ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

அஹ்மது கபீர் ரிஃபாயி ஆண்டகை (ரலி) ஹள்ரத் ரிபாயி ஆண்டகை (ரலி) அவர்களின் திருநாமம் கெளதுல் அஃலம் முஹிய்யுத்தீன் ஆண்டகை (ரலி) அவர்களுடைய திருநாமத்துக்கு அடுத்தபடியாக உலகமெங்கணும் மதித்துக் கொண்டாடப்பட்டு வருகிறதுதுருக்கி, ஸிரியா, மொராக்கோ, தூனீஸ், அல்ஜீரியா, எகிப்து போன்ற நாடுகளில் இன்றும் அவர்கள் திருநாமம் மதித்துப் போற்றப் படுகிறது.மத்திய அரபு நாடுகளிலும், இந்தியாவிலும் மட்டுமின்றி இந்தோனேஷியாவிலும் அவர்கள் புகழ் பெருத்த அளவில் பரவியுள்ளதுஉலகின் பல்வேறு பாஷைகளிலும் அவர்களைப் பற்றிய, அவர்கள் உபதேசங்கள் அடங்கிய எண்ணற்ற சிறந்த  நூற்கள் எழுதப்பட்டிருக்கின்றன.ஏழ்மையை மேற்கொண்டு, ஊர் ஊராய்ச் சுற்றி, உணவு கிடைத்தால் உண்டு, இல்லாவிடில் அதுபற்றிய கவலையின்றி, இஸ்லாமியச் சேவையில் நாட்டம் செலுத்தும்பகீர்கள்’ கூட்டத்தை உண்டாக்கிவிட்டவர்கள் ரிபாயி ஆண்டகை அவர்கள்அவர்கள் பிறந்த ஊரில் இருந்து கொண்டே திக்ரு தியானங்களின் மூலம் அந்தப் பகுதியைச் சேர்ந்த மலைமக்களிடையே புதிய வீரியமும், ஐக்கியமும் உண்டாகிப் பிற்காலத்தில் அவர்கள் ஒரு சாம்ராஜ்யத்தையே காணுமளவுக்கு வழி வகுத்தவர்கள் ஸுல்தானுல் ஆரிபீன் ஆண்டகை (ரலி) அவர்கள்.எதிரிக்கு எந்தத் தீங்கும் செய்யாது, எதிரியிடத்தும் விவரிக்க ஒன்னா அன்பு காட்டி, தமக்குக் கொடுமைகள் செய்தவர்களுக்கும் பேருதவிகள் புரிந்து, ஒரு கொசு, மூட்டைப் பூச்சிக்குக் கூடத் தீங்கிழைக்காத அஹிம்சையின் உருவகம் மகாத்மா ஸுல்தானுல் ஆரிபீன் ஸையிது அஹ்மதுல் கபீர் ரிபாயி ஆண்டகை( ரலிஅவர்கள்.கல்வியிலே உன்னத அறிவு படைத்த அறிஞர் (ஆலிம்) ஆகவும், குர்ஆன், ஹதீஸ் விளக்கத்தில் சிறந்த விரிவுரையாளர் (முஃபஸ்ஸிர்) ஆகவும், மார்க்கச் சட்ட நுணுக்கங்களை யெல்லாம் உணர்ந்த சட்ட நிபுணர் (பகீஹ்) ஆகவும், திருக்குர் ஆனை நினைவில் கொண்ட பெரியார் (ஹாபிஸ்) ஆகவும், அதை இனிமை சொட்டக் கேட்போர் பரவசமடையப் பாராயணஞ் செய்பவர்கள் (காரீ) ஆகவும், ­ஷரீஅத்தின் வரம்பைத் தாண்டாத ஒழுக்க சீலர் (ஸாலிஹ்) ஆகவும், ஆத்ம ஞானப் படித்தரங்கள் பலவும் கடந்து குத்பியத், கெளதியத் ஆகிய ஸ்தானங்களையும் கடந்த, அல்லாஹ்வாலேயே ஸுல்தானுல் ஆரிபீன் என்று பட்டஞ் சூட்டப்பட்ட ஆண்டகையாகவும் விளங்கியவர்கள் ஹள்ரத் அஹ்மதுல் கபீர் ரிபாயி (ரலி) அவர்கள்.ஸுல்தானுல் ஆரிபீன் (ஆரிபு நாயகம்), புர்ஹானுல் ஆஷிக்கீன் (மெய்க்காவலர்களின் அத்தாட்சி), ஸைஃபுல்லாஹ் (அல்லாஹ்வின் வீரவாள்), மிஃப்தாஹுல்லாஹ் (அல்லாஹ்வின் ஞானப் பொக்கி­ம்) பஹ்ருல்லாஹ் (அல்லாஹ்வின் ஞான சாகரம்), குத்புல் ஆலம் (உலகின் குத்பு), தாஜுல் ஒளலியா (ஒளலியாக்களின் கிரீடம்), மஹ்பூபு ரப்பில் ஆலமீன் (இறைவனின் அன்பர்), கைருல் ஒளலியா (ஒலிமார்களின் மகத்தானவர்), கெளதுஸ்ஸகலைன் (ஜின், மனு இரு இனங்களுக்கும் கெளது), குத்புல் அக்தாப், (குத்புகளின் நாயகர்) என்பவை போன்று தொண்ணூற்றொன்பது சிறப்புப் பெயர்களுடைய மாபெரும் துறவி ஸையிது அஹ்மதுல் கபீர் ரிபாயி ஆண்டகை (ரலி) அவர்கள்.முன்னோர்கள் ஸுல்தானுல் ஆரிபீன் ஸையிது அஹ்மதுல் கபீர் ரிபாயி ஆண்டகை(ரலி) அவர்கள் ஹள்ரத் கெளதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை (ரலி) அவர்களுக்கு நாற்பத்து இரண்டு வயது இளையவர்கள்நமது ஹள்ரத் குத்புல் ஹிந்த் காஜா முயீனுத்தீன் அஜ்மீரி (ரலிஅவர்களுக்கு ரிபாயி நாயகம் பதினெட்டு வயது மூத்தவர்கள்.ஸுல்தானுல் ஆரிபீன் அஹ்மதுல் கபீர் ஆண்டகை(ரலிஅவர்கள் தந்தை வழியில் ஹுஸைனியாவார்கள்நம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களிலிருந்து பதினெட்டாவது தலைமுறையில் இவர்கள் உதித்தவர்கள்அதாவது, அரபியும், ஹாஷிமியும், குறைஷியும், ஸையிதுமான இவர்கள்ரிபாயி’ என்ற கிளையைச் சேர்ந்தவர்களாவார்கள்இவர்களின் பெயரின் கடைசியில்ஹுஸைனுர் ரிபாயி’ என்னும் பெயர் சேர்க்கப்படுவதுண்டு.உதயம்


அபுல் ஹஸன் அலீ - ஸித்தி பாத்திமா தம்பதிகளின் மூத்த புதல்வராகத்தான் ஹள்ரத்  ஸையிது அஹ்மதுல் கபீர் ரிபாயி ஆண்டகை அவர்கள் தோன்றினார்கள்அவரிகள் ஹிஜ்ரி 512 வது வரு­ம் ரஜப் மாதம் பிறை 27 திங்கட்கிழமை (கி.பி 1118 அக்டோபர்) அன்று பிறந்தார்கள். ஆண்டகை அவர்கள் பிறக்கு முன்பே அவர்களைப் பற்றிய காட்சிகள் பலவற்றை அக்கால நாதாக்கள் கண்டிருக்கின்றனர்அவற்றில் ஒன்றை மட்டும் இங்கே குறிப்பிடலாம்.ஷைகு மன்ஸுர் அவர்கள் ஒருநாள் நள்ளிரவில் நித்திரை செய்து கொண்டிருந்தார்கள்அவர்கள் இதயம் களங்கமின்றித் தெளிந்திருந்ததுஅதில் அல்லா(ஹ்)வை நிலைநிறுத்தியவர்களாக அவர்கள் துயின்ற சமயம்ரூயா’ என்ற கனவு கண்டார்கள். ( ‘ரூயா’ என்பது மகான்கள் காணும் கனவு வகை; இதில் அவர்களின் பொறி புலன்கள் யாவையும் நேரில் அனுபவிப்பது போலவே அனுபவிக்கும்.)தாம் கண்ட கனவை ஷைகு மன்ஸூர் அவர்களே கூறக்கேட்கலாம்அவர்கள் சொல்கிறார்கள்: “நபி முஹம்மது  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் தங்கள் அஸ்ஹாபிகள் புடை சுழ மஸ்ஜிதுந் நபவியில் அமர்ந்திருக்கிறார்கள்அவர்கள் அருகில் ஒரு சிறுவர் நிற்கிறார். அவர் சிரசில் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  தங்கள் வலக் கையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்அங்கே சர்வ நிசப்தம் நிலவுகிறது. பெருமானார் என்னை விளித்து, ‘‘மன்ஸூரே, இவருடைய மகத்துவத்தை  உமக்குக் கூறுகிறேன்.கேளும்! ஏனைய நபிமார்களைவிட நான் சிறப்புடையவனாய் இருப்பதுபோல், ஒலிமார்கள் யாவரிலும் சிறப்புடையவர் இவர்இவர் என் சத்திய இஸ்லாத்தைச் சேர்ந்த ஷ­ரீஅத்து, தரீகத்து, ஹகீகத்து, மஅரிபத்து என்ற நான்கு சாதனங்களையும் உலகில் அதிகம் விளக்குவார்; அகம், புறம் என்ற இரண்டு வகைப் பொருள்களையும் தேர்ந்து நல்வழி காட்டுவார்இவர் பெயர் அஹ்மதுல் கபீர்; இவர் தந்தைதான் அபுல் ஹஸன்அலி.என் சந்ததியாயும், என் மகிமையில் உரிமையுடைய வராயும், என் அகமியப் பொருளாயும் இவர் இருக்கிறார்இவரைக் கண்ணியப்படுத்துபவர்களை நானும் கண்ணியப் படுத்தி, தீர்ப்பு நாளில் ­ஷிஃபாஅத்துக் கொடுப்பேன்இவரைப் பகைத்தவர்களை நானும் வெறுப்பேன்மன்ஸூரே, இன்னும் நாற்பது நாட்களில் இந்த எனது பரம்பரையினர் ஜனனமாவார் என்ற செய்தியை யாவருக்கும் அறிவிப்பீராக!” ”கனவு முடிந்து விழித்தெழுந்தேன்.சற்று நேரம் பிரமிப்பால் ஒன்றும் தோன்றாதவனாய் அமர்ந்திருந்தேன்பின்னர் இச்சுபச் செய்தியை யாவருக்கும் அறிவித்தேன். பிறக்க விருக்கும் இந்தப் பாலகர் என் மருமகன். ஆகையால் இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை என் சகோதரியிடம் சொல்லச் சென்றேன்அங்கே பல அதிசயச் சம்பவங்கள் நடைபெற்றனஒரு மகத்தான சத்புத்திரரைப் பெற்றெடுக்கப்போகும் என் உடன்பிறந்தாளிடம் நபிபெருமான் தெரிவித்த சுபச் செய்தியை அறிவித்தேன்.” அதுகேட்ட அவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். அதிலிருந்து நாற்பதாவது நாள் ரிபாயி அண்டகை பிறந்தார்கள்அவர்களுக்குப் பெற்றோர்கள் அஹ்மதுல் கபீர் என்று நாமம் சூட்டினர்.