ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை

பேரின்ப சாகரம் !
முத்தரெல்லாம் வாழியயங்கள் மோனமணித் தாயருளும்

 சித்தரெல்லாம் வாழி சுத்த சிவமே நந்தீஸ்வரனே


குணங்குடி மஸ்தான் சாஹிபு ஒலியுல்லாஹ் (ரலி)(முக்தராம் நத்தஹர் ஒலியுடன் சித்தர்கள் சந்திப்பு)மாலை நேரங்களில் இருள் சூழும் முன்னிரவில் தோட்டத்தில் நின்று குந்தவை நாச்சியார் பாடிக் கொண்டிருப்பார்அவரைச் சுற்றி மின்மினிப் பூச்சிகள் அல்லது நெருப்புப் பொறிகள் பறப்பது தோழிகளுக்கு அச்சம் தந்ததுதொடர்ந்து நடந்து வந்த இந்த அருங் காட்சியை இன்று பாபாவிடம் சொல்வது என்று முடிவெடுத்தார்கள்.அது அமாவாசை முன்னிரவு நன்றாக இருள் சூழ்ந்துவிட்டதுவட திசையில் தோன்றி மேலே வந்த மேகங்கள் வானப் பரப்பை முழுவதுமாக மறைத்து விட்டனஆகாசத்தில் ஒரு நட்சத்திரம் கூட கண் சிமிட்டவில்லைஆனால் குந்தவை பாடத் தொடங்கியதும் மரங்களின்மீதிருந்தும், புதர்களின் மீதிருந்தும் பறந்து வந்தது போன்ற மின்மினிப் பூச்சிகள் குந்தவையின் முகத்தையும் உடலையும் சுற்றத் தொடங்கினவியப்போடு ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் பாபாவின் தவச் சாலையினுள் நுழைந்து தங்கள் அச்சத்தை வெயிளிட்டார்கள்.  பாபா தோட்ட வாயிலுக்கு வந்தார்கள். குந்தவை பாடுவதைக் கேட்டார்கள்.

  ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை

  நாடி நாடி நாடி நாடி நாட்களும் கழிந்து போய்

  வாடி வாடி வாடி வாடி மாண்டு போன மாந்தர்கள்

  கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த கோடியே

  வானிலும் மண்ணிலும் வாயுநீர் நெருப்பிலும்

  தானிருந்த சோதியை கண்டுணர்ந்து கொள்ளவே

  லாயிலாஹ இல்லல்லாவை மணக்க ஓதடா

  ஓய்வில்லாமல் ஓதஓத  உன்னகத்தில் ஜோதியே

  எண்ணறிய சித்தர் இமையோர் முதலான

  பண்ணவர்கள் பத்தருள் பாலிப்ப தெந்நாளோ 


- அருள்மிகு தாயுமான சுவாமிகள்குந்தவை நாச்சியார் சித்தர் பாடல்களில் ஒன்றைப் பாடவும், அதனை வளர்த்து வந்த கிளிப் பிள்ளை சொல் பிசகாது திரும்பக் கூறவும் கண்டு பாபா மகிழ்ந்தார்கள்சேடிகளுக்கு புரியாதது பாபாவுக்குப் புரிந்ததுகுந்தவை நாச்சியாரை சுற்றிச் சூழ்ந்து பறந்தவை மின்மினிப் பூச்சிகளுமல்ல, நெருப்புப் பொறிகளுமல்ல.அது தவ முயற்சிகளில் ஈடுபடுவோரின் ஜடலத்தை சூக்குமம் மிகைக்கும் போது ஏற்படும் தெய்வீக ஒளிச்சுடர்.பாபா தப்லே ஆலம் தம் ஆத்தும குமாரத்தி குந்தவையை நோக்கி, மாமாஜிக்னி - ஒளி பொருந்திய முகத்தையுடைய பெண்ணே என்று செல்லமாக அழைத்தார்கள்ஆனால் பாபா தன் மகளை வினவினார்கள்அது என்ன மகளே புதிதாக ஒரு பாடல் பாடுகிறாய்? தந்தையே! இது சித்தர் சிவ வாக்கியர் பாடல் என்றார் குந்தவைஆகிகூ வென்றே உரைத்த அச்சரத்தின் ஆனந்தம்  யோகியோகி என்பர் கோடி உற்றறிந்து கண்டிடார்

  பூகமாய் மனக்குரங்கு பொங்கு மங்கு மிங்குமாய்

  ஏகம்ஏக மாகவே இருப்பர் கோடி கோடியேதந்தையே இந்தப் பாடலைத் தான் நான் என் மனதுக்கு இசைந்தபடி மாற்றிப் பாடியுள்ளேன்என் தோழி பைங்கிளிக்கும் கற்றுத் தந்துள்ளேன்சிரித்துக் கொண்டே தொடர்ந்தார் குந்தவை. ஆம் தந்தையே! இன்று மகா சித்தர் போகரின் தலைமையில் நான்கைந்து சித்தர் பெருமக்கள் தங்களைச் சந்திக்க வந்தார்களே! என்னதான் பேசினீர்கள்? நாள் முழுவதும் அவர்களுக்கு விருந்து தயாரிப்பதிலேயே என் நேரம் கழிந்ததால் உங்களுக்குள் நடந்த வாதப் பிரதிவாதங்களை பேச்சு வார்த்தைகளை என்னால் முழுமையாகக் கவனிக்க முடியவில்லைமாமா ஜிக்னியின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்த பாபா நடந்தவைகளைச் சொல்லிக் காட்டினார்கள்வாதப் பிரதிவாதங்களுக்கு இடமே இருக்கவில்லைதமிழர்களின் ஆதி மதமே சித்தர்களின் மார்க்கமென்பதை விளக்கினார்கள்அப்படி விளக்கும்போது அது அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கத்தைத் தவிர வேறெதுவுமில்லைநீ கூறிய சித்தர் சிவவாக்கியரின் வேறு சில பாடல்களை அவர்கள் கூறக் கேட்டு நானே வியந்து போனேன்போகருடன் வந்திருந்த ஒவ்வொரு சீடருமே அற்புதமான மனிதர்களாகக் காணப்பட்டனர்குறிப்பாக கொங்கணர், கருவூரார், புலிப்பாணி போன்றவர்கள்.தந்தையே போகர் முடிவாக என்ன தங்களிடம் சொன்னார்? நமது இடத்தை விட்டு அவர் வெளியில் போகும்போது பாடிய பாடலை மட்டும் நான் நினைவில் வைத்துள்ளேன்.
பாடினார் குந்தவை நாச்சியார்:


  பாரப்பா நூற்றெட்டு தலமுமாச்சு 

  பலவிதமாய் பெயர் படைத்து நானும் நின்றேன்

  வேரப்பா இன்னமோர் ஆச்சரியங் கேளும்

  விதமான துளுக்கர் மதம் ஒன்றுண்டாகி

  ஆமப்பா அம்மதத்தின் வெளியாய் நின்றேன்

  அநேகவித ரூபமாய் வெளியாய் நின்றேன்

  சாரப்பா பராபரத்தின் மார்க்கமாகும்

  சார்ந்து பாராஏக ரூபம் தானே.

 

தானென்று ஆதியிலே நந்தியானேன்

  தவஞ்செய்து சித்தனயன் மாலுமானேன்

  வேனென்ற சுப்பிரமணிய ரூபமானேன்

  விண்ணவர் சேனாதிபதி யிந்திரனு மானேன்

  நானென்ற கிருஷ்ணன்வடி வாகிநின்றேன்

  நபி ரூபமாயுலக மெங்குமானேன்

  வானென்ற பராபரமாய் நின்று கொண்டேன்

  மாநிலத்தில் போகரென்று வாழ்த்திட்டேனே.ஏன் தந்தையே! இப்பாடலில் துளுக்கர் மதமென்றும் அம்மதத்தில் நிறைந்து நின்றேனென்னும் போகர் எதைச் சொல்கிறார், நபி ரூபமாயுலக மெங்குமானேன் என்றாரே? என்னதான் நடந்தது?ஒன்றுமில்லை மகளேபோகர் என்னிடம் விடைபெறும் போது கலிமாவைச் சொல்லிக் கொடுங்கள் என்றார்நானும் லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி என்று கலிமாவைச் சொன்னேன். இங்கு வந்த சித்தர்கள் அனைவரும் அதனை வாயால் உரைத்தார்கள். அவர்களுக்குள் ஏன் இந்தத் தேட்டம் என்பது எனக்குத் தெரியாது என்றார்கள் பாபாமாமா ஜிக்னியாகிவிட்ட குந்தவை நாச்சியார் மீண்டும் பாடினார். கையமர்ந்திருந்த கிளியும் அப்பாமாலையை பிழையின்றி மிழற்றியது.லாயிலாஹ இல்லல்லாவை வாய்மணக்க ஓதடா

ஓய்வில்லாமல் ஓத ஓத உன்னகத்தில் ஜோதியே.மாமா ஜிக்னி  வினவினார்.

பாபா! போகரின்  குருநாதர் யாராம்?

அகத்தியர் என்றார்கள் மகளே!

அகத்தியர் 15000 ஆண்டுகளுக்கு முந்தியவர் ஆதி சிவனின் சீடர் அல்லவா? இவர் எந்த அகத்தியரைச் சொல்கின்றார் பாபா?தெரியவில்லையே மகளே! அகத்தியர்தான் குரு என்றார். பின்னர் என் அகத்தில் யார் இருக்கின்றார்? நீங்கள்தானே இருக்கின்றீர்கள்? என் அகத்தியர் தாங்களே எனக் கூறிவிட்டுப் போகின்றார் மகளே!குறிப்பு (1) போகர் ஜெனன சாரம் பக்கம் 95 பாடல் 323, 324.

குறிப்பு (2) போகர் என்ற பெயரில் பல சித்தர்கள் இருந்ததாகத் தெரிகிறது - ஆசிரியர்)நன்றி : பேரின்ப சாகரம் (நூல்.)


தொகுப்பு: மு.முஹம்மது அலி ஹக்கிய்யுல் காதிரிய் - திருச்சி.