்த அகப்புற சிப்பந்திகளையெல்லாம் ஒருங்கே அடக்கி, அழித்து, அவன் ஆணையைத் தவிர்த்து அங்கு யாருக்கும் அதிகாரமில்லை என்று ஆக்ஞையிட்டுவிட்டான்.எனவே அவ்விடம் அகப்புறப் புலன்களோ, கருவிகள் வேலை செய்வதற்கோ, மறுப்பதற்கோ இல்லைஇந்நிலைமையில் அக்கொலு மண்டபம் அவன் அதிகாரத்திற்குள்ளாகியது.அதைக் காப்பாற்றும் பொறுப்பும் அவனுடையதாயிற்றுஅகம்புறம் இல்லாத அவன் சொல்; சக்தி வாய்ப்புக்காக அக்கொலு மண்டபத்தை தன் இஷ்டத்திற்கு உள்ளாக்கிக் கொண்டான்.அப்பால் அவன் ஒரு ஸ்ரீமுகமும் விடுத்தான் புராதனமும் - பூரணமும் நாமேயாகும்தன்மய திடீர் தாக்குதலால் திகைத்து, சிதறுண்டு போன பாபா நாயகமவர்கள் நான் எனத் தெளிந்து, மறுமலர்ச்சி பெற்று உய்த்துணர்ந்து எல்லாமாய், எங்குமாய்த் திரிகாலமூர்த்தியாய், உலக மாக்களை மக்களாக்கும் கடமையைக் கண்டார்கள்அதுசமயம் மீரான் ராவுத்தர் அவர்கள் மரத்தின் மீது நடந்த  வரலாற்று இரகசியங்களைத் தெரியப்படுத்த உத்திரவாக வேண்டுமாய்ப் பிரார்த்தித்துக் கொண்டார்.அது வருமாறுநான் மரக்கிளையின் மீது சயனித்திருந்த சமயம்; ஒரு மாபெரும் ஒளி என்னைக் கவர, அவ்வெளிச்சத்தால் மதி மயங்கிய என்னைப் பல வேத புரு­ர்கள், அவதாரங்கள், மகான்கள் புடைசூழ முஹம்மது நபி (ஸல்) அவர்கள் என் முன்னிலையில் தோன்றி, மகனே உனக்கு மகான் என்னும் பட்டம் சூட்ட நாங்கள் இவ்விடம் விஜயம் செய்திருக்கிறோம்உலகத்திலுள்ள மதம் ஒன்றே என்றும், அம்மதம் தெய்வ இயற்கை மதம் தான் என்றும், அதில் ஜாதி, மத பேதமில்லை என்றும், அதுதான் அன்பு மதம் என்றும் திருவாய் மலர்ந்தருளினார்கள்பக்கமிருந்த அவதாரப் புரு­ர்கள் முஹிய்யுத்தீன், அபுல் ஹஸன் அலி ஷாதுலி, இப்னு அரபி இன்னும் பலரும் ஆசி கூறினார்கள் என்பதாக பாபா நாயகம் விளக்கம் அளித்தார்கள். (வளரும்)
மன்னார்குடி நகரில் மீலாது விழா


மன்னார்குடி முஸ்லிம் ஐக்கிய ஜமாஅத் சார்பில் 14.02.2015 சனிக்கிழமை காலை அசோகா திருமண அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு எம்.. மஹ்மூதுல் ஹஸன் தேவ்பந்தீ  தலைமைதாங்க. பள்ளிவாசல் நிர்வாகிகள், நகரப்பிரமுகர்கள் முன்னிலை வகித்தார்கள்எஸ்.அப்துஸ்ஸலாம் ஆடிட்டர் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆர்.அப்துல்கரீம் தொடக்கவுரை நிகழ்த்த, எம்.ஜே. அப்துல்மாலிக் பரிசுகளை வழங்கினார். மன்னார்குடி நகர பள்ளிவாசல் இமாம்கள் திருவாரூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாக உலமாப் பெருமக்கள் சிறப்புரையாற்றினர். மேலப்பாளையம் உஸ்மானிய்யா அறபுக்கல்லூரி பேராசிரியர் பி.. காஜா முயீனுத்தீன் பாக்கவி ஹள்ரத் பேருரையாற்றினார். .நவ்ரங் பாஷா நன்றி கூறினார். அனைவருக்கும் கந்தூரி உணவு வழங்கப்பட்டது.செய்தி : அய்யூப் ஹக்கிய்யுல் காதிரிய்.