ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்திருச்சி, மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரியில் கம்ப்யூட்டர் அடிப்படைக் கல்வியுடன் குர்ஆன் ­ஷரீப் ஓத கற்றுக் கொள்ள மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு!


பயிற்சி நாட்கள் : 13.04.2015 முதல் 24.5.2015 வரை


சென்ற வருடங்கள் போல் இந்த வருடமும் திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் J.J.பொறியியல் கல்லூரி அருகே அமைந்துள்ள மதுரஸதுல் ஹஸனைன் ஃபீ ஜாமிஆ யாஸீன் அறபுக் கல்லூரியில் முப்பது நாட்களில் குர்ஆன் ­ஷரீப் ஓதக் கற்றுத் தரும் சிறப்பு வகுப்பு நடைபெறுகிறது.ஐந்து கலிமாக்கள், தொழுகையில் ஓத வேண்டியவைதீனிய்யாத் பாடங்கள், சூராக்கள், துஆக்கள், இஸ்லாமிய வரலாறு, நபிமார்கள் வரலாறு, மெளலிது ­ஷரீப் ஓதப்பயிற்சி, ஒழுக்கக் கல்வி அனைத்தும் போதிக்கப்படும்.


சிறந்த அரபி ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் கற்றுத் தர  தனி ஆசிரியரும் உண்டு.


நிறைந்த பாதுகாப்பு - படிப்பதற்கேற்ற தனிமையான சுற்றுச் சூழல்.


பெற்றோர்களே! உங்கள் பிள்ளைகளை குர்ஆன் ­ஷரீப் ஓதத் தெரிந்த - இஸ்லாமிய ஒழுக்கம் அமைந்த - மாணவராக மாற்ற இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


உணவுக் கட்டணம் ரூ. 2000/-; பயிற்சி இலவசம்.மாணவர்களைச் சேர்ப்பதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி


முதல்வர்  ஹிஅப்துஸ் ஸலாம். பி.காம்.  99438 -59758


ஹிசயீது முஹம்மது ஆலிம் மிஸ்பாஹி  98420 - 95848


மூ. முஹம்மது ரஹ்மத்துல்லா .பு..ளீலிது.,  97904  - 45055


Sஹுஸைன் முஹம்மது ஆலிம் மன்பயீ  99445 -76165


A.N.M. அன்சாரி  னி.பு.    80569 - 8101 


ஹி. முஹம்மது ரபீஉத்தீன் ஆலிம் நூரீ  99437 - 86269ஏழு வருட அறபி ஜும்றா ஓதுவதற்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுத்து முதல் ஜும்றாவில் சேர்த்துக்  கொள்ளப்படுவர்ஜந்தாவது வகுப்பு படித்து முடித்த  மாணவர்கள் ஸ்கூல்  T.C.யுடன்  அணுகவும்.


கலீல் இப்ராஹீம், திருச்சி.
கருவின் உருவே கார்முகில் மழையே

 காமில் நபிகளின் குலவழிக் கோனே

 குன்றா ஞானமே குறையா அருளே

 குவலயம் போற்றும் குத்புஸ் ஸமானே..!

 காரணம் நல்கிடும் காமிலீன் பீரே

 காட்சியில் பூரணம் காண அருள்வீரே

 திங்களும் திகைப்புறும் திருமுகம் கண்டே

 திருக்கரம் தீண்டிட தொலைந்தே னன்றே..!

 உம்முகம் கண்டோர் உண்மையைக் கண்டார்

 உம்கரம் பற்றியோர் உயர்வதும் கொண்டார்

 உள்ளமதை ஆளும் உத்தமர் நீரே

 உம்மடிமை எமை என்றும் ஏற்பீரே..!

 வெலிகாமை வுதித்த வெண்பிறை நீரே

 விடிவெள்ளியாய் என்றுமே ஒளி தருவீரே

 வான்புகழ் மிஞ்சிடும் வாப்பா நாயகம் - நாங்கள்

 வாழ்ந்திடும் வரையில் நீரே எம்தாயகம்...!